பறந்து போக வேண்டும்

எந்திரமோ தந்திரமோ எதுவுமில்லாமல்

சுயமாய் சுதந்திரமாய் – எதிர்பாரா ஒருநொடியில்

பிஞ்சு விரல் பிடி நழுவிய பலூனைப் போல

மெல்ல மிதந்து காற்றிலேறி விசை கெட்டு

வாழ்ந்திருந்த கூடும் கிளையும் துறந்து
Read More »

Advertisements

புதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்

கடந்த 1970-களில் தொடங்கி நாளது வரை தமிழ்ச் சூழலில் ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பு தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருந்து வருகிறது. தாய், அன்னா கரீனைனா, தந்தையரும் தனயரும், கசாக்குகள், புத்துயிர்ப்பு, குற்றமும் தண்டனையும், போரும் அமைதியும், முதல் ஆசிரியர், ஜமீலா, வெண்ணிற இரவுகள் எனத் தமிழர்களை ஈர்த்த ரஷ்ய இலக்கியங்களின் வரிசை மிக நீண்டது. அந்த வரிசையில், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின், ‘வீரம் விளைந்தது’ நாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Read More »

லும்பன் வளர்ச்சியும் சமூக விரோத அரசும்: அத்தியாயம்-2

அத்தியாயம்: 2

இந்தியாவில் எவ்வாறு பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை, இங்கிலாந்து காலனியாதிக்க ஆட்சியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு நடப்பட்டதோ, அதுபோலவே நவீன இந்தியாவின் வளர்ச்சியும் இங்கு வெளியில் இருந்து நடவு செய்யப்பட்டதாகும்.

தொழில்நுட்ப அந்நிய சார்பு, கடன் மூலதனத்திற்கும் முதலீடுகளுக்கும் அந்நிய சார்பு என்ற ஏகாதிபத்திய மூலதன சார்புக் கொள்கைகள் இந்திய பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகளாகின. அந்நிய மூலதன முதலீடுகளுக்கான அயலுறவு கொள்கைகள் நூறு கோடி மக்களின் சமூக வாழ்வை தீர்மானமான வகையில் தீர்மானிப்பவை ஆகின.

இந்த இறக்குமதி ஜனநாநாயக முறை மட்டத்திற்கு சமூகத்தை உயர்த்த வேண்டிய முதலாளித்துவ உற்பத்தி முறையோ, அந்நிய மூலதனத்திடம் மண்டியிட்டு, அந்நிய மூலதனத்திற்கு சேவை செய்கிற, தேச நிர்மானத்திற்கு சற்றும் உதவிடாத, மத்திய கால மிச்ச சொச்சங்களை களைந்திடாத ஒட்டுண்ணித்தன உதிரி லும்பன் முதலாளிய வர்க்கமாக சுருங்கியது.

இந்த லும்பன் முதலாளிகளின் முதலீடு நாட்டின் வளர்ச்சியாக, கும்பல் ஆட்சியாளர்களால் புகழப்பட்டது. போலவே, இந்த லும்பன் ஆட்சியாளர்கள், நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதாக லும்பன் முதலாளிகள் புகழாரம் சூட்டினர்.

இந்த லும்பன் முதலாளிகளின் சொத்து மதிப்பு நடப்பாண்டில் இருபது விழுக்காடு அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் வருகின்றன. இந்த லும்பன் ஆட்சியாளர்களின் ஊழல்களும் ஊழல் செய்த பணங்களும், சேர்த்த சொத்துக்களும் பிரமிட் உயரத்தை தாண்டி வளர்ந்து வருகிறது!

முதலாளித்துவ குடியரசு ஜனநாயக மட்டத்திற்கு உயர்ந்திடாத அல்லது சற்றும் பொறுந்திடாத பெரும் மக்கள் கூட்டம், லும்பன் ஆட்சியாளர்கள், லும்பன் முதலாளிகளின் தாளத்திற்கு ஏற்ப நடனமாட பயிற்றுவிக்கப்படுகின்றனர். லும்பன் ஊடகங்கள் இந்த தாளத்தை நேர்த்தியாக்குகின்றன.

இந்த லும்பன்களிடம் சமூகம் சிக்கிவிட்டது. நாம் சிக்கிவிட்டோம் என உணரும் முன்னேரே நாம் வேகமாக சீரழிக்கப்பட்டு விட்டோம். நமது இயற்கை வளங்கள், நிலங்கள் பறிபோகின்றது என உணரும்போது அது பறிபோகியிருந்ததது. நமது அரசியல் உரிமைகள் குறித்து பிரக்ஞை பெற்ற போது, லும்பன் ஆட்சியாளர்கள் தங்களது மத்திய கால காலாட் படைக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி காக்கி சட்டை மாட்டி விட்டு நம்மை குறிபார்க்க திட்டம் கொடுத்துச் சென்றனர்.

இந்த நடவு ஜனநாயக நிறுவனங்கள், அரசியல் சாசன ஆட்சியை முன்மொழிகிறது. எதார்த்தத்தில் அது சர்வாதிகார, கும்பல் ஆட்சியை நடைமுறைப்படுத்துகிறது. இந்த நடவுப் பொருளாதார வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியாக காட்டப்படுகிறது. ஆனால் எதார்த்தத்தில் அது சிறு குழுமங்களின் வளர்ச்சியாக லும்பன் வளர்ச்சியாக உள்ளது.

அந்நிய மூலதனம் மற்றும் இந்திய லும்பன் முதலாளிகளின் மூலதன முதலீடுகளுக்கான லும்பன் வளர்ச்சித் திட்டங்களின் ஒன்றான பாரத் மாலா நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நாளொன்று 45 கி.மீட்டர் சாலை அமைக்கவேண்டும் என இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில்தான் நாளொன்றுக்கு 3000 குழந்தைகள் பசியாலும் நோயாலும் மடிகின்றார்கள். நாளொன்றிற்கு 190 மில்லியன் மக்கள் பசியால் வாடுகின்றார்கள்

(https://www.indiafoodbanking.org/hunger)

அருண் நெடுஞ்செழியன்
ஜூன் 22, 2018