ஜனநாயகம் தழைக்க

சர்வதேச வாக்காளர் தினம் ஜனவரி 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நம் தேசத்தில் வாக்களிக்க தகுதியான வயது 18. இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக ஆராதிக்கப்படும் இளைஞர்களின் 20 சதவீதத்தினருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை. 18 வயதில் கல்லூரிப் படிப்பைத் தொடங்கும் மாணவ மாணவிகள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற கல்லூரிகளே ஏன் முன்வந்து உதவக்கூடாது? இந்த முயற்சிக்கான ஆணையையும், வழிமுறைகளையும் ஏன் அரசாங்கம் வெளியிடக்கூடாது? தேர்தல் பணிகளுக்காக கல்லூரிப் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தேர்தல் ஆணையம் , கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையை வழங்கவும் கல்லூரி ஆசிரியர்களையும், பணியாளர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடுத்தர் வயதினரில் பெரும்பாலும் ஓட்டுப் போட செல்வதில்லை. இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்கினால் வாக்கு சதவீதமும் உயரும். ஜனநாயகமும் தழைக்கும்.

– S. இலக்கியராஜா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s