வர்மக்கலை

யோகக்கலை, ஞானநிலை, கவநிலை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டவர்கள் சித்தர்கள். இந்த மூன்றும் இணைந்த நிலையில் தான் அவர்களால் வர்மங்களில் உள்ள உயிர்நிலை ஓட்டத்தை கண்டுபிடிக்க முடிந்தது. அதை வைத்து சிகிச்சையளித்தனர். அதவாது உடம்பைத் தொட்டுப் பார்த்தே சிகிச்சையளிக்கும் முறையை உருவாக்கினர். அது தான் “வர்மக்கலை.”

மனித உடலில் உள்ள உயிர்நிலை ஓட்டங்கள் சந்திக்கும் பாகங்களில் எண்ணெய் தேய்த்துத் தடவிக் கொடுத்தும், நீவிவிட்டும், நரம்புகள், எலும்புகள் ஆகியவற்றை அழுத்தி, சீரான ரத்தம் ஓட்டம நடைபெறச் செய்வதன் மூலம் நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. உடல் சமநிலைப்படுத்தப்பட்டு நரம்பு நாளங்கள் செம்மையாக செயல்பட வைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பாகங்களின் மீது பச்சிலை மருந்துகளைப் பூசுதல், தடவுதல், ஒத்தடம் கொடுத்தல், பற்றுப் போடுதல் ஆகியவையும் கையாளப்படுகின்றன.

வர்ம சிகிச்சை முறை என்பது சிலம்பாட்டம், களரி, யோகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. சிலம்பாட்டமும், களரியும் போர்க்கலைகளாகும். உடலிலுள்ள குறிப்பிட்ட வர்ம ஸ்தானங்களைக் குறி வைத்துத் தாக்குவதன் மூலம் எதிரியை செயலிழக்க வைக்கவும் தேவைப்பட்டால் எதிரியை ஒழித்துக் கட்டவும் பயன்படும். இப்போர்க்கலைகள் பெரும்பாலும் தற்காப்புக்காகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தன.

உடலிலுள்ள வர்ம ஸ்தானங்களைப் பற்றிய அறிவு நல்லதிற்கும் பயன்படலாம். கெட்டதிற்கும் பயன்படலாம். எனவே வர்ம சிகிச்சை முறை நமது முன்னோர்களால் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். “பொன்னூ சித் திறவு கோல்”, “இலாட நட்சத்திரம்”, “வர்ம தண்டூசி” என்ற நூல்கள் வர்மக்கலையில் முக்கியமான நூல்களாக விளங்குகின்றன. வெளிநாட்டவர் இந்த நூல்களைத் தமது நாட்டிற்கு எடுத்து சென்று “அக்குபஞ்சர்”, “அக்குபிரஷர்” போன்ற சிகிச்சை முறைகளை வளர்த்தனர். ஆனால் நம் நாட்டிலோ, ஆங்கிலேயர் ஆட்சி காரணமாக இத்தகைய மருத்துவ கலைகள் வளராமல் தடுக்கப்பட்டன.

ஆயினும், திருவிதாங்கூர் மகராஜா ஆட்சியில் கீழிருந்த கேரள சமஸ்தானத்தில் வர்மக்கலை வளர்க்கப்பட்டு வந்தது. அந்த சமஸ்தானத்தில் கன்னியாக்குமரி இணைக்கப்பட்டிந்ததால் அங்கும் இக்கலை சிறப்பாக வளர்ந்து வந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s