டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி

யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர்.வி.கிருஷ்ணமூர்த்தி (1923-2002)

தமிழகத்தின்  முக்கியமான காட்டியல் நிபுணர்களில் ஒருவர்.

யானைகளுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் நினைவாக அவரைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று டாப்ஸ்லிப்பில் அவர் இருந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

கிருஷ்ணமூர்த்தி தமிழக வனத்துறையில் பணியாற்றிய விலங்கியல் மருத்துவர். அவரது மேலாண்மையில் முதுமலை தெப்பக்காடு யானை முகாம் உலகப் புகழ் பெற்றது. தமிழகத்தில் உள்ள எல்லா யானை காப்பகங்களுக்கும் அவர் மருத்துவக் கண்காணிப்பாளராக இருந்தார். முகாம்களில் வாழ்ந்த அனைத்து யானைகளும் அவரை நன்கு அறிந்திருந்தன.

டாக்டர்.கே என்று அழைக்கப்பட்ட வி.கிருஷ்ணமூர்த்தி உலகப் புகழ் பெற்ற அறிவியதழ்களில் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். International Union for the conservation of Natural Resources, Asian Elephant Specialist Group போன்ற பல சர்வதேச ஆய்வுக் குழுக்களில் அவர் உறுப்பினராக இருந்தார். வனப்பேணுனர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேனுமேனன் ஏலிஸ் விருது  2000ம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. வனவிலங்குகளின் சடலங்கள் அனைத்தும் சவப்பரிசோதனை செய்யப்பட்டாக வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தியவர். உலகிலேயே அதிக யானைகளுக்கு சவப்பரிசோதனை செய்தவர் அவரே. அதிகமான யானைகளுக்கு பிரசவம் பார்த்தவரும் இவரே. யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு விழச்செய்து அவற்றை சிகிச்சைக்குள்ளாக்குவதில் அவர் நிபுணர். பலநூறு அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். வளர்ப்பு யானைகளின் பராமரிப்பு குறித்த அவரது கையேடு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. யானைகளின் எடை குறிப்பிட்ட கால அளவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். தமிழக கோவில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டம் அவர் முன்வைத்து முன்னின்று நடத்தியதேயாகும். பொதுவாக யானையைப் பயன்மிருகமாக வளர்ப்பதையும், கோயில்களில் அலங்காரமாக வளர்ப்பதையும் நிறுத்தவேண்டும் என கோரி வந்தார்.  கிருஷ்ணமூர்த்தி 2002 டிசம்பர் 9ம் தேதி தன் 73வது வயதில் மரணமடைந்தார்.

–    எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அறம் நூலிலுருந்து.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s