மூன்றாம் பாலினம்

அரவாணிகள் மரபுப்படி தங்கள் கடவுளாக போத்ராஜ் மாதாவை வணங்குகிறார்கள். இந்த ஆலயம் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள போத்ராஜு என்ற கிராமத்தில் உள்ளது. அந்த அம்மனை அந்தப் பகுதி மக்களும் தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். குஜராத் மாநிலத்தில் அரவாணிகளை “மாத்தாஜி” எனக் குறிப்பிட்டு, அவர்கள் கால்களைத் தொட்டு வணங்குகிறார்கள். தமிழ் நாட்டில், திண்டுக்கலின் அருகில் சிறிய போத்ராஜ் மாதா ஆலயம் இருக்கிறது. அகமதாபாத் கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வந்து ஒரு திருநங்கை இந்த ஆலயத்தை எழுப்பி இருக்கிறார்.

தமிழ்நாட்டு கிராமியக்கலைகளில் திருநங்கைகள் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கோவில் திருவிழாக்கள், வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள், கட்சி மாநாடுகள், ஊர்வலங்களில் இவர்களின் கலை நடனங்கள் இடம் பெறுகின்றன. நடனங்களைத் தங்களைத் தத்தெடுக்கும் தாய் அரவாணிகளிடம் இருந்து இளம் அரவாணிகள் கற்றுக் கொள்கிறார்கள். முதலில் எடுபிடிகளாக வைத்தும், பின்பு நடனங்களைக் காண அழைத்து சென்றும், ஒப்பனைக்கு உதவ வைத்தும் படிப்படியாக அவர்களுக்கு நடன ஆர்வத்தை உருவாக்கிவிட்டு பின்பு நடனத்தைக் கற்றுத் தருகிறார்கள். தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், கரூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் திருநங்கைகள் சமையல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். குழுவாக இவர்கள் விசேஷ வீடுகள் மற்றும் கல்யாண மண்டபங்களில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் பெண்களை விட சுவையாக உணவுகளைத் தயாரிப்பதால் இவர்களின் சமையலுக்கு தனிமவுசு இருக்கிறது. ஆர்டர் எடுத்து உணவு சமைத்துக் கொடுக்கும் பணியிலும் திருநங்கைகள் ஈடுபட்டிருக்கிறார்கள், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சென்று பிரியாணி மாஸ்டராக வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

Advertisements

One thought on “மூன்றாம் பாலினம்

  1. அரவானிகளின் சமூக வரைவியல் என்ற ஆய்வு நூலை பிரியா பாபு என்ற அரவானியே எழுதியுள்ளார். தென்திசை பதிப்பகம், 3/5 சுப்பிரமணிய நகர், முதல் தெரு, கோடம்பாக்கம், சென்னை- 600 024 -அந்த நூலை வெளியிட்டுள்ளது. நீண்டநாட்களாக எமது வீட்டு நூலகத்திலிருந்த இதனைப் புரட்டியபோதுதான். ”தோற்றத் தொன்மம்”, என்னும் தலைப்பில் வாய் மொழி வரலாறாக வழங்கப்பட்டு வரும் கதை ஒன்றும், அதற்கானதொரு கோவில் அகமதாபாத் அருகில் உள்ள போத்ராஜு என்னும் சிறு கிராமத்தில் அமைந்துள்ள தகவலும் கிடைத்தது. மேலும் அங்கிருந்து சிறிது மண்ணை எடுத்துக்கொண்டு வந்து திருமதி சேவியர் அம்மாள் என்ற அரவானி, திண்டுக்கல் மாவட்டத்தின் அருகில் சிறிய போத்ராஜு கோவிலை அமைத்திட்ட செய்தியும் கிடைத்தது. திண்டுக்கல்லில் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும், கோவிலின் படத்தையும், தங்கள் கட்டுரையில் விடுபட்டுப்போன செய்திகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும், தங்கள் வலைப்பூவில் இடம்பெறச் செய்க. நினைவில் வாழும் மக்கள் எழுத்தாளர் சு.சமுத்திரம் இவர்களைப்பற்றி ஓர் நாவல் எழுதியுள்ளதும் நினைவுக்கு வருகின்றது. முழுமையானதொரு கட்டுரையை தமிழ் விக்கிபீடியாவில் இடம்பெறச் செய்வதே நோக்கம். தங்கள் கட்டுரை எமது டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும். நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s