மருதநாயகம்

வரலாற்றுப் பக்கங்களில் இருந்து கிட்டத்திட்ட மறைந்து விட்ட ஒரு வீர காவியம் கான்சாகிப்புடையது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து மதுரையின் மன்னனாக உயர்ந்தவர் கான் சாகிப். ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்த கான் சாகிப் சிறு வயதிலேயே பிழைக்கப் போனது பாண்டிச்சேரிக்கு. முஸ்லீம் பெரியவர் ஒருவரின் பழக்கத்தால் முஸ்லீம் மதத்துக்கு மாறி கான்சாகிப் எனப் பெயர் மாற்றிக் கொண்டார். சாதாரணக் கூலியாக இருந்த கான் சாகிப் தஞ்சைக்கு சென்று படை வீரனாக சேர்ந்தார். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்ச், போர்ச்சுகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். பின் நெல்லூருக்கு மாற்றப்பட்டார். அங்கு தண்டல்காரனாக, ஹவில்தரராக, சுபேதார் எனப் பதவி உயர்ந்தார். அவரின் நிர்வாகத் திறமையையும், போர்க்குணத்தையும் கண்டு வியந்த கிழக்கிந்திய கம்பெனி கான்சாகிப்பை மதுரை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையைக் கொடுத்தது. அந்த சமயத்தில் திருநெல்வேலி பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையைக் கொடுத்தது. அந்த சமயத்தில் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள நெல்கட்டும் செவலில் ஆட்சி புரிந்த பூலித்தேவனை பிரிட்டிஷாரால் அடக்க முடியவில்லை. அதனால் கான்சாகிப்பை அனுப்பினார்கள். பிரிட்டிஷாருக்கு எதிராக போராட்டம் நடத்திய முதல் பாளையக்காரன் பூலித்தேவன். அத்தமிழனை அடக்க ஒரு தமிழனான கான்சாகிப்பையே அனுப்பியது பிரிட்டிஷ் அரசு. முதலில் தோற்றாலும் நவீன ஆயுதங்களுடன் விடாமல் போராடிய பிறகு கான்சாகிப்புக்கு வெற்றிக் கிட்டியது. பூலித்தேவன் தலைமறைவானான். அவனது கோட்டையைத் தரைமட்டமாக்கினான் கான்சாகிப்.

மதுரையில் ஏரிகளை பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான், கான்சாகிப். நிதித்துறை மற்றும் வணிகர்களின் பாதுகாப்பை மேம்படுத்தினான். தன்னை மதுரையின் நாயகமாக பிரகடனம் செய்துக் கொண்டான். அதுவே மருவி மருதநாயகம் என்றானது. கான்சாகிப் மூலமாக பிரிட்டிஷாருக்கு வருவாய் பெருகினாலும் அவர் வலுவாவதை அவர்கள் விரும்பவில்லை. கான்சாகிப் பிரிட்டிஷாரைப் பற்றி மக்களிடம் எதிர்மறைக் கருத்துகளை தூண்டுகிறார் எனத் தெற்கு சீமையில் இருந்த பல கிழக்கிந்திய வணிகர்கள் புகர் தெரிவித்தனர். கான்சாகிப்பை கைது செய்ய படையை அனுப்பினர் பிரிட்டிஷார். ஆனால் கான் சாகிப் படையிடம் தோல்வி அடைந்தது. தொழிகையில் கான்சாகி ஈடுபட்டிருந்த போது தந்திரமாக கைது செய்து இழுத்துப் போனார்கள். மதுரையில் உள்ள சம்மட்டிபுரத்தில் தூக்கிலிட்டனர். இறந்த உடலை வெட்டி தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும் அனுப்பி வைத்தனர். மதரை சம்மட்டிபுரத்தில் எஞ்சி இருந்த உடலை அடக்கம் செய்தனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு கான் சாகிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தர்கா ஒன்று கட்டப்பட்டது. இந்த தர்கா இன்றும் இயங்கி வருகிறது. தொழுகைகளும் நடைபெற்று வருகிறது. கான்சாகிப்பை பற்றி மேலும் விரிவாக அறிந்துக் கொள்ள எஸ்.ஸி.ஹில் எழுதிய “Rebel Commendant Yusuf Khan” என்ற நூலைப் படிக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s