அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது எதற்கு?

அம்மி என்பது சமையல் செய்யப் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு கருக்கல்லினால் ஆன கருவியாகும். அம்மி என்பது மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். திருமணமான பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், கணவன், மாமியார், மாமனார், நாத்தனார் போன்றோர்களால் மனச்சங்கடங்கள் வந்தாலும், மனஉறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிக்கும் பழக்கம் உள்ளது.

ஏழு ரிஷிகளும் வானத்தில் நட்சத்திரத்தில் ஒளி வீசுகிறார்கள். ஆறாவதாக இருப்பவர் வசிஷ்டர். இவருடைய மனைவி அருந்ததி. இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்தரிஷி மண்டலத்தை காணலாம். ஆறாவது நட்சத்திரமாக ஒளிவீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தைக் காணலாம்.

மற்ற ரிஷிகள் எல்லோரும் ரம்பா, ஊர்வசி, மேனகை இவர்களிடம் சபலப்பட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய மனைவிகளும் இந்திரன் மீது சபலப்பட்டவர்கள். ஆனால், வசிஷ்டரும், மனைவியும் மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் ஒன்றாக வாழ்ந்தவர்கள்.

அருந்ததி நட்சத்திரம் வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகில் இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது. அதேபோல், மணமகளும் அருந்ததியைப் போல கண்ணியமாகவும், கட்டுப்பாடுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.

–    ஜோதிடர் சுப்பிரமணியன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s