இளம் விவசாயி

இந்தியா ஒரு விவசாய நாடு. ஆனால் படித்தவர்கள் விவசாயம் பார்க்க வருவார்களா? இன்றைய இளைஞர்கள் ஏ.சி.அறையில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை பார்ப்பதைதான் விரும்புகிறார்கள். “ஆர்கானிக் ஃபார்மிங், வாட்ஸ் தட்?” என்று கேள்வி கேட்பவர்களே அதிகம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் பிச்சினிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஏங்கல்ஸ் ராஜா. 2004ல் எம்.பி.ஏ படிப்பை முடித்தாலும் அவருக்கு விவசாயம் செய்வதில் தான் ஆர்வம இருந்தது. ஆனால் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிய படிப்பு படித்தவர்கள் என் இப்படி சேற்றில் கால வைக்க வேண்டும் என பலரும் கேட்டார்கள்.

“விவசாயம் தான் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தாலும், எனக்கு நவீன வேளாண்மையிலேயே ஆர்வம் இருந்தது. எங்க அப்பாவோ இயற்கை விவசாயத்தை சிறப்பா செயஞ்சிட்டு இருந்த முன்னோடி விவசாயி.

ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. அதனால் வேதி உரங்களை வைத்து விவசாயம் பார்த்து கொண்டு இருந்தேன். இதனால் எனக்கும் எங்கள் அப்பாவிற்கும் அடிக்கடி சண்டை வரும்.” – என்கிறார் இந்த இளைஞர்.

உலகமே வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் இயற்கையைப் பயன்படுத்துவது மகசூலைக் குறைத்தே கொடுக்கும்; இயற்கை முறைகள் பத்தாம் பசலித்தனமானவை, வேலைக்கு ஆகாதவை என்ற கருத்தில் பிடிவாதமாக இருந்த ஏங்கல்ஸ் ராஜா இயற்கை விவசாயத்தை பலமுறை கிண்டல் செய்திருக்கிறார்.

2005ல் ஆண்டில் உலகையே புரட்டிப்போட்ட ஆழிப்பேரலை ஏங்கல்ஸ் ராஜாவின் வாழ்கையையும் புரட்டிப்போட்டது. எதிர்மறையாக இல்லை; நேர்மறையாக. நாகப்பட்டினத்தின் ஆழிப்பேரலையில் கடல்நீர் புகுந்த விலை நிலங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியாது என்று கூறி வேளாண் கல்லூரி கைவிரித்திருந்தது.

“இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் அக்கருத்தை மூன்றே மாதங்களில் பொய்யாக்கி காட்டினார்கள். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வளப்படுத்த நமது பாரம்பரிய விவசாயிகள் பலரும் களம் இறங்கினர். நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள நிலங்களை வளப்படுத்துவதற்காக இயற்கை விவசாயி நம்மாழ்வார் வந்தார். அவரிடம் கொண்டு போய் ஒப்படைத்தார் அப்பா. பாழ்பட்ட நிலத்தில் வழக்கமாக கிடைக்கும் மகசூலை நம்மாழ்வார் எடுத்துக்காட்டினார். இந்த பரிசோதனை முயற்சியில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறார் ஏங்கல்ஸ்.

“நம்மாழ்வாரை நிறைய விஷயங்கள் கற்று கொண்டேன். எடுத்துக்காட்டுக்கு மண்புழு உரம் தயாரிப்பவர்கள் பெரிய பந்தல் போட்டு பந்தோபஸ்தாக பண்ணுவார்கள். ஆனால், தென்னை மர நிழலிலேயே எளிமையாக மண்புழு உரம் தயாரிக்க முடியும். அதற்கு பிறகுதான் இயற்கை விவசாயத்தின் அருமை புரிந்தது. பிறகு நம்மாழ்வார் கூடவே தமிழகம் முழுக்க போக ஆரம்பித்தேன். இன்றைக்கு இயற்கை விவசாயத்தை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன்.” என்கிறார் ஏங்கல்ஸ்.

இன்றைக்கு 5000 விவசாயிகளை வேதி உரங்களில் இருந்து மீட்டெடுத்து இயற்கை வேளாண்மையில் பயற்சி அளித்துள்ளார் ஏங்கல்ஸ். இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவில் இளைஞர்களை ஒருங்கிணைக்கிறார் இவர்.

“இன்றைக்கு இளம் சமுதாயத்தினரிடம் விவசாயம் குறித்த தெளிவான பார்வை இல்லை. சர்வதேச நிறுவனங்களின் அதீத விளம்பரங்களை நம்பும் இவர்கள் அனுபவ பாடத்தையும், நம்பகத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்ட இயற்கை வேளாண்மையை நம்புவது இல்லை. வேதி உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து ஆபத்திலிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும். விளை உயர்ந்த வேதி உரங்களைப் பயன்படுத்தி அடிமேல் அடிவாங்கி சரிவை சந்தித்து வரும் நவீன வேளாண்மையில் முதலீட்டைக் குறைக்க இயற்கை வேளாண் முறையே சிறந்தது. இது தொடர்பான விழிப்புணர்வு அவசியம்.” என்கிறார் ஏங்கல்ஸ்.

நம் பாரம்பரிய விவசாய வரலாற்றில் இடையில் புகுத்தப்பட்ட வேதி உரங்களையும், வளம் குன்ற வைக்கும் நவீன வேளாண் முறைகளையும் முற்றிலும் களைய வேண்டும் என்பது இவரது பெருங்கனவு. இதற்காக மண்வெட்டி, கலப்பை சகிதமாக வளம் வரும் இந்த எம்.பி.ஏ.பட்டதாரி இயற்கை வேளாண்மையைப் பிரபலப்படுத்துவதிலும், பயிற்சி அளிப்பதிலும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு முன்னுதாரணமாக மாறி இருக்கிறார்.

–    பிரசாத் ராஜ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s