விஜய் பிரகாஷ் – ஒரு இசை அனுபவம்.

நான் கடவுள் படத்தில் வரும் “ஓம் சிவோஹம்,” விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் “ஹோசனா”, எந்திரன் படத்தில் வரும் “காதல் அணுக்கள்”  –  இந்த மூன்று பாடல்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இவை அனைத்தும் விஜய் பிரகாஷ் பாடிய பாடல்கள்.

விஜய் பிரகாஷின் குரல் பிடிக்கும், பாடுவது பிடிக்கும் என்றால் அது மிகச்சாதாரணமான ஒரு சம்பிரதாய வார்த்தையாக இருக்கும். ஜீ.டி.வியில் சூப்பர் சிங்கர் போன்ற ஒரு நிகழ்ச்சியிலிருந்தே (ச ரீ க ம) இவரது பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இவர் பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞர் என்பது மட்டுமல்லாமல் எனக்கு மிகப்பிடித்தமான பின்னணி பாடகர் சுரேஷ் வாட்கரின் மாணவன்.

இப்பொழுது தமிழிலும், தெலுங்கிலும் நிறையப்பாடல்களை பாடுகிறார். இவரது தமிழ் உச்சரிப்பும் வெகு அருமையாக இருக்கிறது. சமீபத்தில் கேட்ட இவரது தி பெஸ்ட் பாடல் “கள்ளிக்காட்டில் பிறந்தாயே” தென்மேற்கு படத்தில் வைரமுத்து வரிகளுக்காக தேசிய விருது பெற்ற பாடல்.

அந்த பாடல் படத்தில் இரண்டு முறை வருகிறது. ஒன்று படம் ஆரம்பிக்கும்போது டைட்டிலில் மற்றொன்று படம் முடிந்த பின்னர் வரும் எண்ட்டைட்டிலில். பாடலோடு ஆரம்பித்து பாடலோடு முடியும் படம் “முதல் மரியாதை” படத்துக்கு பிறகு இந்தப்படம் தான் என்பது வைரமுத்து பேட்டியில் இருந்து தெரிந்து கொண்டேன்.

படம் ஆரம்பிக்கும் டைட்டிலில் பாடியிருப்பது விஜய் பிரகாஷ். இறுதியில் பாடியிருப்பது உன்னிமேனன். இதில் உன்னிமேனன் அவர்களுடைய வெர்ஷன் அந்த தாய் இறந்தபின் வரும் பாடல். எனவே சோகம் வழியும் பாவத்துடன் பாடியிருப்பார். அது கிளாஸ். ஆனால் விஜயினுடைய வெர்ஷன் இருக்கிறதே. அது கிளாசிக்.

“கள்ளிக்காட்டில் பிறந்த தாயே”- இப்பாடலில் ஒலிக்கும் விஜய் பிரகாஷின் குரல் மிக அரிதான ஒன்று. ஆழமான அதே சமயம் அடிக்குரலில் உச்சஸ்தாயில் பிசிறின்றி வரும் இவருடைய குரல் உண்மையிலேயே அசாத்தியமான ஒன்று. ஹேட்ஸ் ஆப் விஜய் பிரகாஷ். இந்தப் பாடலைப் பொறுத்தவரையில் விஜய் பிரகாஷும் சரி, இசையமைப்பாளர் ரகுநந்தனும் சரி. இருவரும் சேர்ந்து ரசிகர்களை ஒரு விவரிக்க முடியாத அனுபவத்தைத் தந்திருக்கிறார்கள். அதுவும் பாடலில் இடையில் வரும் “பாவமப்பா, தியாகமப்பா..” என்ற இந்த வரிகளுக்கு பிறகு ஒரு சில வினாடிகளுக்கே வரும் சிறு ஆலாப் ஒன்று இருக்கிறது. அதைக்கேளுங்கள். அதைப் பாடியிருக்கும் விதமும் வெகு சுகம். அங்கு பாடகரும் இசையமைப்பாளரும் சேர்ந்து நம்மை வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு அனுபவத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.

“யுவராஜ்” இந்தி படத்தில் வரும் ‘மன்மோகினி மோரே’ பாடல், இதுவும் கேளுங்கள், அனுபவியுங்கள்.

மலையாளப் படமான “நீலத்தாமரா”வில் வரும் “பகலுன்ன மான்ய வீதியிலே” – இதுவும் அவர் பாடிய பாடல்களில் சிறந்தது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வரும் உலகப்புகழ் பெற்ற பாடலான “ஜெய்ஹோ” பாடல் இவரும் இன்னும் வேறு பாடகர்களும் சேர்ந்து பாடியது தான்.

உச்சஸ்தாயில் பாடப்பட்ட பாடல்களைக் கேட்கும் போதெல்லாம், மூச்சு விடும் ஒலியைக் குறைத்திருப்பார்கள். கட பண்ணி ரெக்கார்ட் செய்திருப்பார்கள். ஆனால் இப்பாடல்களை பாடகர்கள் நேரடியாக பாடிக்கேட்கும் போது புல்லரித்து போவது தான் நிஜம்.

விஜய்பிரகாஷின் பிரத்யேக வலைத்தளம் www.vijay-prakash.com. இதில் இவர் “சா ரீ க ம” நிகழ்ச்சியில் பாடிய அருமையான பாடல்களின் தொகுப்பும் இருக்கிறது.

“கொண்டாடப்பட வேண்டியவர்கள் கலைஞர்கள்.”

–    முரளிகுமார் பத்மநாபன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s