நீர் மேலாண்மை

நீரின்றி அமையாது உலகு. உலக உயிரினங்கள் அனைத்துக்கும் வாழ்வாதாராமாக இருப்பது நீர்தான். நமது தமிழகம் இரண்டு வழிகளில் நீர் பெறும் நிலையில் உள்ளது. ஒன்று பருவ மழை மூலம் பெறப்படும் நீர். இரண்டாவது, அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி தமிழகத்தின் ஊடே பாய்ந்து கடலில் கலக்கும் ஆறுகளின் வழி பெறப்படும் நீர்.

இந்த ஆற்றுநீரைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரைத் தராமல், அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து தமிழகத்தை தங்கள் வடிகால் பகுதியாகவே பயன்படுத்தி வருவதால் ஆற்றுநீர் என்பது நிச்சயமற்றதாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் தமிழகத்தைப் பாதுகாக்கிற ரட்சகனாக இருப்பது பருவமழை மட்டுமே. ஆனால் இப்பருவ மழையும் பருவத்திற்கு ஏற்றார்போல சரியான காலத்தில் பெய்வதில்லை. இவை பெரும்பாலும் பருவம் தப்பியே பெய்கிறது. தமிழகத்தின் வடகிழக்கு பருவ மழை சரியான அளவில் பெய்தாலும், தென்மேற்கு பருவமழை சராசரி 30 விழுக்காட்டிற்கும் குறைவாகவே பெய்கிறது. இக்காரணங்களாலேயே தமிழகம் நீர்த்தட்டுப்பாட்டுக்குள்ளாகி வருகிறது. எனவே, இந்த நிலை நீடித்தால் இன்னும் 25 ஆண்டுகளுக்குள் நிலைமை மோசமாகி மக்கள் வாழ்வதற்கே கூட நீர் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு எனவும் எச்சரிக்கின்றனர் நீரியல் நிபுணர்கள்.

இந்நிலையில் தமிழகத்தின் நீர் ஆதாரங்களையும், நீர்த் தேவைகளையும் நாம் எப்படி பாதுகாக்கப் போகிறோம் என்பதே தற்போது நம்முன் உள்ள கேள்வி.

தண்ணீர் பிரச்சனையில் இருந்து தமிழகம் மீள்வதற்கு யோசனைகள் சில.

 

  1. 2003ம் ஆண்டு மழைநீர் சேமிப்புத்திட்டத்தை கறாராக செயல்படுத்தியதன் பலனாக 2004ம் ஆண்டு பரவலாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இதை வைத்து மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற சித்தனையை மக்கள் மத்தியில் மேலும் விரிவாக்க வேண்டும். தமிழக அரசு மீண்டும் மழைநேர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த ஊக்கமளிக்க வேண்டும். இதற்கு வேண்டிய வல்லுநர்களின் ஆலோசனைகனை மற்றும் கருவிக்களையும் இலவசமாக வழங்க வேண்டும்.
  2. ஏரி,குளம்,கண்மாய்,ஆற்றுப்பாசனம் போன்ற நீராதாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை முறையாக பராமரித்துப் பாதுகாக்க அந்தந்த பகுதி மக்களை குழுக்களாக அமைத்து பயனடைய செய்ய வேண்டும்.
  3. பொது நீராதாரங்களின் மேலாண்மையை அந்தந்த பகுதி பாசனதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் அரசு நேரடியாக தலையிடாமல், பக்கபலமாயிருந்து உதவி செய்ய வேண்டும்.
  4. ஆறு மற்றும் ஓடைகளில் மணல் எடுப்பதற்கு வரைமுறைகள் வகுக்கப்படவேண்டும்.
  5. நீராதாரங்களில் கழிவுகள் கலப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
  6. ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பது தொடர்பாக சில வரைமுறைகளை உருவாக்க வேண்டும். தேவையை ஒட்டி ஒவ்வொரு ஆழ்குழாய் கிணற்றுக்கும் இடையே இருக்க வேண்டிய இடைவெளி, ஆழம் போன்ற விதிமுறைகளை கட்டாயபடுத்த வேண்டும்.
  7. வளர்ச்சியடைந்த நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலுருந்து தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
  8. தண்ணீர் பயன்படுத்தும் முறையில் திட்டவட்டமான முன்னுரிமை இருக்க வேண்டும். குடிநீருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அடுத்து, விவசாயம். அதிலும் சிறு, நடுத்தர விவசாயிகள் பயன்படுத்த உறுதி செய்ய வேண்டும். இதற்கடுத்து கால்நடைகள், மிருகங்கள், வனவிலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களின் தண்ணீர் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்கு அடுத்தநிலையில் மட்டுமே தொழிற்சாலைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
  9. குறுகிய காலத்தில் ஒரே அடியாக மழை பெய்து விட்டு போகிறது. ஆண்டுதோறும் பெய்யும் மழையால் ஆயிரக்கணக்கான டி.எம்.ஸி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. எனவே, ஆறு, கால்வாய் மற்றும் ஓடைகள் வழியாக செல்லும் வெள்ள நீரினைத் தடுத்து நிறுத்தி ஆங்காங்கே தடுப்பாணைகள் கட்டி தேக்கி வைக்க வேண்டும். இந்நடவடிக்கையால் அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்போது, உழவுத்தொழில் வளர்ச்சியடைந்ததோடு அல்லாமல் குடிநீர் பிரச்சனையும் தீர்க்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கையால் மெகா கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு செலவு செய்யும் நிதியினை வேறு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம்.

–    பிரசாத் ராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s