வெனிஸ் நகரம்

VENIS001-5bf39

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் வெனிஸ். வெனிஸ் படகு போக்குவரத்திற்கும், அழகிய தேவாலயங்களுக்கும் பெயர் பெற்ற நகரம். அட்ரியாடிக் கடல் பகுதியில் உள்ள வெனிஷியன் லகூன் என்னும் இடத்தில் வெனிஸ் அமைந்துள்ளது. வெனிஸ் நகரின் குறுக்கே நிறைய தண்ணீர் ஓடும் கால்வாய்கள் உள்ளன. அந்த நகரத்தின் இரண்டு பகுதிகளையும் இணைக்க அவற்றின் குறுக்கே அமைந்துள்ள வாய்க்கால்கள் மீது பாலங்கள் போடப்பட்டுள்ளன.

வெனிஸ் நகரத்தின் கட்டிடங்கள் பெரும்பாலும் மரக்கட்டைகள் மூலம் கட்டப்பட்டவை. இவை நீண்ட நாட்கள் நீரில் மூழ்கி இருந்தாலும் வலிமையாக இருக்கும் வல்லமை படைத்தவை. அதனால் தான் நூற்றாண்டுகள் தாண்டியும் இந்நகரின் கட்டிடங்கள் அனைத்தும் மிக உறுதியாக உள்ளன.

ஜெர்மனி மலை ஜாதியினரின் படையெடுப்பால் அவதிப்பட்ட படுவா, அக்விலியா, ட்ரைவிஸ்கோ, அல்டினோ மற்றும் கங்கோர்டியா போன்ற ரோமானியர்கள் “வெனிஸிற்கு வந்து ஆதியில் தங்கினர் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

12ம் நூற்றாண்டில் வெனிஸ் நகரம் மிக முக்கியமான வியாபார நகரமாக விளங்கியது. அட்ரியாடிக் கடல் பகுதியில் அது முக்கியமான வியாபார நகரமாக விளங்கியது. பைசண்டையின் ராஜ்ஜியம் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஏற்றுமதியான பொருட்கள் இங்கு வரத் தொடங்கின.

13ம் நூற்றாண்டில் இத்தாலியின் மிகப்பெரிய பணக்கார நகரமாக விளங்கிய வெனிஸ் நகரை மெத்தப்படித்த மக்கள் நிர்வகித்தனர். 300 உறுப்பினர்களை கொண்ட பொது நிர்வாக சபையை அமைத்து, தலைவரையும் நியமித்தனர்.

15ம் நூற்றாண்டில் நடந்த வெனிஸ் நகருக்கு எதிராக நடந்த யுத்தத்தில் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதிகளை இழந்தது வெனிஸ். அந்த யுத்தத்தில் இருந்து வெனிஸின் வீழ்ச்சி தொடங்கியது. மேலும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தியாவுக்கு செல்லும் புதிய கடல் வழிப்பாதையைக் கண்டுபிடிக்கவும் வெனிஸ் நகரின் வர்த்தகம் பெருமளவில் சரிந்தது.

16ம் நூற்றாண்டில் இடையே போர்ச்சுகீசிய வருகையினால் போர்ச்சுகீசிய நாட்டின் வர்த்தகமே கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்தது. 1100 வருடங்களாக சுதந்திர நாடாக விளங்கிய வெனிஸ் 1797ம் ஆண்டு நெப்போலியன் போனபர்டே வசம் வீழ்ந்தது. 1866ம் ஆண்டு வெனிஸ் நகரம் இத்தாலிய ராஜ்ய ஆட்சியின் கீழ் வந்தது.

இத்தகைய பாரம்பரிய வரலாறு கொண்ட வெனிஸ் நகரம் முழுவதும் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கிறன. வெனிஸ் செல்வதற்கு பிரதானப் போக்குவரத்திற்காக படகுகளைத் தான் பயன்படுத்துகின்றனர். படகை கண்டோலா என அழைக்கின்றனர். வீடுகளுக்கு விதவிதமான வண்ணங்கள் பூசுகிறார்கள். அதனால் நகரமே வண்ணமயமாக உள்ளது. பிரமாண்டமான, நவீனமான கட்டிடங்களைக் கட்டினால் அந்நகரின் பழமையான தோற்றம் போய்விடும் என்று அம்மக்கள் எண்ணுகிறார்கள்.

வெனிஸ் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள்: செயின்ட் மார்க் ஸ்கொயர், டோகே அரண்மனை, ரியால்டோ பாலம், செயின்ட் மார்க் பேசில்லா, குக்கன்ஹேம் மியூசியம்.

–    பிரசாத் ராஜ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s