அழிவின் விளிம்பில் பவழப்பாறைகள்

பவளப்பாறைகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவி வெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவழப்பாறைகள் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பவளப்பாறைகள் அழியாமல் காப்பது எப்படி என்பதும் கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.

பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிர்களை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களை தாங்களே காப்பாறிக் கொள்ள கூடியவை. வளர்சிதை மாற்றத்தின் போது கால்சியம் கார்பனேட் பதிவுகளின் மீது தான் பவளங்கள் அமர்ந்து கொள்கின்றன. இவ்வாறு தோன்றும் பதிவுகள் நீண்டகாலம் நிலைத்து பவளப்பாறைகளாகஉருவெடுக்கின்றன. இந்த பவளப்பாறைகளில் சுமார் 4000 வகையான கடல்வாழ் உயிரினங்கள் குடியிருக்கின்றன.

பவளங்கள் தம்முடைய உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுக்குள் வாழும் ஆல்காக்கள் தம்முடைய பச்சயத்தின் உதவியாலும் சூரிய ஒளியின் உதவியாலும் ஒளிச்சேர்க்கை செய்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த ஆல்காக்களின் குளுக்கோஸ் உற்பத்தி செய்யும் திறன் அபாரமானது. ஆல்காக்கள் உற்பத்தி செய்யும் குளுக்கோஸை உண்டு பவழங்கள் செழிக்கின்றன. மாறாக, பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு அரிதினும் அரிது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் கிடைப்பது இயற்கையின் விந்தைகளுள் ஒன்று.

மனித உடலைப் போன்றே பவளங்களிலும் சிக்கலான மரபியல் கூறுகள் உள்ளன. சுற்றுபுறத்தில் ஏற்படும் மாற்றங்கள் இந்த மரபியல் கூறுகளை பாதிப்படைய செய்கின்றன. 250 மில்லியன் ஆண்டுகள் இந்த பவளப்பாறைகள் தங்களுடைய வாழ்க்கைப்பாதையை நிறைவு செய்து விட்டன. ஆனால் இப்போது ஏற்பட்டுவரும் சுற்றுப்புற மாற்றங்களால் இந்த பவளப்பாறைகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விட்டன. இவற்றுள் பவழப்பாறைகள் வெளுக்கத் தொடங்கியதும் அடக்கம். நெடுங்காலம் ஆபத்தின்றி வாழ்ந்துவிட்ட பவளப்பாறைகளுக்கு மனிதன் எதிரியாக இருப்பது அபாயகரமான செய்தி அல்லவா? புவி வெப்ப மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கி வருவதாக ஓரிகான் மாகாண பல்கலைக் கழக பேராசிரியர் வர்ஜினியா வீஸ் கூறுகிறார்.

பவளப்பாறைகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் ஏராளம். கடநீரின் வெப்பநிலை உயர்வு, கடல்நீர் மாசுபடுதல், வரைமுறையற்ற மீன்பிடித்தம், வண்டல் படிவு, அமிலத்தன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் பவழப்பாறைகள் அழிந்து வருகின்றன. ஏறத்தாழ 20 சதவீத பவளப்பாறைகள் அழிந்து விட்டதாகவும், இன்னும் 24 சதவீத பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடநீரின் அமிலத்தன்மை கூடுவதால் அடுத்த நூற்றாண்டில் பவளப்பாறைகள் உருவாவது 50 சதவீதமாக குறையும் என்றும், இருக்கும் பவளப்பாறைகளும் அமிலத் தன்மையால் கரையத் தொடங்கும் என்றும் கூட ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

–    மு.குருமூர்த்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s