என் மன வானில்

என் மன வானில் 

1

சிறு வயதில் கவனித்து எப்போதும் மனதில் நிற்கும் ஒரு விஷயம் – வெடிக்கடை போடும் போதெல்லாம் “வெடிக்கடை” என்று எழுதி அதில் கடையை அடித்துவிட்டு கடல் என்று எழுதியிருப்பார்கள். அது ஒவ்வொரு வருட சென்னை புத்தகத் திருவிழாவிற்கும் பொருந்தும். இந்த வருட புத்தக திருவிழாவிற்கும் அப்படியே. இந்த வருடத்தின் புத்தக கண்காட்சிக்கு எனது முதல் விஜயம் 12.1.13 அன்று. பூக்களிடையே பட்டாம்பூச்சியாய் புத்தக வாசத்தில் கிறங்கிப் போய் சுற்றிவிட்டு வந்தேன். என்ன ஒரு குதூகலம்!!

வருடா வருடம் நண்பர்கள் புடைசூழ செல்லும் நான் இம்முறை தனியே போனேன். என்னதான் நண்பர்கள் கூட இருப்பது மகிழ்ச்சி, பலம் என்றாலும் சில கிறுக்குத்தனங்களை அவர்கள் முன்பு கூட செய்ய முடியாது. தனியே போனால் நாம் தான் மந்திரிகளே இல்லாத ராஜா!

போகும்போது இன்று எதையும் வாங்கக்கூடாது, சும்மா நோட்டம் விட்டு வந்தால் பிற்பாடு சென்று தேவையானதை மட்டும் வாங்குவது என்ற முடிவோடு தான் போனேன். நமக்கென்ன தேவையென்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டுமே தவிர, பணம் செய்யக் கூடாது என்று ஒரு நண்பன் சொல்லுவான். ஆனால் நாம் இன்னமும் பணத்தின் அனுமதியோடு தேவைகளை முடிவு செய்பவர்களாக இருப்பதால் இந்த நோட்டமிடுதலும், பிற்பாடு சென்று பட்ஜெட்டிற்குள் வாங்குவதும் அவசியமாகிறது.

எனவே எடுத்த முடிவில் சற்றும் மனம் தளராமல் இருக்க – போவதற்கு உரிய பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போனேன். அங்கு எப்படியும் கார்டு பேமன்ட் ஏற்றுகொள்ளமாட்டார்கள் எனத் தெரியும். எதிர்பார்த்தது போலவே அங்கே சொற்ப கடைகளைத் தவிர மற்ற எல்லாக்கடைகளிலும் கைமேல் பணம் தான். மூன்று மணிக்கு உள்ளே போகும் போது எதையும் வாங்கக்கூடாது என்ற மனம், நேரம் செல்ல செல்ல பட்ஜெட்டிற்குள் கொஞ்சம் வாங்கலாம் என்றது. தீவிர யோசனையுடன் சரிபாதி கடைகளைத் தாண்டி விட்டேன். மணி ஐந்தரை. பசி காதை அடைத்தது; கால்களை தளர வைத்தன. “வாசகர்களின் நலன் கருதி தற்காலிக ஏ.டி.எம். அமைக்கப்பட்டிருப்பதாக ஒலித்த அறிவிப்பு மனதுக்கு தேனாக இனித்தது.

நான் நின்ற இடத்தில் இருந்து ஐந்தடி தூரத்தில் ஏ.டி.எம். பத்தடி தூரத்தில் கேண்டின். சுற்றிலும் புத்தகங்கள். சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல இருந்த நான், கொள்கையில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டேன்.

புத்தகங்களை வாங்க ஆரம்பித்து விட்டேன். வெறும் வேடிக்கை பார்க்கவென்று போய்விட்டு வாங்கிக் குவித்தவைகளை தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். இப்போது தான் நண்பர்கள் கூட இருக்க வேண்டியதின் அவசியம், பலம் புரிந்தது.

–    ரியாஸ் கான் .  m_034-124-book

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s