கரைந்து போகும் மனித நேயம்

மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவது குறைந்து, மனிதனை மனிதனே அழித்து வாழும் சமுதாயமாக நம் மனித இனம் மாறிக்கொண்டிருக்கிறது.

பணம், புகழ், போதை, மண் மீது மோகம் கொண்ட சமுதாயமாக மாறிக்கொண்டு போகிறது நம் சமதாயம். நிலையில்லாதவற்றின் மீது கொண்ட மோகம் ஏன் நிலையான அன்பின் மீது வைக்க நம்மால் முடியவில்லை.p11_24597527

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், தேவையற்ற போர், வெடிகுண்டு கலாச்சாரம், மதச்சண்டை, இனச்சண்டை, அரசியல் சண்டை இவற்றெயல்லாம் நம்மால் மறக்க முடியாதா? அண்ணல் காந்தி பிறந்த மண்ணில் அகிம்சை இன்று இல்லை. அன்னை தெரசா பிறந்த மண்ணில் இன்று இரக்கம் அழிந்து வருகிறது. புத்தன் பிறந்த மண்ணில் இன்று அன்பு குறைந்து வருகிறது. அடிபட்டு கிடக்கும் ஒருவனை வேடிக்கை பார்க்கிறோமே தவிர அவனைக்காப்பாற்ற யாரும் முயற்சி எடுப்பதில்லை.

நம்மிடம் தோன்றும் பாசமும், அன்பும், தேசப்பற்றும் இரக்ககுணமும் இன்று தேய்ந்து கரைந்து கொண்டிருக்கிறது.

சுனாமி வந்த போது நம்மிடம் இரக்கம் வந்தது. குஜராத் நில நடுக்கத்தில் நம்மிடம் நேசம் வந்தது. பள்ளிக்குழந்தைகள் எரிந்து கருகிய போது நம்மிடம் பாசம் வந்தது. டெல்லியில் இளம்பெண்ணை பேருந்தில் சிலர் சீரழித்த போது நமக்கு கோபம் வந்தது. அதற்காக ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் கண்முன்னால் இறந்தால் தான் நம்மிடம் நேசம் தோன்றுமா?

பாவத்தினை செய்து விட்டு, கோயில் உண்டியலில் பணத்தினை போட்டுவிட்டு பாவ மன்னிப்பு கேட்டால், நம் பாவத்திற்கு கடவுள் துணைக்கு வருவாரா? மாட்டார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதை விடுத்து மண்ணுக்காகவும், பொருளுக்காகவும் சண்டையிடுகிறோம். அரசியல் நடத்த மதத்தைக் காரணம் கூறியும், இனத்தை காரணம் கூறியும் சண்டையிட்டுக் கொள்கிறோம்.

பணத்திற்காகவா, மதத்திற்காகவா, இனத்திற்காகவா – எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் விட அன்பிற்காக வாழ மறந்துவிட்டோம்.

தாத்தா, பாட்டியின் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்ட காலம் மாறி, இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடக்கின்றனர் குழந்தைகள். கடிதம் என்பது தொலைதூரத்தில் இருக்கும் உறவுகளின் பாசத்தினை ஒரு காலத்தில் வெளிப்படுத்தியது. கடிதத்தின் முதல் வாக்கியமான நலம், நலமறிய ஆவல் என்பவை இன்று இருளாகி போனது ஏனோ? இன்று செல்போனிலும், இண்டர்நெட்டிலும், இமெயிலிலும்  தொடர்வது தான் பாசமா? கவிதையை நேசிப்பது, இசையை நேசிப்பது, தேசம் காக்க நேசிப்பது, விளையாட்டை நேசிப்பது, எதிர்ப்பார்ப்பில்லாமல் ஏழைக்கு உதவுவது போன்ற சில செயல்கள் எங்கோ ஒரு மூலையில் மட்டும் நடப்பது மட்டும் நமக்கு மகிழ்ச்சி அல்ல. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பாதகங்களை செய்தவன் கூட நிம்மதியாக வீதியில் வலம் வருகிறான். ஆனால் அப்பாவி ஒருவன் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் படும் அவஸ்தை ஓர் அவலமான நிலை. மனிதனை மனிதன் நேசிக்கும் தன்மை குறைந்து துன்புறுத்தும் நிலை அதிகமாகி விட்டது. குழந்தைகளிடம் கூட அன்பிற்கான அர்த்தம் மறைந்து போகும் நிலையை நாம் உருவாக்கி விட்டோம். அது நீடித்தால் அன்பு என்ற வார்த்தை மறந்து போய் எதிர்காலத்தில் அதனை ஏட்டில் படிக்கும் நிலைமை உருவாகக்கூடும்.

மனித நேயம் வளர, அன்பெனும் நீர் ஊற்ற நாம் முயல வேண்டும்.

–    பிரம்மா 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s