முல்லா கதை

ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது உணவருந்தும் நேரம் நெருங்கியதால் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது எனக் கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் உணவருந்த வருமாறு அழைத்தார். முல்லா நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கே போனபோது, “அன்றைய சிறப்பு உணவு என்ன?” என்று அங்கிருந்த பணியாளரிடம் கேட்டார் முல்லா. “இரண்டு துண்டுகள் கொண்டு வாருங்கள்” என இருவரும் கேட்டனர்.

சிறிது நேரம் கழித்து உணவக பணியாளர் ஒரு பெரிய தட்டில் இரு மீண்துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும் இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக்கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமுமில்லாமல் பெரிய மீன் துண்டை தன் தட்டில் வைத்துக்கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, “முல்லா, நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்.” என்றார்.

முல்லா, தத்துவவாதி சொன்னதையெல்லாம் மிக அமைதியாக, பொறுமையாக கேட்டுக்கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப்படித்தவர் பேசி முடித்தவுடன் நீங்கலாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனசாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன்துண்டை எடுத்திருப்பேன்.” என்றார் அவர்.

“அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள், உங்கள் பங்கு” என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

– தலதளபதி  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s