அமெச்சூர் ரேடியோ / ஹாம் ரேடியோ

அமெச்சூர் ரேடியோ என்பது அறிவியலில் உள்ள அனைத்து உட்பிரிவு செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்ட கம்பியில்லாத்தந்தி (WIRELESS) முறையை பயன்படுத்தி தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதே ஆகும்.

உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் ரேடியோ அமேச்சூர்ஸ் (RADIO AMETEURS) என்று அழைக்கப்படும் ஹாம் ரேடியோ இயக்குபவர்கள் (HAM RADIO OPERATORS) பல்வேறு நாடு, கலாச்சாரம், மொழி, தொழில், பணி என வேறுபட்டு இருந்தாலும் எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், மனித சமுதாயத்திற்கு இச்செயல்பாடு பயன்படுதல் வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் இதில் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதே நாமறிய வேண்டிய உண்மை. அமெச்சூர் ரேடியோ நிலையத்தை உலகளவில் இயக்க உரிமம் பெற்றவர்களுடன் மட்டுமே தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை பெறுகின்றனர்.

அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, போழுதுபோக்காகிய இந்த ஒன்றிற்கு மட்டும் தான் அரசாங்கத்தின் உரிமம்(LICENSE), அடையாளம் (CALL SIGN) தரப்படுகிறது. HAM என்பதை HELP ALL MANKIND என்ற வார்த்தைகளின் சுருக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

 

நம் நாட்டில் அமெச்சூர் ரேடியோ இயக்க உரிமம் பெறுவதற்கான வயது:

எந்த ஒரு அடிப்படையான கல்வித்தகுதியையும் அரசு நிர்ணயிக்கவில்லை. ஆயினும், இந்த உரிமம் பெறுவதற்கான ஒரு தேர்வில் விண்ணப்பதாரர் வெற்றிபெற வேண்டும்.

H0-011362A

என்ன பேசுவது:

அமெச்சூர் ரேடியோ உரிமம் பெற்றுள்ளவர்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மற்ற அமெச்சூர் ரேடியோ இயக்குபவர்களுடன், எந்த நேரத்திலும் அவசர அழைப்பு, மருத்துவ அழைப்பு, மின்னணு கருவிகள், அறிவியல் சம்பந்தப்பட்ட மற்றும் பொதுஅறிவு சம்பந்தமான விபரங்கள் பற்றி எவ்வளவு நேரமானாலும் கலந்து உரையாடலாம்.  இதற்கென்று TALKTIME CHARGE, SERVICE TAX என்று எதுவுமே தனியே செலுத்த வேண்டியதில்லை.

 

அமெச்சூர் ரேடியோ உரிமம் பெறுவதால் நாமடையும் பயன்கள்:

  • விஞ்ஞான ரீதியான நல்ல அம்சங்கள் நிறைந்த ஒரு செயல்பாடு. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உலகளாவிய நண்பர்களைப் பெற முடியும்.
  • உங்களுடைய மொழியறிவு(FLUENCY), குறிப்பாக தடங்கல் இன்றி பேசும் திறன் உயரும்.
  • அறிவியலின் புதிய முன்னேற்றம் (LATEST SCIENTIFIC DEVELOPMENTS) பற்றி விரைவில் அறியலாம்.
  • நம்மை நாமே சுயமாக முன்னேற்றிக் கொள்வதோடு

மட்டுமல்லாமல் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து அறிவியல் பிரிவிலும் வளர்ச்சிகள் பெற பெரிதும் உதவுகிறது.

  • வானொலி தொடர்புடைய நுட்பங்களிலும், செய்தி பரிமாற்றங்களிலும் ஒருவருடைய திறமையை அதிகரிக்க இது அதிகரிக்க இது உதவுகிறது.
  • வானொலி தொடர்புடைய நுட்பங்களிலும், செய்தி பரிமாற்றங்களிலும் ஒருவருடைய திறமையை அதிகரிக்க இது உதவுகிறது.
  • வானொலி தொடர்புடைய நுட்பங்களிலும், செய்தி பரிமாற்றங்களிலும் ஒருவருடைய திறமையை அதிகரிக்க இது உதவுகிறது.
  • நாடு, மதம், இனம், நிறம் முதலிய வேறுபாடுகள் இன்றி மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் இடையே செய்தி பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அந்த நாட்டு மொழி அறிவு, கலாச்சாரம் பற்றி அறிந்துகொள்ள உதவும் ஒரு அறிவியல் சார்ந்த கலை.
  • பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஹாம் ரேடியோ ஆப்பரேட்டர்கள் ஆவதன் மூலம் தங்களது அறிவியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
  • நமது நாட்டில் எந்தப் பகுதியாவது மண்சரிவு, பூகம்பம், வெள்ளம், புயல், காட்டுத்தீ, சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு அவதியுறும் காலங்களிலும், மின்சாரத்தடை பரவலாக ஏற்பட்டு அனைத்து வகையான நம்பகத்தன்மையுடைய, முதன்மையான தொலைதொடர்பு பிரச்சனையை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலையில், அமெச்சூர் ரேடியோ இயக்க உரிமம் பெற்றவர்கள் தங்களுக்கென எந்த ஒரு அனுகூலமும் பாராமல் தன்னிடம் உள்ள கருவிகளை தனது சொந்த செலவில், பாதுகாப்புடன் பாதிக்கப்பட்ட பகுதிக்கு எடுத்து சென்று அங்குள்ள அதிகாரிகளுக்கு தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், பொதுமக்களுக்கு நிவாரணம் விரைவில் கிடைத்திட வழி செய்வதிலும் பெரும்பங்காற்றுவார்கள்.

 

பேரிடர் காலங்களில் அமெச்சூர் ரேடியோ இயக்குபவர்கள் ஆற்றிய பணி:

குஜராத் பூகம்பம் 2001, சுனாமி 2004 போன்ற காலங்களில் அமெச்சூர் ரேடியோ இயக்குபவர்கள் ஒருங்கிணைந்து ஆற்றிய மக்கள் பணி மகத்தானது என்பதை உலக மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

இந்தியாவில் அமெச்சூர் ரேடியோ இயக்குபவர்கள்:

அமெச்சூர் ரேடியோ இயக்க உரிமம் பெற்றவர்கள் ஹாம் ரேடியோ ஆப்பரேட்டர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இப்படிபட்ட ஹாம்களின் எண்ணிக்கை உலகில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில் மிகவும் குறைவு.

அமெரிக்காவில் பேரில் ஒருவர், ஜப்பான் நாட்டில் பேரில் ஒருவர், இந்தியாவில் பேரில் ஒருவர் ஹாம் ரேடியோ ஆப்பரேட்டர்களாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டு மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

ஜப்பான் நாடு மின்னணுவியல் துறையில் முதலிடம் வகிப்பதற்கு பக்கபலமாக இருப்பதற்கு அந்த நாட்டு ஹாம்கள் தான் என்பதை நாம் உணர வேண்டும். இன்று நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கும் வீச்சுமாற்று வானொலி(AM), பண்பலை வானொலி(FM), கைபேசி(MOBILE PHONE), கம்பியில்லாத் தந்தி வலைப்பின்னல்(WIRELESS NETWORK) இவைகளின் கண்டுபிடிப்பு மற்றும் ஆரம்பகால வளர்ச்சிக்கு வித்திட்டவன் அமெச்சூர் ரேடியோ இயக்குபவர்கள் தான்.

இந்தியாவில் அமெச்சூர் ரேடியோ இயக்க உரிமம் பெற்ற பிரபலங்களில் சிலர்:

சோனியாகாந்தி, கலாநிதிமாறன், தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, மலைச்சாமி, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், மம்மூட்டி, லேனா தமிழ்வாணன்( பத்திரிக்கையாளர்), எம்.எஸ்.குகன்(திரைப்பட தயாரிப்பாளர்).

நீங்களும் கூடிய விரைவில் அமெச்சூர் ரேடியோ உரிமம் பெற்று, கம்பியில்லாத் தந்தி ஒலிபரப்பு நிலையம் (WIRELESS TELEGRAPH STATION) உங்கள் வீட்டிலேயே அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஹாம் ரேடியோ நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து அறிவுசார் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

– குகன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s