கருவேல மரங்கள்

நம் அண்டை மாநிலமான கேரளாவில் கருவேல மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல்பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபிரிதமான நாடாக இருக்கிறது. இப்போதும், அந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டுவிட்டால் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.

சீமைக் கருவேல மரங்கள்: இந்த மரத்தைப் பார்க்காத ஒரு தமிழன் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது. எந்த ஒரு வறண்ட நிலத்திலும், எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்ககூடிய முள் மரம் இது. தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும் , கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை வளரும். ஏனெனில், ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி, மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் நீர் முற்றிலும் வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவதில்லை. ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது. காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சிவிடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்ப்சையையும், எண்ணெய்ப்பசையையும் கூட உறிஞ்சிவிடுவதால் இந்த மரங்களின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல் வறண்டு விடுகின்றன. தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது பலருக்கும் இதுவரை புரியவில்லை. ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கும் வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரங்களை வளர்த்து வருகிறார்கள். இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. ஆச்சர்யமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்தால் அவை மலடாகி விடுகின்றன. அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும். ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான பிறக்கும்.

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது. மற்றொருபுறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது. தவிர, இம்மரத்தில் எந்த பறவையினமும் கூடு கட்டுவது இல்லை. இந்த சீமைக்கருவேல மரங்கள், பிராணவாயுவை மிகக்குறைந்த அளவே உறப்த்தி செய்கிறது. அனால், கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்றுமண்டலமே நச்சுத்தன்மையாக மாறிவிடுகிறது.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ, அதைவிட அவசியம் இந்த சீமை கருவேல மரங்களில் ஒன்றையாவது வெட்டுவது. அமெரிக்க தாவரவியல் பூங்கா வளர்க்கக்கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனிப்பட்டியலே வெளியிட்டு உள்ளது. அதில் முன்னணியில் இருப்பதுதான் இந்த சீமை கருவேல மரங்கள். அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காக்க முடியும் என்பது விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் செய்தி. ஆகவே, கருவேல மரங்களை ஒழிப்போம், நம் மண்ணின் மாண்பைக் காப்போம் !!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s