சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்ற மன்னனோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் அடைப்பட்டிருக்கையில் மன்னன் சேரமான் கணைக்கால் இரும்பொறை தன் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்குமாறு காவலாளிகளிடம் கேட்கும்பொழுது காவலாளிகள் அம்மன்னன் மனம் புண்படும்படி இழிவுபடுத்தி ஒரு மன்னன் என்று கூட பாராமல் மரியாதையின்றி நடந்து கொண்டார்கள். தாகத்துக்கு தண்ணீர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் மன்னன் மிகவும் மனம் வருந்தி, தந்த நீரைக் குடியாது வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஒரு செய்யுளை எழுதி விட்டு உயிர் நீத்தான்.

d0114p04

சேரமான் கணைக்கால் இரும்பொறை மனம் நொந்தி எழுதிய செய்யுள் புறநானூற்றின் 74வது பாடலாக உள்ளது.

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளில் தப்பார்

தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேள் அல் கேளிர் வேளாண் இடர்ப்படுத்து சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீ தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் உலகத்தானே?

 

பொருள்:

பிள்ளை இறந்து பிறந்தாலும், உருவமின்றித் தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் அவற்றை ஆள் அல்ல என்று பழந்தமிழர் கருத மாட்டார்கள். மாறாக அவற்றையும் வாளால் கீறி வடுப்படுத்தியே அடக்கம் செய்தனர். ஏனென்றால் ஆணும் போர்க்களத்தில் விழுப்புண் பட்டே இறக்க வேண்டும் என்பது அவர்தம் ஆசையாக இருந்தது. தமிழர் மரபு இவ்வாறு இருக்க, ஒரு அரசன் போரில் அழியாது புண்பட்டு உயிர்பிழைத்தால், வெற்றி பெற்றவன் தோல்வியுற்றவனை, சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போல துன்புறுத்துவான், அத்தகைய மனிதம் இல்லாத பகைவர், வயிற்றில் தீ போல இருக்கும் தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் உடனே தந்துவிடுவார்களா? காலம் தாழ்த்தி அவர்கள் தரும் தண்ணீரைக் குடித்து இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வதை விட உயிர் விடுவது எவ்வளவோ மேல்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s