பத்திரிக்கையாளர்களின் சமூக சேவை

கருத்து சுதந்திரம் என்பது அடிப்படி உரிமைகளில் ஒன்று. இச்சுதந்திரம் இருந்தால்தான், உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரம் என்பது அவசியமானது. உலக நடப்புகளை, உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர, செயல்பாட்டில் அல்ல. பத்திரிக்கையாளர்களின் சேவை பாராட்டுக்குரியது.

பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; உலகம் முழுவதும் அதை செயல்படுத்துவது; பத்திரிக்கை மீதான தாக்குதலை தடுப்பது; மறைந்த பத்திரிக்கையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மே3 ம்தேதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன.

15 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஒவ்வொரு அரசும் தடுத்து நிறுத்த வேண்டும். உலகில் எங்காவது பத்திரிக்கை சுதந்திரம் பாதிக்கப்பட்டால், அதற்கு எதிராக போராடும் தனி நபர், பத்திரிகை, தொண்டு நிறுவனங்களுக்கு யுனெஸ்கோ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. 1997ல் நிறுவப்பட்ட இவ்விருதுக்கு உரியவரை தேர்வு செய்ய 14 நடுவர்கள் உள்ளனர்.

guillermo2

இவ்விருது ‘குல்லர்மோ கானோ இசாசா’ என்ற கொலம்பிய நாட்டு பத்திரிக்கையாலரின் பெயரால் வழங்கப்படுகிறது. ‘எல்.எஸ்பேக்டேட்டர்’ என்ற பத்திரிகையில்  பணிபுரிந்த இவர், போதை பொருள் மாபியா கும்பலின் சட்ட விரோத கடத்தலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால், பத்திரிக்கை அலுவலக வாயில் முன்பாகவே, 1986ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த பத்திரிக்கையாரின் சேவையைப் பாராட்டி, விருதுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s