மகாராஜாவின் ரயில் வண்டி

இன்செப்ஷன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அதில் ஒருவன் இன்னொருவனிடம் கேட்பான். “இப்போ நீ யானையைப் பற்றி நினைக்கக்கூடாது என்றால் எதைப்பற்றி நினைப்பாய்” என்று. இவன் சொல்லுவான், ‘நிச்சயமாக யானையைப் பற்றிதான்” என்று. அதுபோல ஒரு கதையை சமீபத்தில் வாசித்தேன்.

OLYMPUS DIGITAL CAMERA

அது அ.முத்துலிங்கம் எழுதிய “ஆயுள்” சிறுகதை. அது இப்படியாக ஆரம்பிக்கிறது. (இந்த கதையில் ஓர் ஆண் பாத்திரம் உண்டு, பெண் பாத்திரமும் இருக்கிறது. ஆனால் இது காதல் கதை அல்ல. இன்னொரு பாத்திரமும் வரும். அதைப்பற்றிய கதை. ஏமாறவேண்டாம் என்பதற்காக முன்கூட்டியே செய்த எச்சரிக்கை இது).

இப்படி ஆரம்பிக்கும் கதையை உங்களால் படிக்காமல் இருக்க முடியுமோ? என்னால் முடியவில்லை. படித்து முடித்தேன். சுருக்கமாக இங்கே: அந்த ஆண் கதாபாத்திரம் ஒரு தேசாந்திரி. குழந்தையாய் இருக்கும்போது அவனது அம்மா அவனைத் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிசென்றிருக்கிறார். ஒருநாள் அதிலிருந்து தானாகவே இறங்கிக்கொண்டானாம். பின் அதை தள்ளியபடியே சிறிது தூரம் நடந்திருக்கிறான். கால்களைக் கண்டறிந்தபின் அவன் அதன்பிறகு வேறெந்த வாகனத்திலும் திரும்ப ஏறவில்லையாம். பின் ஒருநாள் இளைஞனானதும் பரதேசம் புறப்படுகிறான். அவன் முதுகில் ஒரு மூட்டை இருந்தது. கம்பளிப்போர்வை, அங்கி, சமையல் சாமான், ஒரு பிளாஸ்டிக் குடுவை அதில் குடிக்க தண்ணீர் என மிக அத்தியாவசியமான பொருட்களை வைத்திருந்தான். நான்கு வருடங்களாக நடந்துகொண்டிருந்தான்.

இந்துகுஷ் மலைச்சிகரத்தை ஒட்டிய ரம்பூர் பள்ளத்தாக்கை அடைகிறான். அங்கே பனிரெண்டாயிரம் அடி உயரத்தில் அந்நியர்களின் வருகை அறியாத ஒரு குழுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பணி உருகி சில்லென தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் தனது பிளாஸ்டிக் குடுவையில் நீர் நிரப்பி அருந்துகிறான். இளம்பெண்களும் மற்றவர்களும் அவனை அதிசயமாக பார்க்கின்றனர். அவனை என்றால் அவனை இல்லை. அந்த குடுவையை. வெறும் சுரைக்குடுவையையும், தோல்குடுவையையும் பார்த்து பழகிய அவர்களுக்கு உள்ளே நீரை நிரப்பினால் வெளியே தெரியும் இந்த குடுவை அதிசயம். ஆனால் ஒருத்தி எந்த ஆச்ச்ர்யமுமின்றி அவனை எதிர்கொள்கிறாள்.  அவன் ஹென்சாகூல் என்பது அவள் பெயர். அவள்தான் அந்த பெண்பாத்திரம். அவன் அவளின் ஆர்ப்பாட்டமில்லாத அழகில் மயங்குகிறாள். தன் இயல்பிற்கு எதிராக அங்கேயே தங்கிவிடவும் நினைக்கிறான். நாட்கள் நகர்கின்றன. அவன் அவளிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கிறான். அவள் வன்மையாக மறுக்கிறாள். பின் அவள் தந்தையிடம் அனுகுகிறான். இந்த கிராமத்து பெண்கள் இங்கிருந்து வெளிவர விரும்புவதேயில்லை; நீயும் இங்கேயே தங்கிவிடுவதாயின் எனக்கு ஆட்சேபணை இல்லை என்கிறார் அவர். அவனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான். ஆனால், அதற்கு முன் தண் வாழ்நாளில் செல்ல வேண்டிய இடங்கள் உண்டு என்றும் அங்கு சென்று திரும்ப வருவேன், அப்போது உன்னை திருமணம் செய்துகொள்வேன் அதன் பின் திரும்ப செல்ல மாட்டேன்; இது நிச்சயம் என்கிறான். தனது குடுவையை அவளுக்கு பரிசாக கொடுத்து செல்கிறான்.

ஹென்சாகூலும் தினமும் அந்த குடுவையைப் பார்த்தபடியே நாட்களைக் கழிக்கிறாள். வருடங்கள் கழிகின்றன. அந்த கிராமத்தின் வலுவான இளைஞர்கள் பலரும் ஹென்சாகூலை மணக்க முன்வருகின்றனர். சில வருடங்களுக்கு பின் அவர்களில் ஒருவனை மணந்து கொள்கிறாள். குழந்தை பிறக்கிறது. அதன் பிறகும் அவன் வரவேயில்லை. நூறு வருடங்கள் கழிந்தன. உலகத்து ஜீவராசிகள் அத்தனையும் மடிந்து மண்ணோடு  மண்ணாக முற்றிலும் அழிந்து போக இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. ஆம், பிளாஸ்டிக்கின் வயது நானூறு வருடங்கள்.

இத்தோடு முடிகிறது கதை. பிளாஸ்டிக்கின் கொடுமையை ஆக்கிரமிப்பை அழகாகவும் ஆழமாகவும் சொன்ன கதையை என் அனுபவத்தில் வாசித்ததில்லை.

100-00-0000-064-9_b

அந்த தொகுப்புதான் மகாராஜாவின் ரயில் வண்டி. எழுதியவர் அ.முத்துலிங்கம். இத்தொகுப்பில் வரும் பெரும்பாலான கதைகள், நேரேசன் எனப்படுகிற கதைசொல்லல் வகையைச் சார்ந்தது. இதில் பெரும்பாலும் கதைசொல்லி தன்னையும் ஒரு கதாபாத்திரமாகவே சொல்லிக்கொண்டு வருவார்.

இதுவரை முத்துலிங்கத்தை வாசிக்காதவர்கள், இங்கிருந்தே தொடங்குங்கள். மிகவும் எளிமையான நடையில் தோளில் கைப்போட்டபடி கதை சொல்லும் பாங்கு இவருடையது. 20 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாக் கதைகளும் தனிச்சிறப்போடே இருக்கின்றது.

–    முரளிகுமார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s