உதயகுமார் பாலகிருஷ்ணன் கவிதைகள்

வீடெனப்படுவது…

நீண்ட பெரியதொரு முன்னறை,
சற்றே விசாலமாக இரு படுக்கையறைகள்,
பொருட்களை அடுக்கி வைக்க ஏதுவாக
அஞ்சறைப்பெட்டியென வடிவமைக்கப்பட்ட
நவீன சமையலறை,

குந்துகாலில் அமரும்படியும்
உக்காந்தவாறே போகும்படியும் என
இரண்டோ மூன்றோ கழிவறைகள்,
இத்யாதி இத்யாதியென
வசதிப்படும் வரை மாற்றிக் கொண்டேயிருக்கலாம்
ஆணியெடுத்து சுவற்றில் கிறுக்க முடியாத,
சொந்தங்கள் யாரும் வந்து செல்ல முடியாத;
வாடகைக்கு செல்லும் வசிப்பிடத்தை…
எனில் வீடெனப்படுவது
நாம் வசிக்கும் இடமில்லை
வாழுமிடம்,
காணி நிலம் வேண்டாம் பராசக்தி
குடியிருக்க சொந்தமாய்
கையகலக் குச்சு போதும்.

**************************************

காலை வெளியேறி
இரைதேடிப் பறந்து
மாலை கூடடையும்
வனப்பறவையாய் வாய்க்கவில்லை
வாழ்க்கை…

என் இருப்பிடம் வந்து சேரும்
எனக்கான இரையில் எந்த தெம்புமில்லை
கூண்டை முறித்து வெளியேறி
சிறகடித்துப் பறக்க…

–    உதயகுமார் பாலகிருஷ்ணன். 

Advertisements

One thought on “உதயகுமார் பாலகிருஷ்ணன் கவிதைகள்

  1. எனது கவிதைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே….

    சிறு திருத்தங்கள்:

    மூன்றாம் வரியில் ஏதுவாக; இத்யாதி இத்யாதியெனவிற்குப் பிறகு புள்ளி வராது; அதையும் அடுத்த வரியையும் பிரிக்க வேண்டாம்; கிறுக்க முடியாது, செல்ல முடியாது அல்ல கிறுக்க முடியாத, செல்ல முடியாத; வீடெனப்படுவதெனில் அல்ல எனில் வீடெனப்படுவது;

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s