இந்திய சினிமா

554706_522207577815785_1559703382_n

தாமஸ் ஆல்வா எடிசனால் துவங்கி, லூமிரே சகோதரர்களால் நகரும் படம் கண்டறியப்பட்ட ரெண்டே ஆண்டுகளில் 1897ல் சென்னைக்கு வந்து விட்டது சினிமா. விக்டோரியா பப்ளிக் ஹாலில் “சினிமாஸ்கோப்” என்ற பெயரில் எட்வர்ட் அவர்களால் முதல் நகரும் படம் திரையிடப்பட்டது.

அதுவே தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு விதையாக விழுந்தது. இந்த வரலாற்றுப் புகழ் வெளியீட்டைத் தொடர்ந்து சில நகரும் படக்காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.

1900ஆம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம், மவுண்ட் ரோட்டில் மேஜர் வார்விக் என்ற வெள்ளையரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலெக்ட்ரிக் திரையரங்கு. மின் விளக்குகள் வாயிலாக ஒளிவீசும்படி இருந்ததால் இந்த திரையரங்கிற்கு இப்பெயர் உண்டானது.

1896ம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த முதல் நகரும் படம் ‘இயேசுவின் வாழ்க்கை”. இது மும்பையில் டூபாண்ட் என்ற பிரெஞ்சுக்காரரால் காட்டப்பட்டது. பின்னர் 1905ல் திருச்சிக்கு வந்தபோது, சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற ரயில்வே ஊழியருக்கு ரெண்டாயிரம் ரூபாய்க்கு விற்றார். சாமிக்கண்ணுவும் ஊர் ஊராக சென்று படத்தைப் போட்டு காட்டினார். இதன் மூலமே டூரிங் டாக்கீஸ் முதலில் உருவானது.

saamikannu vincent

பின் ஊர் ஊராக அலைவதில் உள்ள சிரமம் உணர்ந்து சிறிது பணம் சேர்ந்ததும், தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்” என்னும் நிரந்தர சினிமா கொட்டகையோ கட்டினார். நிரந்தர சினிமா கொட்டகையை கட்டிய முதல் இந்தியரும் சாமிக்கண்ணு அவர்களே. கோவை சினிமா கொட்டகைக்கு பின்னரே, பல ஊர்களில் சினிமாவுக்கு மதிப்பு கூடியது. பல வெளிநாட்டு சலனப்படங்கள் காட்டப்பட்டன. நாடகக்கொட்டகைகளும், அரிசி அரவை மில்களும் சினிமா கொட்டகைகளாக மாற்றப்பட்டன.

nadaraja mudhaliyar

ஆர். நடராஜ முதலியார்:
வெளிநாடுகளில் இருந்து மிதிவண்டிகளை வாங்கி வியாபாரம் செய்து வந்தார் ஆர்.நடராஜ முதலியார். பின்னர், கார்களை இறக்குமதி செய்து விற்று வந்தார். இதனால் ஸ்டூவர்ட் ஸ்மித் என்ற ஆங்கிலேயரின் தொடர்பு ஏற்பட்டு சினிமா ஆசை உண்டானது. 1916ல் பூனா சென்ற நடராஜ முதலியார் சினிமா கற்றுக்கொண்டார். பின்னர், கீழ்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் தர்மலிங்க முதலியாரோடு சேர்ந்து “இந்தியா பிலிம் கம்பெனி” ஆரம்பித்தார். அங்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் மௌன தமிழ்ப்படமே கீசக வதம். நடிகர்களுக்கு பயிற்சி தர ரங்கவேலு என்பவரை நியமித்தார். இவரே தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர் எனலாம். ராஜி முதலியார் தமிழ் சினிமாவின் முதல் ஹீரோ. 6000 அடி நீளமும், 35000 ரூபாய் செலவும் கொண்டு 1916ம் ஆண்டில் வெளியானது.

கேமரா லென்ஸ் தங்கள் அழகை கெடுத்துவிடும் என்பதாலும், திரை கருவிகளுக்கு பயந்தும் நாடக நடிகைகள் சினிமாவில் நடிக்க வரவில்லை. நடராஜா முதலியார் 1917ல் எடுத்த தனது அடுத்த படத்தில் மரின் ஹில் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை கதாநாயகியாய் நடிக்க வைத்தார். இவருக்கு லியோச்ச்சனா என பெயர் சூட்டினார். படத்தின் பெயர் ‘திரௌபதி வச்திராபுராணம்’. இவரே மௌனப்படங்களில் அதிக சம்பளம் பெற்றவர். தொடர்ந்து ருக்மிணி சத்யபாமா, லவகுசா, மயில்ராவணா, மார்க்கண்டேயா போன்ற படங்களை எடுத்தார். மயில்ராவணா, மார்க்கண்டேயா போன்ற படங்களுக்கு வேலூர் கோட்டையில் படப்பிடிப்பு நடத்தினார். தமிழ் சினிமாவில் முதல் வெளிப்புற படப்பிடிப்பையும் செய்தவரும் நடராஜா முதலியாரே.

1923ல் இவரின் சினிமா படப்பிடிப்பு கொட்டகை தீக்கிரையானது. முதலியாரின் மகனும் அந்த ஆண்டே மரணமடைந்தார். தொடர்ந்த நஷ்டம் காரணமாக சினிமாவை இவர் கைவிட்டார். எளிமையான வாழ்க்கையும், ஏழ்மையும் தொடர தமிழ் மௌன சினிமாவை அறிமுகப்படுத்திய நடராஜ முதலியார் 1972ல் சென்னை அயனாவரத்தில் இறந்தார்.

கருத்துகளைப் பரப்பும் ஊடகமாக சினிமா இந்தியாவில் வளர ஆரம்பித்தபோது, பிரிட்டிஷ் அரசு அதை ஒரு அச்சத்துடனேயே அணுகியது.

இந்த ஊடகத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய பிரிட்டிஷ் அரசு ‘இந்திய சிநிமாட்டோகிராப்’ சட்டத்தை 1918ல் கொண்டுவந்தது.

1920ல் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய நகரங்களில் திரைப்படத்தணிக்கைக் குழுக்கள் நிறுவப்பட்டு செயல்பட ஆரம்பித்தன.

censor
தணிக்கை:
அரசியல் கருத்துகள் சினிமாவில் வரவிடாமல் தடுக்க ஆரம்பித்தன தணிக்கை விதிகள். அரசியல், இடதுசாரி கருத்துகள், தொழிலாளி-முதலாளி போராட்டம், குறுநில மன்னர்களை நையாண்டி செய்தல், சமூக கலவரங்களை மூட்டக்க்கூடிய காட்சிகள் – இவையெல்லாம் தணிக்கை செய்யப்பட்டன. 1918ம் ஆண்டு சட்டம் தான் இந்தியாவின் சினிமா தணிக்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அவ்வபோது மாற்றங்களையும் புதிய பிரிவுகளையும் சேர்த்த போதிலும் அதன் உரு மாறவில்லை.

பிரசாத் ராஜ் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s