கிறுக்கல்கள்

இருப்பதாயிருப்பதுவே இயல்பு.

வெயில் முறுக்கிய சருகுகளில்,

முதல் துளி விழுகையில்,

எழுகின்ற சிறு ஒலி

இன்னொன்றுமின்னொன்றுமாய்க் கூடி

பின், பெருகிப் பேரரவமாய்

பிரவாகிக்கும், பெருமழைக்காலம்,

பெரும்பாலும்

உலர்ந்த காற்றின் வெம்மை பரவிய

வெக்கையானதொரு

முன் மாலைப் பொழுதுகளில்தான்

தொடங்குகிறது.

அம்மழையின்பின்

துளிர்க்கப்போகும் தன்

முதல் இலைக்கான நம்பிக்கையோடு,

ஓயாதகாற்றோடு பேசியே

இலைகளனைத்தையும்

உதிர்த்து காய்ந்திருக்கும்

ஒற்றைமரம்.

ஏதோவொரு பின்மதியவேளையில்,

தன் மரப்பெட்டியிலிருக்கும்,

முப்பது வருடங்களுக்கு

முன் வெளியேறிய

அப்பாவின் புகைப்படத்தைத்

துடைத்தபடி அமர்ந்திருக்கிறாள்,

அம்மா.

முன்னெப்பொழுதும்போல்.

————————————————–

அதிகாலை ஆற்றுக்குளியலில்

பெய்யும் உறுத்தாத மழை,

கனவுறக்கம் கலைக்காத

பேருந்தின் பயணக்காற்று,

 

யாருமற்ற மொட்டை மாடியில்

சாய்ந்துகிடக்கும் மாமர நிழல்,

காம்பு பழுத்து கனிந்து

உதிரக்காத்திருக்கும் கொய்யா,

அம்மரக் கிளையில் கொத்தோடு

அசையும் குருவிக்கூடு,

மரமிறங்கும் அணில்,

 

மாலை, மழைப்பொழுதுகளில்

திறந்துகிடக்கும் சாளரங்கள்,

இடம் மாறி, இடம் மாறி நீயமர்ந்து

போட்டுவைத்த புள்ளிக்கோலம்,

அகல்விளக்கு வெளிச்சத்தில்

அம்மா தொடுக்கும் மல்லிகைச்சரம்,

 

தார்ச்சாலைகளின் மீது பரப்பிய

நெல்மணிகள் மேல் படரும் வெயில்,

தூரத்து பச்சை,

தொலைதூரத்தில் சன்னமாய்க் கேட்கும்

ஏதோவொரு பாடல்,

வாசிக்கும் புத்தகத்தின் நடுவாய்வந்து,

வேறெங்கோ கூட்டிச்செல்லும்,

ஒற்றை மயிலிறகோ, சருகோ…

 

இவையனைத்தும்

உன்னை ஞாபகப்படுத்துவதைவிட,

நீயொருத்தியாய்

இவையனைத்தையும்

ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறாய்!

–    முரளிகுமார் பத்மநாபன் 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s