பசுமை இலக்கியம்

தமிழகத்தில் பசுமை இலக்கியம் மெல்ல மெல்லத் துளிர்விட்டு வரும் காலம் இது. சூழலியல் விழிப்புணர்வை பரவாலாக்குவதில் பசுமை எழுத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. சர்வதேச அளவில் சூழலியல் உணர்வு, பசுமை இலக்கியம் என்பது போன்ற அடையாளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே நமது இயற்கை, சூழல் பற்றி தமிழ் அறிஞர்கள் எழுதி சென்றிருக்கிறார்கள்.

நவீனமயம் ஆட்சி செலுத்தும் இன்றைய சூழலில், சூழலியல் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆர்வம் பரவலாகி வருகிறது. வெறுமனே நகரத்து சுற்றுசூழல் மாசுபாடுகளைத் தாண்டி இயற்கை, காட்டுயிர்கள், தாவரங்கள், பல்லுயிரியம் என ஒட்டுமொத்த சூழலியலை புரிந்து கொள்வதற்கான தேடல் அதிகரித்து உள்ளது.

தமிழ் சூழலியல் எழுத்தாளர்கள்:
நவீன காலத்தில் தமிழில் சூழலியல் என்ற துறை முக்கியத்துவம் பெரும் முன்பே இயற்கை வரலாறு, காட்டுயிர் தொடர்பாக எழுதியவர்கள் மிகக்குறைவு. விஞ்ஞானிகளும், வேட்டைக்காரர்களும் பெரிதாக எழுதவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் சூழலியல் தொடர்பாக தமிழில் எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: மா.கிருஷ்ணன், எம்.எ.பாட்சா, பிலோ.இருதயராஜ், ஆர்.பி.சீனிவாசன், ஜே.மங்களராஜ் ஜான்சன், தியோடர் பாஸ்கரன், ச.பாலகதிரேசன் ஆகியோர்.

maa.krishnanசென்னையை சேர்ந்த மா.கிருஷ்ணன் (1913-1996) தமிழ் இலக்கியவாதி முன்னோடிகளில் ஒருவரான அ.மாதவையாவின் மகன். காட்டுயிர்கள் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். 1950 முதல் அவர் எழுதிய “மை கன்ட்ரீ நோட்புக்” என்ற குறிப்புகள் அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக வெளிவந்து புகழ்பெற்றவை. அவரது தமிழ் கட்டுரைகள் “மழைக்காலமும் குயிலோசையும்” என்ற தொகுப்பாக வந்துள்ளன.

பி.லூர்துசாமி (1918-1995) என்ற பெயர் கொண்ட பி.எல்.சாமி முன்னாள் புதுவை ஆட்சியர். தமிழறிஞர், இயற்கை விரும்பி, ஸந்கத்தமிழ், இலக்கிய ஆராய்ச்சியாளர். சங்க இலக்கியத்தில் புள்ளினம், விலங்கினம், செடிகொடிகள், மீன்கள், ஊர்வனவற்றின் விளக்கம் பற்றி அவர் எழுதிய நூல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடாக வந்து தனித்தன்மையோடு திகழ்கிறது. ஆனால் இந்த நூல்கள் தற்போது கிடைப்பதில்லை என்பது துரதிருஷ்டம்.

thodre baskaran

தற்போது எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் தியோடர் பாஸ்கரன். உயிர்மை இதழ் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக சுற்றுசூழல், இயற்கை சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’, ‘தாமரை பூத்த தடாகம்’, ‘வானில் பறக்கும் புள்ளெல்லாம்’ என மூன்று கட்டுரைத்தொகுப்புகள் வந்துள்ளன. இயற்கைக்கான உலக நிதியத்தின் (WWF-India) அறங்காவலராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

saa.mugamathu ali

தமிழில் காட்டுயிர்கள், இயற்கை சார்ந்து வெளிவரும் ஒரே இதழான “காட்டுயிர்” இதழின் ஆசிரியர் ச.முகமது அலி, பல புத்தகங்களை எழுதியுள்ளார். ‘பறவையியல் நிபுணர் சலீம் அலி’, ‘நெருப்புகுழியில் குருவி’, யானைகள்: அழியும் பேருயிர்’, ‘இயற்கை: செய்திகள் சிந்தனைகள்’, ‘வட்டமிடும் கழுகு’, ‘பாம்பு என்றால்?’, ‘பல்லுயிரியம்’ போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

paamayan

தினமணி, புதியகல்வி, தாளாண்மை, தமிழர் கண்ணோட்டம் இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவரும் பாமயன், தற்போது தமிழினி இதழிலும் எழுதி வருகிறார். இவரது சூழலியல் கட்டுரைகளின் தொகுப்புகள்: ‘அணுகுண்டும் அவரை விதைகளும்’, ‘வேளாண இறையாண்மை’.

nammaalvaar

இயற்கை வேளாண விஞ்ஞானி என்று அழைக்கப்படும் நம்மாழ்வார், தமிழகமெங்கும் சென்று இயற்கை விவசாயம், பாரம்பரியத் தொழில்நுட்பங்கள் காக்கப்படுவதன் அவசியம் குறித்து மக்களிடம் உரையாற்றி வருகிறார். ‘பசுமை விகடன்’ மற்றும் பல சிற்றிதழ்களில் எழுதி வரும் இவர் பல புத்தகங்களும் எழுதியுள்ளார். ‘உழவுக்கும் உண்டு வரலாறு’, ‘மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள்’, ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

14

தமிழ் பசுமை இலக்கியத்தில் நக்கீரனின் எழுத்து தனித்தன்மை கொண்டது. ‘மழைக்காடுகளின் மரணம் – அழிவின் வாசலைத்தேடி’, ‘தட்டான்கள் பறக்கும் மழைக்காலம்’ ஆகியவை இவர் எழுதியுள்ள நூல்கள். பூவுலகு, இளைஞர் முழக்கம் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

maruthuvar kaa.sivaraaman

மரபணு மாற்றுப்பயிர்கள் தொடர்பாகவும், உணவு அரசியல் சார்ந்தும் வெகுஜன இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதிவரும் மருத்துவர் கு.சிவராமன் தற்போது ஆனந்த விகடன் இதழில் ‘ஆறாம் திணை’ என்ற பெயரில் நமது உணவு வகைகளின் மகத்துவம் பற்றி எழுதிவருகிறார்.

shanmugaanadham

இளைஞர் முழக்கம், தடாகம்.காம், காட்டுயிர், பூவுலகு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவரும் ஏ.சண்முகானந்தம் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர். ஒருபுறம் ஒளிப்படங்கள் வாயிலாகவும், மறுபுறம் எழுத்து வழியாகவும் இயற்கை, காட்டுயிர் சார்ந்த விழிப்புணர்வை பரவலாக்கி வருகிறார்.

17

‘பூவுலகு’, ‘துளிர்’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ள ஆதி வள்ளியப்பன் ‘கொதிக்கும் பூமி’, ‘நாராய் நாராய்’, ‘மனிதர்க்கு தோழனடி’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இயற்கை ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி இலக்கிய ஆர்வலர்கள், இளைஞர்களிடையே சுற்றுசூழல் சார்ந்த புரிதல் பரவலானதற்கு மேற்கண்டவர்களும் ஒரு முக்கிய காரணம்.

தொகுப்பு: அருண் மகாலிங்கம்

Advertisements

2 thoughts on “பசுமை இலக்கியம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s