கவிதைகள்

தீவட்டிகள் திசையெங்கும் ஜொலிக்க

மந்திர உச்சாடனங்கள் மங்கலமாய் ஒலிக்க

அலங்கார யானையும் ஒட்டகமும் நடக்க

தீப தூபங்கள் திவ்யமாய் சிறக்க

பெரியரத வீதியில்

துவங்கிவிட்டது சாமிப்புறப்பாடு…

பழஞ்சட்டை தொப்பலாய் நனைய

நெற்றிவியர்வை நிலத்தில் தெறிக்க

நாபிக்கமலத்தின் காற்றை இழுத்து

நாலாதிசையிலும் இசை பரப்பியபடி

கொட்டுக்காரனுக்கு நடுவே நடக்கிறான் கொம்பூதி

ஆயிரம்பொன் சப்பரத்தில் அமர்த்தப்பட்ட

வியர்வை சுரப்பியற்ற விக்ரகத்திற்கு

சலிக்காமல் வீசப்படுகிறது வெண்சாமரம்!

   -ஸ்ரீதர் பாரதி

—————————————————————————————————————————————————————-

“நிலா எங்கே”

இந்த ஒற்றைக் கேள்வி போதும்

கட்டடங்களுகிடையே ஒளிந்திருக்கும் நிலவைத்தேடி

நிலத்தில் வட்டமிடத் துவங்குவாள்…

தினம் நிலவு வரும் திசை பார்த்து அவள் நிற்க

நிலவோ அவளுக்காக சற்று முன்னதாக வந்து

எதிர் திசையில் மேகத்திற்குள்ளே ஒளிந்ஹு கொண்டது

நிலவைக் காணாது அவள் முகம் வாட

செய்தி அறிந்து எட்டிப் பார்த்தது வளர்பிறை

‘அதோ அங்கே பாருமா’ என்று நான் கை நீட்ட

நிலவைக் கண்ட மகிழ்வில் அவளும் கை நீட்டி

மழலை மொழியில் ‘ஊ.ஊ..’ என்று

என் செந்தமிழும் படைக்காத கவிதை

ஒன்றைப் படித்தாள் …

இப்படித்தான் தினமும்

பொருள்தேடி, ஓடி, ஆடி களைத்த

என் ஒரு நாள் பொழுது

என் மடியில் அவள் பாடிய

கவிதையுடன்

இனிதே முடிகிறது.

                                                                                                                             –    பிரபு ராஜேந்திரன் 

—————————————————————————————————————————————————————–

ஓடி விளையாடாதே

ஓரிடத்தில் அமைதியாய் உட்கார்…

கூடி விளையாடாதே

தனிமையில் கணினியில் பிரயோஜனமாய் ஆழ்ந்திரு…

காலை எழுந்தவுடன் ஹோம் ஒர்க்

பின்பு கசக்கி பிழிந்தெடுக்கும் பள்ளி

மாலை முழுவதும் டியூசன்…

என்று வழக்கப் படுத்தப்பட்டது

பாப்பா…

                                                                                                              – உதயகுமார் பாலகிருஷ்ணன்

————————————————————————————————————————————————————–

யாருமில்லா வேளைகளில்

மிகுந்துவிடுகிறது

என் மேலான பயம் எனக்கு

                                                                                                                                    – பிரசாத்ராஜ்

————————————————————————————————————————————————————-

Advertisements

3 thoughts on “கவிதைகள்

  1. ஸ்ரீதர் பாரதியின் வரிகள் அருமை… தொடர்ந்து நல்ல படைப்புகளை வெளிக்கொணரும் சஞ்சிகையின் ஆர்வமும் முயற்சியும் பாராட்டுதலுக்குரியது…

    வாழ்த்துக்கள்…

  2. ஸ்ரீதர் பாரதியின் கவிதை அருமை. பிரபு ராஜேந்திரன் கவிதையில் தந்தையின் பாசம் வெளிப்படுகிறது. நண்பர் உதயக்குமாரின் கவிதை இன்றைய பள்ளிச்சூழலின் அவல நிலையைச் சொல்கிறது. பிரசாத்ராஜின் கவிதை நகுலனை நினைவுறுத்துகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s