ஜாவா

1 மெசேஜ் ரிசீவ்டு.

“ ‘பொல்லாதவன்’ படத்துக்கு சாயங்காலம் போலாம்டா. அடுத்த வாரம் நீ சென்னைக்கு போய் வேலைக்கு சேந்துடுவ.”

படுத்துக்கிட்டு டி.வி. சேனல்களை மாத்திக்கிட்டு இருந்த சேகர் மொய்தீன் அனுப்பியிருந்த மெசேஜை பாத்துட்டு எழுந்து குளிக்க போனான்.

சந்திரசேகரும் மொய்தீனும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். இருவரும் திருச்சிக்காரர்கள். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கவில்லை. சந்திரசேகரின் நண்பனின் நண்பனாக அறிமுகமாகி மொய்தீன் சந்திரசேகரின் ஆருயிர் நண்பனாகிவிட்டான். சந்துரு திருச்சி பிஷப் ஹீபர் காலேஜில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளான். மொயதீனுக்கு திருச்சியிலேயே நல்லா வேலை கிடைத்தது. சந்துருவுக்கு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. அடுத்தவாரம் அவன் சென்னைக்கு போகவேண்டும். அதனால் தான் மொய்தீன் இவனை இப்போது சினிமாவுக்கு கூப்டான்.

இருவரும் சோனா தியேட்டரில் படம் பார்த்துகொண்டிருந்தபோது சந்துரு மொயதீனிடம் பேச்சு கொடுத்தான்.

“சென்னையில டிராபிக் அதிகமா இருக்குமாடா?”

“ஆமா”

“எப்டிடா சமாளிக்கிறது?”

“பைக்லையா ஊர் சுத்தபோற. ட்ரிப்ளிகேன்ல உனக்கு மேன்ஷன். பக்கத்துலயே மௌன்ட் ரோடு. ஸ்பென்சர் பிளாசால உன் ஆபிஸ். அப்றம் என்ன உனக்கு டிராபிக் பத்தி கவலை. படம் பாருடா.”

சென்னை, சந்துருவுக்கு ஓரளவு செட்டாகிவிட்டது மூன்றுமாதத்தில். ட்ரிப்ளிகேன்ரி பிரியாணியும், மெரீனாவும், ஹிக்கீம்போதம்ஸும் அவன் வாழ்வோடு ஒன்றிவிட்டன.நைட்ஷிஃப்டுக்கு மாத்திட்டாங்கம்மான்னு அம்மாவுக்கு ஒருநாள் போன் பண்ணி சொன்னான் சந்துரு.

“மொய்தீன் மாதிரி யாராச்சும் உனக்கு கிடைச்சாங்கலாடா, சேகரு?”

“இதுவரைக்கும் யாரும் கிடைக்கலம்மா. ஆனா ஆலன்னு ஒருத்தர் ஆபீஸ்ல இருக்றாரு. ஆனா என் வயசு இல்ல அவருக்கு. அவரோட பையன் டென்த் படிக்றான். ஆலன் தான் கொஞ்சம் குளோஸா இருக்றாரு.”

“சரி.பத்ரமா இருடா. நைட் ஷிஃபடுனு உடம்ப கெடுத்துக்காதன்னு சொல்லிட்டு அம்மா போனை வைத்துவிட்டார்.

மூன்று மாதங்களில் சந்துரு நண்பர்களின் பைக்குகளை ஒட்டி பழகிவிட்டான். அப்படி ஒருநாள் நண்பனின் பைக் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் செல்லும்போது பஞ்சர் ஆகிவிட்டது. நல்லவேளையாக பக்கத்தில் மெக்கானிக் கடை இருந்தது. வண்டியைத்தள்ளி கொண்டு போய் அங்கே நிப்பாட்டினான்.

“அண்ணே. வண்டி பஞ்சர்ணே.”

“கால்அவர் வெயிட் பண்ணு. வேற வண்டிக்கு பஞ்சர் ஓடிட்டு இருக்கேன். முடிச்சிட்டு வரேன்.”

“சரிண்ணே”

மெக்கானிக் கடையை ஒருமுறை நோட்டம் விட்டான். பழைய புல்லட் போட்டோவும் வேற சில பழைய காலத்து பைக் போட்டோக்களும் ஒட்டப்பட்டிருந்தன.

“புல்லட் போட்டாவுக்கு பக்கத்துல ஒட்டியிருக்ற பைக் பேரென்னண்ண?”

“தம்பி, அது எஸ்டி…பாத்ததில்லையா?”

“இல்லண்ண”

இன்னொரு பைக் ஸ்டிக்கரின் பெயர் கேக்கலாம் என நினைத்தான். அதையும் பாத்ததிளையான்னு கேட்டுடுவாரோன்னு அமைதியாகவே இருந்தான். ஆனால் அவன் அந்த பைக்கையே பார்த்துகொண்டிருந்ததை மெக்கானிக் பார்த்து விட்டு, “தம்பி, இந்த வண்டி பேரு ஜாவா. செம வண்டிப்பா. ஒருகாலத்துல ஜாவ பைக்ல போறவங்க முகத்துல அப்டி ஒரு பூரிப்பு இருக்கும்பாரு. இப்பல்லாம் அந்த பைக்க ரோட்ல பாக்கவே முடியல.”

அதற்கு பிறகு அவர் சந்துரு கொண்டு வந்த பைக்கை பஞ்சர் ஓட்டும் வரை ஜாவா பைக்குகளைப் பற்றியே பேசினார்.

ஒருவாரத்திற்கு பின் ஒருநாள் அவன் அலுவலகத்திற்கு நுழையும் போது ஆலன் ஏற்கனவே அலுவலகத்திற்கு வந்திருந்ததைப் பார்த்தான் சந்துரு.

“என்ன சார், சீக்கிரமே வந்துட்டீங்கபோல”

“ஆமாப்பா. சாயந்திரம் எக்மோர்ல பழைய பைக் வச்சிருந்தவங்களெல்லாம் ஒண்ணா கூடினோம். அது முடிஞ்சதும் ஆபீஸுக்கு வந்துட்டேன்.”

“என்ன பைக் சார் வச்சிருக்கீங்க. புல்லட்டா?”

“இல்ல. ஜாவா.1971ல எங்க அப்பா வாங்குனது.”

மெக்கானிக் சொன்னதிலிருந்து ஜாவா பைக் மேல் அவனுக்கு ஆர்வம அதிகமாகியிருந்தது. ஆலனிடம் பேச்சு கொடுத்தான்.

“ஸ்பேர் பார்ட்ஸ்லாம் இப்போ கிடைக்குறதில்லையே.”

“ஆமாப்பா. ஆனா, புதுப்பேட்டையில ஒரே ஒரு கடையில கிடைக்கும். அந்த கடை ஓனர் பேரு ரிஸ்வான். அவரோட மச்சான் ஹைதராபாத்ல மெக்கானிக்கா இருக்கான். ஹைதரபாத்ல ஜாவா பைக் ஃபேக்டரி இருந்துச்சு. ஆனா இப்போ அது பழைய குடோனா இருக்கு. ரிஸ்வானோட மச்சான் அந்த குடோன்ல ஏறிக்குதிச்சு ஜாவா ஸ்பேர் பார்ட்ஸ எடுத்துக்கிட்டு வந்து சென்னைல வந்து கொடுப்பான். ஆனா ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கிறது அவ்ளோ கஷ்டம். ரொம்ப ரிஸ்க் எடுத்து தேடி தேடி தான் எடுத்துட்டு வருவான்.

“அப்டியா !!”

“பெருங்குளத்தூரிலிருந்து 10 வருஷத்துக்கு முன்னாடி ஒருநாள் விடிகாலைல ஜாவா பைக்ல வந்துட்டு இருந்தபோது என்னை கிராஸ் பண்ணி போன ஒரு கார் என் வழியை மறிச்சி நின்னுச்சு. அதிலிருந்து ரஜினி இறங்கி வந்தாரு. எனக்கு இந்த வண்டியை ஓட்டனும்னு தோணுது. உங்களுக்கு அவசரமான வேல இல்லன்னா என் வீடு வரைக்கும் என் கார்ல வரீங்களா? டிரைவர் உங்கள கூட்டிட்டு வருவாருன்னு சொன்னாரு. நானும் சரின்னுட்டேன். அங்கிருந்து போயஸ் கார்டன் வரைக்கும் ரஜினி என் ஜாவா பைக்ல ஓட்டிட்டு வந்தாரு. அவர் வீடு வந்ததும் காபி, பிஸ்கெட்ஸ் கொடுத்தாரு. ஜாவா எனக்கு ரொம்ப புடிச்ச பைக். உங்க பைக்க ஓட்டிட்டு வரும்போது எனக்கு அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. பெட்ரோலுக்கு பணம் கொடுத்து வாசல் வரைக்கும் கொண்டுவந்து என்னை விட்டார் ரஜினி.”

ரஜினி ஒட்டின ஜாவா பைக்க நான் ஓட்டிப் பாக்குறேன்னு சொல்லி ஆபீஸ்டைம் முடிஞ்சதும் ஓட்டிப்பாத்தான் சந்துரு.

மொய்தீன் போன் பண்ணியபோது ஆலன் சொன்ன ஜாவா தகவல்களை சொன்னான் சந்துரு.

“நம்புறமாதிரி இல்லையேடா” – மொய்தீன்.

“டேய். அவர் என்கிட்டே சொன்னப்போ நான் நம்பிட்டேன்டா. நீயும் நம்பிடு, ப்ளீஸ்”

–    முருகராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s