இந்திய சினிமா – நூறு ஆண்டுகள்

p1 copy1913ல் தாதாசாகிப் பால்கே என்று அழைக்கப்பட்ட துண்டிராஜ் கோவிந்த் பால்கே “ராஜா ஹரிச்சந்திரா” என்ற மௌனப் படத்தை எடுத்தார். அதுதான் இந்தியாவின் முதல் படம்; இந்தியராலேயே எடுக்கப்பட்ட முதல் படம். ஆகையால் 2013ம் ஆண்டை இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டாக கொண்டாடுகிறோம். “ராஜா ஹரிச்சந்திரா” – மராத்தி மொழி படம். படத்தின் நீளம் நாற்பது நிமிடங்கள் மட்டுமே. அதன்பின்னர் அவர் நிறைய படங்களை எடுத்தார். 1931ல் முதல் டாக்கி “ஆலம் அரா” வெளியானது.

‘ராஜா ஹரிச்சந்திரா’ வெளியாகி நூறு ஆண்டுகள் வெளியாகி உள்ள நிலையில் இந்திய சினிமாத்துறை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவில் தான் ஆண்டுதோறும் அதிகமாக திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகமாக எடுக்கப்படும் படங்கள் பாலிவுட் படங்களே (மும்பையில் எடுக்கப்படும் ஹிந்திப்படங்கள்). அதற்கடுத்து தென்னிந்தியப்படங்கள், மேற்கு வங்காளப்படங்கp2 copyள்.

மும்பைக்கு பல “முதல்” முக்கியத்துவங்கள் உண்டு. நாட்டின் முதல் ரயில் மும்பைக்கும் தானேவுக்கும் இடையில் தான் 1853ல் ஓடியது. முதல் பருத்தி நூற்பாலை மும்பையில் தான் 1854ல் நிறுவப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் மும்பையில் தான் 1885ல் கூடியது. தாதாசாகிப் எடுத்த ‘ராஜா ஹரிசந்திரா’ மும்பையில்தான் 1913ல் திரையிடப்பட்டது. ‘ஆலம் அரா’ திரைப்படம் மும்பையில் தான் 1931ல் திரையிடப்பட்டது.

இந்தியாவில் அதிகமாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் அவைகளின் மொத்த வருமானம் தொலைக்காட்சித்துறையை விடக் குறைவாகவே உள்ளது. இத்தனைக்கும் தொலைக்காட்ச்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் 33% சதவீதம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளே. 2011ம் ஆண்டிற்கு பிறகு இந்திய சினிமா அதிகமாக வருவாயை ஈட்ட ஆரம்பித்துள்ளது.

p1-22011ல் வெளியான 5 படங்கள் நூறுகோடிக்கும் மேல் சம்பாதித்துள்ளன. பெருநகரங்களில் மல்டிபிளக்ஸ், மால்கள் அதிகமாக திறக்கப்படுவதும், அத்தகைய மால்களில் தியேட்டர்கள் இருப்பதும் சினிமாக்களின் அதிக வருமானத்திற்கு காரணம். 1000 திரைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் தான் பெரியத்திரைப்படங்கள் என்ற காலம் போய் 2000, 3000 திரைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் தான் தற்போது பெரியப்படங்கள். மல்டிபிளக்ஸும் இதற்கு முக்கிய காரணம். பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் 70% மல்டிபிளக்ஸ்களில் திரையடப்படும் படங்களில் இருந்து தான் வருகிறது.

p3 copyசமீபத்தில் பாலிவுட்டில் பெருவெற்றி அடைந்த ‘வாண்டட்’, ‘பாடிகார்ட்’, ‘ரவுடி ரத்தோர்’ போன்ற படங்கள் தென்னிந்திய சினிமாக்களில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை. ஹிந்திப்படமான ‘தபாங்’கிலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட படமான ‘ஒஸ்தி’ சரியாக ஓடவில்லை. தபாங்கையும் ஒஸ்தியையும் இணைத்து ரீமேக் செய்யப்பட்ட தெலுங்குப்படமான “கப்பர் சிங்’ பெருவெற்றியடைந்தது.

2009 இறுதியில் வெளியான “3இடியட்ஸ்” ஹிந்தி படத்தை 40 மில்லியன் மக்கள் தியேட்டரில் பார்த்துள்ளனர். ஆனால் அதே திரைப்படத்தை தொலைக்காட்சியில் 200 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். 35 கோடியில் எடுக்கப்பட்ட அப்படம் உலக அளவில் ஈட்டிய வருமானம் ரூ.385கோடி.

ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன் நூறு நாட்களை கடந்து ஓடும் திரைப்படங்களைத்தான் வெற்றிப்படங்கள் என அழைக்கப்பட்டன. ஆனால் இப்போது 100 கோடி ரூபாய் வருவாயை ஈட்டினால் தான் வெற்றிப்படங்கள் என அழைக்கபடுகின்றன.

தென்னிந்திய சினிமா:

p4 copy
2009ல் இயக்குனர் சித்திக் மலையாளத்தில் ‘பாடிகார்ட்’ என்ற படத்தை எடுத்தார். கேரளாவில் அப்படம் வெளியான பிறகு தமிழில் நடிகர் விஜயை வைத்து அதே படத்தை “காவலன்” என்ற பெயரில் எடுத்தார். தமிழில் வெளியான பிறகு, இந்தியில் சல்மான் கான் நடிக்க ‘பாடிகார்ட்’ என்ற பெயரிலேயே வெளியானது. இதனிடையே தெலுங்கு, கன்னட, பெங்காலி ரீமேக்கிற்கும் அதே திரைக்கதை விற்பனையானது. சமீபத்தில் வெவ்வேறு மொழியில் மெகா வசூலைத் தந்த திரைக்கதை என்ற பெருமை ‘பாடிகார்ட்’ படத்தையே சேரும். ஹிந்தியில் ரூ.320 கோடி, தமிழில் ரூ.102கோடி, தெலுங்கில் ரூ.55 கோடி, மலையாளத்தில் ரூ.20 கோடி, கன்னடத்தில் ரூ.8 கோடி அப்படத்தின் வசூல் என்று இத்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

P5ரஜினி நடித்த ‘எந்திரன்’ வெளியாகி முதல் மாதத்திலேயே ரூ.300 கோடி ஈட்டியது. விஜய் நடித்த ‘துப்பாக்கி’ முதல் வாரத்திலேயே ரூ.100 கோடி ஈட்டியது. இப்படம் 1000 திரைகளில் திரையிடப்பட்டது.

2011ல் தமிழில் 131 திரைப்படங்கள் வெளியாகின. இதில் 2 சூப்பர் ஹிட் படங்கள், 4 ஹிட் படங்கள். அதே ஆண்டு தெலுங்கில் 118 படங்கள் வெளியாகின. அதில் 1 சூப்பர் ஹிட் படமும் 5 ஹிட் படங்களும் உண்டு. 2012ல் தமிழில் 143 படங்கள் வெளியாகின. தெலுங்கில் 113 படங்கள் வெளியாகின.

soodhu-kavvum_1364369250மாறுபட்ட கதையம்சத்துடன், குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளன. தமிழில் அப்படி வெளியான படங்கள்: மெரீனா, அட்டகத்தி, பீஸா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சூது கவ்வும். தெலுங்கில் ஈகா மற்றும் ஈரோஜூல்லோ. மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், ஆர்டினரி, திட்டத்தின் மரையத்து. கன்னடத்தில் அதுரி. தமிழில் சென்ற ஆண்டு சில பெரிய நடிகர்களின் படங்கள் சரியாக ஓடவில்லை. அஜித்தின் பில்லா2, விக்ரமின் தாண்டவம், சூர்யாவின் மாற்றான், ஜீவாவின் முகமூடி.

p6 copyசென்ற ஆண்டு வெளியான பெரிய நடிகர்களின் தெளுங்குப்படங்கள் வெற்றிப்பெற்றுள்ளன. மகேஷ்பாபுவின் ‘பிஸினஸ் மேன்’, ‘பவன்கல்யாணின் ‘கப்பர் சிங்’.

பாலிவுட் சினிமாக்களைப்போல தமிழ், தெலுங்கு சினிமாக்களின் தயாரிப்பு செலவுகள் அதிகமாகி வருகிறது சமீப காலங்களில். இந்திய சினிமாவின் பிஸினஸ் மாடல் ஒவ்வொரு வருடமும் மாறி வருகிறது. அதற்கு காரணங்கள்: ரசிகர்களின் ரசனை, மீடியாக்களின் தலையீடு மற்றும் வெளியிடப்படும் திரைகள்.

டிக்கெட் விலை அதிகமாக விற்பனை ஆகும் வரை, பெருவாரியான மக்களை தியேட்டருக்கு வரவழைப்பது கடினமாகத்தான் இருக்கும்.

–    பிரசாத் ராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s