வற்றியுள்ள மகாமகக்குளம்

Evening-Tamil-News-Paper_43697756529 (1)

சென்ற வாரம் விடுமுறைக்கு சொந்த ஊரான கும்பகோணத்துக்கு போயிருந்தேன். நண்பர்களுடன் மகாமகக்குளத்துக்கு சென்றபோது ஐந்து ஏக்கர் பரப்புள்ள குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளதைக் கண்டேன். மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது. பக்தி, சாஸ்திரம் என்ற பெயரில் தேங்காய், புடவை, மண்பாண்டம் போன்ற பொருட்களை போட்டு குப்பை ஆக்கி அதன் கழிவுகளும் அங்கு கிடந்தன. வயதான்அ ஒருவரும் இளைஞர் ஒருவரும் குளத்தின் உள்ளே அமர்ந்து மண்ணில் கிடக்கும் சில்லறைக்காசுகளைப் பொறுக்கி கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிய பிறகு அவர் காசுகளை எடுப்பதாகவும், இதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கூறினர். பின்னர், நண்பர்களுடன் பேசிய பொழுது மகாமகக்குளம் இவ்வளவு சிக்கிரம் வறண்டதற்கு காரணம் என்ன என்று பேசினோம். வெயிலின் தாக்கம் என்றேன். அதுமட்டுமல்ல குளத்தை சுற்றி சொகுசு தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள் போன்ற வணிகத்தளங்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுகிறார்கள் என்றார் நண்பர் சுரேஷ். மேலும் மகாமக குளத்தின் மேல் கரையில் இருந்த மிகப்பெரிய நீர் ஏற்றும் நிலையம் இப்போது அங்கு இல்லை. அந்த  இடத்தில கும்பகோணம் நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது. நீர்  ஏற்றும் நிலையத்தின் உபரி நீர் மகாமகக்குளத்திற்கு விடப்படும்.  அந்த நீர் வரத்து இப்போது இல்லாமையும் ஒரு காரணம் என்று நண்பர் கௌசிகன் கூறினார்.

நகராட்சி நிர்வாகம் குளத்தில் துப்புரவு பணி மேற்கொண்டு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள். .

நகரமயமாதல் மற்றும் வணிகமயமாதலின் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் இத்தகைய செயல்களுக்கு சுரண்டலுக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தும் வரை அரசு தன் பொறுப்பையும் கடமையையும் மறந்தாற்போல் நாடகம் தான் ஆடும்.

–    கனகராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s