வீரத்திருமகன் கவிதைகள்

ஒவ்வொரு காலையிலும்
என்னை எழுப்புகிறது
அடி வாங்கும் பயம்

***

கை தட்டி
வாய் பொத்தி
அமர்ந்திருக்கிறேன்
பள்ளித்தோட்டத்தில்
படபடத்துத் திரியும்
பட்டாம்பூச்சி வாழ்க்கை
அடடா…

***

ஆங்கிலப்பள்ளியில்
எப்போதும் கேட்கிறது
சிரிப்பும் பேச்சும்
மறுக்கப்படுகிறது
எங்களுக்கு மட்டும்

***

தமிழனுக்கு மறந்து போனது
பத்துப்பாட்டு
பள்ளி ஆண்டு விழா மேடையில்
குத்துப்பாட்டு

***

நிலாவை அழைத்து
பசியாற்றிய
தாய்மரபு
ஆசிரியை பெயர் சொல்லி அச்சுறுத்தி
குடல் நிரப்புகிறது.

***

கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள்
எங்களையும்
கொஞ்ச
நேரம்
ஒதுக்குங்கள்

-செ.ப. வீரத்திருமகன்

***

Advertisements

One thought on “வீரத்திருமகன் கவிதைகள்

 1. “” சஞ்சிகை இதழில் ” வெளி வந்த உங்கள் கவிதை யில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் வாழ்த்துகள் வீர திரு மகன் தோழரே !

  ஆங்கில பள்ளியில்
  என்னை விட்டு
  அப்பா போகிறார்
  அரசு பள்ளியில்
  சம்பளம் வாங்க ….
  ******
  தமிழனுக்கு மறந்து போச்சு
  பத்து பாட்டு
  பள்ளி ஆண்டு விழா மேடையில்
  குத்து பாட்டு
  ********

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s