“மாறுதல் என்பது மாறாதது.” – இளஞ்செழியன்

பருவமழை பொய்த்துப்போனது…
காவிரியும் பெரியாறும்
தடைப்பட்டுப்போனது…
எங்கள் பயிர்களெல்லாம்
நீரின்றி வாடிப்போனது…

இயற்கை வாழ்வை – மறந்து
செயற்கை வாழ்வைத் தேடியதால்
அறுவடை திருநாள் என்பது எங்களிடம் இருந்து
அறுபட்டு போகுமோ?

01இந்த கேள்வியின் நிலைக்கு நானும் ஒரு காரணம். என் உணவிற்கானப் பொருட்கள் யாருடைய உழைப்பில், எங்கிருந்து வருகிறது என்ற கவலை இல்லாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறேன் என்னிடம் பணம் இருக்கும் தைரியத்தில். இந்த உணவுப்பொருட்கள் இங்கு விளைய நீர் இல்லையென்றால்? அதனை நான் வேறிடத்தில் இருந்து அல்லவா பெற வேண்டிய சூழ்நிலை. அப்படியானால் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு நான் தாக்குபிடிப்பேனா? இந்த சூழ்நிலை மாற மாற்றுவழியே இல்லையா? என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கிறது தற்போதைய உணவுப்பொருட்களின் விலை ஏற்றத்தால்…

மாற்றுவழியே இல்லையா? ம்ஹூம்… இருக்கும் வழிகளை எல்லாம் என் சுயநலத்திற்காக அதிகமாக பயன்படுத்திக்கொண்டேன். விலைக்கு வந்த விளைநிலத்தை விலை கொடுத்து வாங்கிக்கொண்டு வெறும் நிலமாக போட்டு வைத்துள்ளேன். ‘எதையும் விதைக்காமலே ஒரு நல்ல அறுவடைக்கு’.

03நான் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு முன்னால், முன்பு லேசாக பெய்த மழையில் தேங்கிய நீரை விரும்பாமல் மண் மற்றும் சிமெண்ட் கலவை போட்டு மேடாக்கிகொண்டேன். இப்போது தெருவின் அனைத்து வீடுகளுக்கு முன்னும் அதே நிலையைத்தான் அரசு உருவாக்கி தந்தது. என்ன ஒரு ஆச்சரியம்! இப்போது நீர் என்பது என் வீட்டிற்கு முன் மட்டுமல்ல… எங்களது தெருவில் ஊரின் குளம், குட்டையில் கூட தேங்குவதில்லை. என்ன ஒரு வெற்றி! வீட்டுக்கு முன்னால் இருக்கும் ஒற்றை மரத்தையும் வீட்டின் முன் அழகை மறைக்கிறதென்று வெட்டித் தள்ளினேன். பற்றாக்குறைக்கு தெருவில் மீதமிருந்த மரங்களை மின் கம்பிக்கு தடையாக உள்ளதென்று வெட்டித்தள்ளினோம். இப்போது தெருவில் இரண்டு மரங்கள் மட்டுமே உள்ளன. நிழல் தரும் மரங்களாக அல்ல. குழல்விளக்கு மாட்டிய மின் கம்ப மரங்களாக. மின் கம்பிக்கு தடையாக உள்ளதே என்று மரங்களை வெட்டினோம். இப்பொழுது மின்சாரமே தடைபட்டு போயுள்ளது. இனி வெட்டுவதற்கு ஒன்றும் இல்லை. ஒதுங்குவதற்கு கூட மரங்களே இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் செய்தவற்றைப் போலவே என் நண்பர்களும் செய்திருந்தனர். என்ன ஒரு கூட்டு வெற்றி! இதுவல்லவோ ‘ப(ஞ்ச)சுமைப் புரட்சி’.

மாற்று வழியே இல்லையா? என்ற கேள்வி மீண்டும் மனதிற்குள் சுற்றிக்கொண்டு இருந்தது. விவசாயம் பெருக வேண்டும் என்றால்! நீர்வளம் வேண்டும். நீர் வளத்திற்கு மழை பெய்தல் ஒன்றே தீர்வு என்ற பதிலை தவிர வேறெதுவும் தோன்றவில்லை. மழைக்கான ஒரேவழி நிச்சயம் மரங்கள் நிறைந்த பகுதியாக நம் பகுதியை மாற்ற வேண்டும் என்று மனம் கூறியது.

02
எத்தனை மரத்தை காலி பண்ணியிருப்ப?இப்ப நீ நடப்போகும் மரத்தினால் தான் மழை பெய்து விவசாயம் செழிக்கப்போகிறதா? என்ற ஏளனக்கேள்வி என்னை செவியில் அறைந்தாலும் எனக்கு உணவு தரும் முகம் தெரியாத அந்த விவசாயிக்கு நான் செய்யும் நன்றியுணர்வாகவே எண்ணுகிறேன். காலம் கடந்து என்னுள் இந்த மனமாற்றம் ஏற்பட்டாலும் “மாறுதல் என்பது மாறாதது” என்பதால் நம்பிக்கையுடன் ஒரு செடியை நடுகிறேன் மழை வேண்டி.

– மே.இளஞ்செழியன், மதுரை
ilanchezhiyankathir@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s