பெண்ணுரிமை

தலைப்பைப் பார்த்ததும், “இப்போது பெண்களுக்கு என்ன குறைச்சல், அவங்க எல்லா துறையலயும் சாதிச்சிட்டுத்தானே இருக்காங்க. இப்பல்லாம் எங்க அடிமைப்படுத்தப்படுறாங்க? என் சம்சாரம் என்னை அடிக்கிற அளவுக்கு நான் அவளுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன்” என்ற பல விவாதங்கள் எழலாம். ஆனால், இப்படியான விவாதங்கள் எழுவதே பெண்ணியம் இன்னும் மலரவில்லை என்பதற்கு உதாரணம்தான்.

எனது அம்மாவின் இளமைக்காலங்களில் அவரது தாய்வீட்டில் சோறு ஆக்கினால் அது அவரின் அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் மட்டும்தான். பெண் பிள்ளைகளுக்கு எப்போதும் பழையது தான். இந்நிலை 70களில் பல வீடுகளில் இருந்துள்ளது. ஆதியில் விவசாயத்தினை கண்டுபிடித்த பெண்கள் உண்மையில் இது போல வரைமுறைப்படுத்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டா கிடந்தனர்? பெண்ணாதிக்கத்தில் இருந்த சமுதாயம், பெண்களை தெய்வமாக வைத்திருந்தது. இன்றும் கிராமங்களில் விவசாயத்திற்கு மழை வேண்டி மாரியம்மனுக்கு விழா எடுப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் நடத்திய வழிபாடுகளும் இன்று ஆண் பூசாரிகளின் கைகளில் சிக்கி விட்டது. அச்சம், மடம், நாணம் பெண்ணுக்கு அழகு என்ற வாக்கியத்தினால் துணிச்சல், வீரம், அறிவு போன்றவற்றை பெண்களிடமிருந்து பறித்தது தான் இன்றைய சமுதாயத்தின் சாதனை.

நமது அப்பா, அப்பாவின் அப்பா, அவருடைய அப்பா என ஆண் வழிச்சமுதாயத்தில் பழக்கப்பட்ட நாம் என்றைக்காவது நமது அம்மா, அம்மாவின் அம்மா, அவருடைய அம்மா என தாய்வழி சமுதாயத்தினைப் பற்றி சிந்தித்து இருப்போமா? இப்படியான சிந்தனையை தூண்டாத ஆண்வழி சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு பெண்கள் சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என பேசுவது அபத்தமானது; ஆபத்தானது. தாய்வழிச்சமுதாயம் மலரும் போதுதான் இந்த சமுதாயம் முன்னேற்றமடையும். அதற்கு பெண்களின் மரபணுவை தூண்டிவிடக்கூடிய வழியைத்தான் தேட வேண்டியுள்ளது.

-ரகுநாத், மதுரை.
thamizhmani2012@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s