உத்தரகாண்ட் சோகம்

இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது ,மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுப்பட பலன்களையும் அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன…….

அயல்நாட்டு மக்கள் மீது வெற்றிவாகை சூடியவனை போல, இயற்கைக்குப் புறத்தே நிற்கும் ஒருவனைப் போல இயற்கை மீது எவ்விதத்திலும் நாம் ஆளுகை புரியவில்லை என்பதும் அதற்கு பதிலாக நமது சதை, ரத்தம், மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம் அதன் நடுவில் வாழ்கிறோம் என்பதும் இயற்கையின் நியதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைபிடிப்பதிலும் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது என்பதும் ஒவ்வொரு படியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது.

-“மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” நூலில் எங்கல்ஸ்

தற்போது மீண்டும் வெள்ளங்கள் இமயமலை பிராந்தியத்தை அழிக்கின்றன; மீண்டும் அதே குற்றவியல்புடைய அலட்சியம் மற்றும் அரசு இயந்திரத்தின் அக்கறையின்மை இந்த அழிவை மோசமாக்கியது. உத்தராகண்ட்டில் உள்ள பேரிடர் மேலாண்மை அமைப்பின் உட்கட்டுமான குறைபாடு, தாமதமாக எச்சரிகை விடுத்தது மற்றும் டில்லியில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத அரசு – துரதிஷ்டவசமாக இவையெல்லாம் வருத்தமளிக்கக்கூடிய பழக்கமான ஒன்றுதான்.

ஆனால் ,சிதைக்கப்பட்ட தங்களது வாழ்வாதாரங்களையும் வாழ்க்கையையும் உத்தராகண்ட் மக்கள் துணிச்சலாக மறு கட்டமைப்பு செய்ய முயற்சி மேற்கொண்டாலும் , தற்போதைய அழிவானது, ஒன்றுக்கும் மேற்பட்ட பல வழிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்வது அவசியமாகிறது. இந்த வெள்ளங்கள் மற்றும் அது ஏற்படுத்திய அழிவுகளானது நமக்கு முக்கிய பாடங்களை கற்பித்திருக்கிறது என்றாலும் விஷயம் நிர்வாகத்திறனின்மை மற்றும் அசிரத்தைகளைத் தாண்டி வெகு தொலைவில் உள்ளது.

தொடங்குவதற்குமுன் இமயமலையின் மாண்புகளை நினைவுபடுதிக்கொள்வது முக்கியம், அது(இமயமலை) பல நதிகளுக்கு நீரினை வழங்குகிறது, யமுனை கங்கை மற்றும் அதன் கிளையாறுகள் இதில் அடங்கும் பெரும்பாலும் இவைகள் இளம் மலைகளிலேயே ஓடுகின்றன. இப்புதிய மலைகள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள குறிப்பிட காலம் தேவையாக உள்ளது. ஆனால் அணைகள் ,சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை போன்ற பெரும் கட்டுமான வடிவில் நிலைகுலையவைக்கும் தொடர்ச்சியான தாக்குதலால் இவை குறிப்பிட கோணத்தில் சாயத் தொடங்குகிறது.

இரண்டாவதாக இமயமலைப் பிராந்தியம் முழுவதும் வழமைக்கு மாறான நுட்பமான சூழல் அமைப்பை கொண்டதாகும் ,இதில் குறிக்கிட்டு திருத்தம் செய்வது நமது சொந்த துணிச்சலை பொறுத்தது; இந்த சூழல் அமைப்பு அதன் மதிப்பை வேண்டுகிறது , “அதன் சட்டங்களை அறிந்துகொள்” என்று எங்கெல்ஸ் சொன்னதை நம்மிடம் வேண்டுகிறது.நமது கொள்கை வகுப்பாளர்கள் இவை எல்லாவற்றையும் முற்றிலுமாக மறந்துவிட்டு “வளர்ச்சி” கோலத்திற்காக அனைத்து கட்டுமானங்களையும் அனுமதித்து அழிவெனும் கடும் பின் விளைவுகளை கவனத்தில் கொள்ளாமல் அதன் சூழல் அமைப்பின் மீது தொடர்ச்சியாக குறுக்கிட்டு வருகின்றனர்.

இமயமலைகளில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான சுரங்கம் தோண்டும் செயல்பாடுகள் , நீர்மின் நிலையம் அமைத்தல்,சாலை மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானங்கள் போன்றவற்றால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று காலம்தோறும் சுற்றுச்சூழல்வாதிகள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர். நிலச்சரிவுகள் மற்றும் கடும் வெள்ளங்கள் இப்பிராந்தியத்தில் வசிக்கும் மக்களுக்கு புதிதல்ல – அதிகமான எண்ணிக்கையில் “வளர்ச்சி ” திட்டங்கள் செயல்படுத்தப்படுவது, அழிவின் தீவிரத்தன்மை அதிகரித்ததன் ஒரே முக்கிய அம்சமாகும்.

எதார்த்த நடப்புகளே இதைத் தாமாக கூறும்: சிறியதும் பெரியதுமான கிட்டத்தட்ட 300 அணைகள் இமயமலை நதிகளுக்கு குறுக்காக கட்டுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன ,இதன் விளைவால் 1700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள காடுகள் மூழ்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இமயமலைப் பிராந்தியத்தில் சுரங்கம் தோண்டும் செயல்பாடுகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.இவற்றோடு பெரு அணை கட்டுமானங்கள் சேர்ந்தால் பெரியளவிலான காடுகள் அழியப்போவதொடு நிற்கப்போவதில்லை மாறாக இளம் மலைகள் சிதறி அதன் சிதைவுப்பகுதிகள் இமயமலை நதிகளில் அதிகளவில் படியத்தொடங்கும்.
2012-13 இல் நிகழ்ந்த உட்டர்காஷி அழிவு இதை உறுதிசெய்கிறது.அணை கட்டுமானங்களாளும் சுரங்கம் தோண்டுதளாலும் ஏற்பட்ட சிதைவுகள் நதிகளில் குவிவதால் கன மழைகளின்போது பெருவெள்ளப்பெருக்கம் உருவாக சாத்தியமாகிறது. இதைத்தவிர உத்திராகன்ட் அரசானது வரைமுறையற்ற சுற்றுலா ஏற்பாடுகளை முடிக்கிவிடுவதால் (பெரும்பாலும் மதம் சார்ந்த சுற்றுலாக்கள்) மலை ச்சாலைகளில் வாகன நெருக்கடிகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருக்கின்றன.

டில்லியைச் சேர்ந்த விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) செய்த ஆய்வின்படி உத்திராகன்ட் 2005-2006 இல் பதிவு செய்த வாகனங்களின் எண்ணிக்கை 83000 ஆக இருந்தது ,தற்போது 2012-2013இல் இந்த எண்ணிக்கை 180000 ஆக உயர்ந்துள்ளது.மேலும் பெரும்பாலான வாகனங்கள் சுற்றுலா பயணிகளை ஏற்றிசெல்வதற்காக உள்ளன என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இவற்றோடு மட்டும் இல்லாமல் ,ஆற்று வெள்ளம்போல் சாலைகள் மற்றும் பாலங்களை உத்தராகண்ட்டின் எந்த நகர்ப்பகுதிகளிலும் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம் – இமயமலை நதிகளின் வெள்ளப்பாதைகளிலும் ,வெள்ளச் சமவெளிகளில் கூட ஏன் மலை உச்சி பகுதிகளில் கூட கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் ,விளைவு பேரழிவைத் தவிர ஒன்றுமில்லை.

பொதுவாக ஓரு நதிக்கு கன மழைகளை தாங்குவதற்கு ஏற்ப பரவலான வெள்ளப்பாதைகள் இருப்பது இன்றியமையாதது; இந்த வெள்ளப்பாதைகள் இயற்கையாகவே வெள்ளத்தை கட்டுப்படுத்தத்தக்க ஒழுங்கமைவுடன் செயல்படுபவை.மரபார்ந்தவகையில் ,வெள்ளப்பாதை பகுதிகளில் அதிக அளவிலான குடியிருப்பு கட்டுமானங்கள் மேற்கொள்வது காலந்தோறும் தவிர்க்கப்பட்டே வந்துள்ள து .ஆனால் தற்பொழுது மனித நடவடிக்கைகளால் வெள்ளச்சமவெளி மற்றும் வெள்ளபாதைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் ஒழிந்தே போய்விட்டது. ஒட்டுமொத்தமாக, உத்தராகண்ட்டின் “வளர்ச்சி” கோலத்திற்கு, நிலச்சரிவுகளும் வெள்ளப்பெருக்கும் கிடைத்துள்ளன.நமது கொள்கை வகுப்பாளர்களை பொறுத்தவரை தாங்கு திறன் என்றொரு கருத்தாக்கமே இல்லை எனத் தோனுகிறது.

மலைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் மட்டும் வரைமுறையற்ற சுற்றலா ஊக்குவிப்புகளால் கடுமையான பின்விளைவுகளை எதிர்நோக்கும் சாத்தியமுள்ளது என்று சுற்றுச்சூழல்வாதிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மட்டும் அதிகாரிகளிடம் எச்சரிக்கை செய்யவில்லை மாறாக இந்திய காட்டுயிர் நிறுவனம் (WWI) அலக்நந்தா மற்றும் பகிரிதி நதிகளுக்கு குறுக்கே பல நீர்மின் நிலைய திட்டங்களை அமைக்க இருக்கும் உத்தராகண்ட் அரசின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தியது. WWI அறிக்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் செயல் நிலைப்படுத்தப்பட்ட இத்திட்டமானது உத்தராகண்ட் மாநிலத்தின் 22 % வனப்பரப்பை அழித்தும் இமயமலை சூழலில் கடும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

இதேபோன்று 300 க்கும் மேற்ப்பட்ட நீர்மின் திட்டங்களால் வெள்ளப்பெருக்கு போன்ற கடும் பேரழிவுகள் ஏற்படலாம் என 3 வருடத்திற்கு முன்பே CAG எச்சரிக்கை செய்திருக்கிறது. ஆனால் மாநில அரசின் வெறித்தனமான “வளர்ச்சி”கோல ஊக்குவிப்பிற்கு முன்பாக இவ்வறிக்கைகள் அரிதாகவே தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இறுதியாக எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியது போன்று, இயற்கை நம்மை பழிவாங்கியது.

மேலும் நடந்த இந்த பேரழிவில் ,பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்துகிற பங்கினை புறந்தள்ள சாத்தியமில்ல . கால நிலை மாற்றத்தோடு தொடர்புடைய தீவிர கால மாற்ற நிகழ்வுகள் உத்தராகண்ட்டில் நிகழலாம் என்ற அதிதீவிர பட்டியலில் பல வல்லுனர்கள் சரியாக இவ்வழிவை அனுமானித்திருக்கின்றனர். வளிமண்டலம் வெப்பமயமாதலால் ஏற்படும் மழைப்பொழிவு மாற்றத்தோடு இவ்வெள்ளபெருக்கிற்கும் தொடர்புள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் வெப்பநிலையால், மழைபொழியும் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு சீராக நீண்ட காலம் மழை பொழிவதற்கு மாறாக குறைந்த காலத்தில் கன மழை பொழிவது போன்ற புது மழை பொழிவு பண்புகளை உருவாக்குகிறது. பருவநிலை மாற்றத்தாலும் அதன் விளைவுகளாலும் ஜூன் மாதம் அம் மலைகளில் பெய்த 330mm எனும் சாதனை மழை அளவையை எளிதாக புறந்தள்ள முடியாது.இத்தோடு பெருமளவிலான மண் அரிப்புகள் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட காரணிகளால் பெரும் வெள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் சாத்தியத்தை அதிகரிக்கசெய்கிறது.

உத்தராகண்ட் அழிவானது பின்வரப்போகும் பேரிடரை நமக்கு நினைவூட்டியிருக்கிறது
இந்த அழிவிற்கு நிர்வாகத் தோல்வி மட்டுமே காரணம் என்ற மையநீரோட்ட அரசியலை உத்திராகன்ட்டின் எதிர்கட்சிகள் மற்றும் டில்லியும்கூட முன்னெடுக்க முயற்சிக்கின்றன என்பதை இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டும்.ப சா காவும் உத்தராகண்ட் டின் இவ்வளர்ச்சி மாதிரியில்தான் ஈடுபட்டிருகிறது – வரைமுரையற்ற சுற்றுலா ஏற்பாடுகள், பெரியளவிலான சுரங்கம் தோண்டுதல் , நீர்மின் நிலையம் அமைத்தல்,சாலை, பாலங்கள் மற்றும் நெடுஞ்சாலை கட்டுமானங்களை மலை முகடெங்கும் மேற்கொள்ளுதல் போன்றவைகளும் இவ்வழிவிற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மலைப் பிரதேசங்கள் மற்றும் நாட்டின் இதர பகுதிகளிலும் முற்றிலும் புதிய வடிவத்திலான “வளர்ச்சி” தேவையை ஒட்டி நாம் இந்நேரத்திலாவது விழித்துக்கொள்ளவேண்டும்.

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை.
arunpyr@gmail.com

http://www.cpiml.org/ இணையத்தளத்தில் வெளியான “Uttarakhand’s Himalayan Tragedy: Suffering for the Crimes of the Ruling Class ‘Development’ Paradigm” என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பே இக்கட்டுரை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s