கொம்பாந்தை

207780_267628220032729_1087670548_n

இந்தியாவில் வேகமாக அழிந்துவரும் பறவை இனங்களில், கொம்பாந்தைகளும் (Indian Great horned Owl) ஒன்று. தற்போதைய கணக்கெடுப்பின்படி 2000 ஜோடிகளுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்தியாவில் எஞ்சியிருக்கின்றன. புதர்க்காடுகள் மற்றும் மலைப்பாங்கான பாறைகளில் வாழும் இவ்வாந்தைகள் பெரும்பாலும் அடர்த்தியான காடுகளை வாழிடங்களாக தெரிவுசெய்வதில்லை. இந்தியா,பாகிஸ்தான் மற்றும் பர்மாவில் காணப்படும் இவ்வாந்தைகள், நிறம் மற்றும் அளவைப் பொறுத்து 4 வெவ்வேறு இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அளவில் பெரிதாகவும் (56 செ.மீ), கண்கள் கருப்பு வளையமுடைய ஆரஞ்ச் கலந்த மஞ்சள் நிறமுடனும், கால்களில் மீன்பிடி ஆந்தைகள் போலல்லாமல் இறகுடனும், தலையில் இரு மருங்கிலும் சிறு கொம்பு போன்ற மயிர்கொத்து (1-2 செ.மீ) புடைத்தும் இவை காணப்படும். சிறு பாலூட்டிகள், நண்டுகள் மற்றும் மீன்களே இவற்றின் முக்கிய இரைகள். நவம்பர் முதல் ஏப்ரல் வரை இவற்றின் இனெப்பெருக்க காலமாகும். ஒரு முறைக்கு 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். இவை கூடில்லாமல் சிறிது மண்ணைப்பறித்து அதில் முட்டையிடும்.
வயல்வெளிகளில் பயிர்களை மேயும் எலிகளின் எண்ணிக்கையை பெருமளவு வேட்டையாடி குறைக்கும் ஆந்தைகள் (சராசரியாக வருடத்திற்கு 300க்கும் மேற்ப்பட்ட எலிகள்) பல்லுயிரிய வலைப்பின்னலின் முக்கிய கண்ணிகளாக உள்ளன. மனிதர்களால் அதிகமாக வேட்டையாடப்படுவதாலும், மலைமுகடுகள் வரைமுறையற்று வெட்டியெடுக்கப்படுவதாலும் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு அருகிவிட்டது. இவ்வாந்தையினத்தின் வீழ்ச்சிக்கு மற்றுமொரு முக்கிய காரணி, வேளாண்மையில் பூச்சிகொல்லி மருந்தின் உபயோகமாகும். பரிணாம வளர்ச்சிப்பாதையில் கடைக்கோடியில் தோன்றி மனிதயினம், நமது இருப்புக்கு முன் இப்புவியில் பலகோடி வருடங்களாய் தங்களின் வாழ்வை பகிர்ந்துகொண்டிருக்கும் உயிரினங்களின் வாழ்வாதார பிரதேசங்களை சிதைத்தும் அழித்தும் வருவது, நமது சுயநல அறிவற்ற நடத்தையின் கண்கூடான வெளிப்பாடே.

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை.
arunpyr@gmail.com
ஒளிப்படம்: வெங்கடேஷ் லிங்கராஜா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s