வெண் கழுத்து ஓணான் (Fan Throated Lizard)

Fan Throated Lizard
படத்தில் காணப்படும் ஓணானை சற்று உற்று நோக்கினால், இயல்பாக நாம் பூங்காக்கள் மற்றும் நமது வீட்டருகில் காணக்கிடைக்கும் ஓணான்களைப் போல் அல்லாது நிறத்திலும் வால் நீட்டத்திலும் சற்று வித்தியாசப்பட்டு இருப்பது தெரியும். பெரும்பாலும் சிறு சிறு பாறை, கல் குவியல்கள் நிரம்பிய சமவெளிப பகுதிகள் மற்றும் திறந்தவெளி காடுகளின் நிலப்பகுதியில் வாழும் தன்மை உடைய இவ்வகை ஓணானின் பெயர் Fan Throated Lizard. இதன் விஞ்ஞானப் பெயர் Sitana ponticeriana.

இந்தியா, நேபாளம், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இவ்வகை ஓணான்கள் காணக்கிடைக்கிறது. கூர்மையான தலை, முதுகுப்பகுதியில் வரிசையான (குறிப்பிட்ட இடைவெளியில்) கரும் புள்ளிகள் (சற்று அகலமாக) முதுகுக்கு சற்று கீழே இருபக்கத்திலும் மெலிதான வெண் பட்டைகள்(அல்லாது கோடுகள்), உடல் பாகத்தின் நீளத்தை விட ஒன்றரை மடங்கு நீளம் கொண்ட உருண்டையான நீண்ட வால் என தோராயமாக 7 இன்ச் நீளத்தில்(வாலையும் சேர்த்து) உடல் முழுதும் பழுப்பு நிறத்தில் காணப்படும். அவை அமர்ந்திருக்கும் அச்சிறு பாறை நிறத்தோடு முழுமையாக உருமறை தோற்றத்தில் (camouflage) ஒத்துப்போய் பாறையோடு பாறையாய் இருப்பதை கவனிக்கும் நொடியில், பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுப்போக்கில் சூழலுடன் தன்னை தகவமைத்துக்கொண்ட உயிரினங்களின் உயிர்ப்போராட்ட வாழ்வு கண் முன் நிழலாடுகிறது. சுமித் என்ற ஆய்வறிஞர் இவற்றில் இரண்டு விதமான நீளமுடைய இனங்கள் இருப்பதாக தெருவிக்கிறார். 70-80mm வரையில் வளரக்கூடிய ஒரு இனமும், 40-50mm வரையில் வளரக்கூடிய ஒரு இனமும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை
arunpyr@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s