தாமஸ் சங்காரா

“புரட்சியாளர்கள் கொல்லப்படலாம். ஆனால், அவர்களின் புரட்சிகர சித்தாந்தங்களை ஒருபோதும் கொல்லமுடியாது”
—-தாமஸ் சங்காரா

(தான் கொல்லப்படுவதற்கு ஒருவாரம் முன்பாக சங்காரா ஒரு கூட்டத்தில் பேசியது)

Sankara

தாமஸ் இசிடோரே நோயல் (Thomas Isidore Noël Sankara) என்கிற தாமஸ் சங்காரா 1983 முதல் 1987 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பர்கினோ பாசோ(Burkina Faso) நாட்டை ஆட்சி செய்த இளம் மார்க்சிய புரட்சிகர அதிபராவார். 1983 ஆம் ஆண்டு தன்னுடைய 33வது வயதில் ஆட்சி பொறுப்பை ஏற்ற சங்காரா முதலில் செய்தது நாட்டை சூழ்ந்துள்ள பஞ்சம் மற்றும் தன் நாட்டின் மீதான பிரெஞ்சு நாட்டின் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முற்பட்டது.

அதன்பின் அவர் செய்தது இதுவரை ஆப்ரிக்க கண்டத்தில் எவரும் செய்யத் துணியாத சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள். இந்த மாற்றங்களை உணர்த்தும் குறியீடாக அப்பர் வோல்டா (Upper Volta) என்று இருந்த தன் நாட்டின் பெயரை பர்கீனோ பாசோ(Burkino Faso) என்று பெயர் மாற்றம் செய்தார். பர்கீனோ பாசோ என்றால் நீதிக்காக போராடியவர்களின் நிலம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

அவரது வெளிநாட்டு கொள்கைகளில் முக்கியமானவை

 ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது.

 தன் நாட்டில் அதிகாரம் செலுத்த நினைக்கும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உலக வங்கிகளின் முயற்சிகளை தவிர்ப்பது.

அவரது குறிப்பிடத்தக்க பிற தேசிய கொள்கைகள்/சாதனைகள்

 கனிம வளங்களை நாட்டுடமையாக்கியது.

 வேளாண்மையில் தன்னிறைவை நெருங்கியது.

 பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசின் முக்கிய இலாகாக்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகாரங்களை பகிர்ந்தளித்தது.

 நாட்டில் அனைவருக்கும் கல்வி அளிக்கும் விதமாய் கல்வித்துறையை முன்னேற்றியது.

 தடுப்பூசி திட்டங்கள் மூலம் நாட்டில் மலிந்துள்ள பெரும் ஆட்கொல்லி நோய்களிடமிருந்து மக்களை காப்பது.

 பாலைவனமாகும் நிலப்பரப்பை தடுக்கும் பொருட்டு பத்து மில்லியன் மரக்கன்றுகளை நட்டது.

 நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து நிலங்களை மீட்டு குடியானவர்களிடம் அந்நிலத்தை கொடுத்து கோதுமை உற்பத்தியை இரட்டிப்பாக்கியது.

 பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் அமலில் இருந்த சுங்க வரி மற்றும் வீட்டு வாடகைகளை ரத்து செய்தது.

 நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாய் சாலை மற்றும் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தினார். நாட்டின் உட்புற கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அவர்களுக்கு தேவையான மருத்தவ மற்றும் கல்வி வசதிகளை அவர்களே செய்துகொள்ள உற்சாகமூட்டினார்.

 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் கட்டாய திருமணங்கள் இவற்றை தடுக்க கடுமையான சட்டம் இயற்றினார். இவற்றோடு நிற்காமல் அரசின் முக்கிய இலாகாக்கள் மற்றும் ராணுவத்தில் பெண்களை உயர் பதவிகளில் நியமித்தார். பெண்கள் வீட்டை விட்டு வெளிய வந்து வேலை பார்க்க ஊக்கம் கொடுத்து அவர்களின் கர்ப்பகாலத்தில் பள்ளி கல்லூரிகளில் தொடந்து வர அனுமதி அளிக்கப்பட்டது.

 எய்ட்ஸ் நோய் ஆப்பிரிக்காவிற்கே பெரும் அச்சுறுத்தல் என்று வெளிப்படையாக அந்நோயை அங்கீகரித்தது.

இவ்வாறு நாட்டில் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்திய சங்காரா தன் மக்கள் நலத்திட்ட பணிகளை தொடர்ந்திடவும், தற்காத்து கொள்ளவும் அளவு கடந்த அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டியதாயிற்று. இந்த மாற்றங்களை விரும்பாத மாற்று கருத்துள்ளவர்களை கட்டுபடுத்தும் பொருட்டு CDR எனப்படும் ஒரு கிளர்ச்சியாளர்கள் அடக்கும் குழுவையும் நியமித்தார் .

மேற்குலக நாடுங்களின் பிடியில் இருந்த நாட்டை மீட்டது மற்றும் சொந்த நாட்டின் வளத்தை மூலதனமாகிக் நாட்டில் தன்னிறைவை எட்ட முயற்சித்தது என தன் தனி ஆளுமையால் ஆப்பிரிக்க கண்டத்தில் ஒரு பெரும் அரசியல் சக்தியாய் உருவெடுத்த சங்காரா, முன்னாள் காலனியாதிக்க நாடான பிரெஞ்சு நாட்டிடம் விலை போன தன் உயிர் நண்பன் பிளைஸ் கம்போராவால் (Blaise Compaore) 1987 ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

01 copy

அந்த துரோகியே இன்றைக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் பர்கினோ பாசோ நாட்டை ஆட்சி செய்கிறான். ஆனாலும் அதிபராக இருந்த குறுகிய 4 ஆண்டு சோசியலிச ஆட்சி காலத்தில் அவர் செய்த புரட்சிகர மாற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் ஓராயிரம் சங்காராக்களை உருவாக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது.

02 copy

பிரான்சு மற்றும் சி.ஐ.ஏ (CIA) வின் உதவியுடன் பிளைஸ் கம்போரா சங்காராவை கொன்று இன்றோடு 25 வருடங்கள் கடந்த பின்னும் அவர் மரணத்திற்கான நீதி கிடைக்கவில்லை.

03 copy

உலக நாடுகளில் உள்ள சங்காரவின் ஆதரவாளார்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரின் ஐநா மனித உரிமை ஆணையம் சங்காரவின் மரணம் குறித்து விசாரிக்க 2006 ஆம் ஆண்டு ஒரு நீதிக்ழுவை அமைத்தது.அக்குழுவின் விசாரணை மற்றும் பரிந்துரை முழுக்க முழுக்க உண்மைக்குப்புறம்பான மேற்குலக சார்பாகவே இருந்தது.

ஒரு தீரம் மிக்க புரட்சிகார சிந்தனைமிக்க தலைவரான சங்காரா ஏகாதியபத்தியத்தை எதிர்த்தமை என்ற ஒற்றை காரணத்திற்காக இளம் வயதில் கொல்லப்பட்டார்.

சங்காரா படுகொலை செய்யப்பட்டது குறித்து பன்னாட்டு நீதி விசாரணை கோரி அவரது குடும்பத்தாரும், ஆதரவாளர்களும் உலக மக்களிடம் Justice for Thomas Sankara, Justice for Africa என்ற கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். கீழே உள்ள இணைப்பில் சென்று கையொப்பம் இட்டு, நீங்களும் உங்களின் ஆதரவை அளியுங்கள்.

இதுவரை கையொப்பம் இட்டவர்களின் எண்ணிக்கை 13174 மட்டுமே என்பது தான் வேதனை.

http://thomassankara.net/spip.php?article876&lang=en&var_confirm=GsFZWQ6a#sp876

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை
arunpyr@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s