சிலந்திகள் – ஓர் அறிமுகம்-1

DSC_0099

சூழலமைப்பில் சிலந்திகள் முக்கியத்துவம் வாய்ந்த கனுக்காலியாகும். வேளாண்சூழலியலில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லியாய் இவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை 40,000 சிலந்தி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுளன (Platnick, 2009). கண்டுபிடிக்கப்படாத இனங்கள் இதைவிட இன்னும் பத்து மடங்கு இருக்கலாம் என்று அவதானிக்கப்படுகிறன. இன்று அனைவருக்கும் மிகப்பரிச்சயமான இவ்வுயிரினம், கடந்த 40 கோடி வருடங்களாய் உலகின் பல பகுதிகளிலும் பரவலாக வாழ்ந்துவருகிறது. நிலம்,காடு, பாலைவனம், புதர் என உலகின் அனைத்து பகுதிகளிலும் இவை வாழ்ந்தாலும் சில சிலந்தியினங்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் நீர்வாழ் உயிரியாக வாழ்கின்றன. விதிவிலக்கான சுற்றுச்சூழலில் உயிர்வாழ்வதற்காக இவை இரையை பிடிக்க சில அசாதாரண யுக்திகளை கையாள்கிறன.

சிலந்திகளால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் இல்லையென்றாலும் பெரும்பான்மையான மனிதர்களுக்கு “அரக்நோபோபியா” (Arachnophobia) என்ற சிலந்திகள் பற்றின அச்சவுணர்வு மிகுதியாய் உள்ளதால் அவர்களுக்கு இவை அச்சம் தருவிக்கும் உயிரியாய் தெரிகிறது. பெரும்பாலான சிலந்தி இனங்கள் அளவில் (2-10 mm) சிறியவை. டராண்டுலா போன்ற சில பெரிய வகை சிலந்திகள் 80-90 mm வரை வளரக்கூடியவை. ஆண் சிலந்திகள், பெண் சிலந்திகளைவிட அளவில் சிறியனவாவும் பெண் சிலந்திகளைவிட குறைவான வாழ்நாளே வாழக்கூடியதாகும்.

அனைத்து சிலந்திகளும் மாமிச உண்ணிகள். பெரும்பாலான சிலந்திகள் வலைபின்னும் ஆற்றல் பெற்றவை . பெருவாரியான சிலந்திகளுக்கு பூச்சிகளே முக்கிய இரை. பூச்சிகளைத்தவிர கனுக்காலிகளையும், பிற சிலந்திகளையுமே உணவுக்காக வேட்டையாடும். இரையின் மேல் நஞ்சை செலுத்தி, இரையை செயலிழக்க செய்யும் ஆற்றல் பெற்ற இச்சிலந்திகள், தன் உருவைவிடப் பல மடங்கு பெரிதான பிற கனுக்காலிகளை வேட்டையாடும் திறன் பெற்றவை. சூழல் கட்டமைப்பில், சிலந்திகள் தவிர்க்கமுடியாத இரையாடிகள்.

பூச்சிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் சிலந்திகள் சூழல் சமன்பாட்டின் நிலப்புத்தன்மைக்கு முக்கியப் பங்காற்றுகிறன. சிலவகைச்சிலந்திக்கள் பூச்சிகளையும் பிற உயிரனங்களையும் வேட்டையாட, சில நியதிகளேயே கட்டுடைக்கிறது. உதாரணமாக, டொலமேட்ஸ் எனும் மீன்பிடிச்சிலந்திகள் நீரின் மேற்பரப்பில் இரையைத் தேடியபடி நடந்துகொண்டிருக்கும். நீர்ப்பரப்பில் ஏதேனும் மீன் தென்பட்டால், நீரினுள் முக்குளித்து அம்மீனை வேட்டையாடும். சில சிலந்திகள், உயிருள்ள இரைக்கான தேடலின்போது இறந்த பூச்சிகளின் உடல் கிடைத்தாலும் அவற்றை உண்டு துப்புரவு பணி செய்யும். (Boles Spider) போலஸ் சிலந்திகள் எப்பொழுதும் ஆண் பட்டாம்பூச்சியை மட்டுமே உணவாக உட்கொள்ளும். இப்படி பலவிதமான சூழலில் தங்களில் இருப்பை நிலைநிறுத்தி, பல விதமான வலைப்பின்னல்களை கட்டியும், பல உக்திகளால் இரைகளை வேட்டையாடி, வளர்ந்து, இனவிருத்தி செய்யும் சிலந்திகளின் உலகத்தை பற்றி நாம் அறிந்தது சொற்ப அளவே. சில மேற்குலக நாடுகளின் விலங்கியல் அறிஞர்கள் தங்களின் அயராத முயற்சி மற்றும் ஆர்வத்தால் இவ்வுரினம் பற்றின அரிதான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டிவந்துள்ளனர் (முக்கியமாக W.H வைஸ் மற்றும் போலிக்ஸ்). முதுகெலும்பற்ற உயிரினங்களில் சிலந்திகள் மட்டும் எப்படி தனித்துவம் பெறுகிறது? இவைகளின் இனங்கள் எத்தனை? இவ்வுரினம் மேல் நாம் ஏன் ஆர்வம் செலுத்தவேண்டும், சூழலிய வலைப்பின்னலில் இவற்றின் பங்கென்ன? போன்ற சிலந்திகளின் சொல்லப்படாத வாழ்வியலை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்ய முயன்ற ஆர்வத்தின் வெளிப்பாடே இத்தொடர்.

(தொடரும்)

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை.
arunpyr@gmail.com
ஒளிப்படம்: வெங்கடேஷ் லிங்கராஜா

Advertisements

2 thoughts on “சிலந்திகள் – ஓர் அறிமுகம்-1

  1. சிறிய உயிர்களில் சிலந்திகளின் வாழ்வியல் சிந்தனைக்கும், இரசனைக்கும் உரியவை. அச்சிலந்திகளை பற்றி அறிந்தது குறைவே.சிலந்திகளின் பல பெயர்கள் நமக்கு தெரியாது, அதேசமயம் நம்மை சுற்றி இருக்கும் சில சிலந்திகள் அழிவின் விளிம்பில் இருக்கலாம் அல்லது நமக்கு தெரியாமலே அழிந்தும் இருக்கலாம். சிலந்தி கூடு கட்டினால் வீட்டிற்க்கு ஆகாது போன்ற தவறான கருத்துக்களால், சிலந்திகளின் வாழ்வியல் படு மோசமாக சூறையாடப்பட்டது. இன்றைக்கும் சிலந்தி வலை பின்னினால் துடைத்து எறியப்படும் சூழல் தான் இருக்கின்றது. சில பழைய அரசு அலுவலக கட்டிடங்களில் சிலந்தி வலை பின்னி இருப்பதை,”பாழடைந்த” குறியீடாக நம் சமூகத்தின் சிந்தனையில் இருப்பதை யார் துடைத்தெறிவது? ஆக இது போன்ற மனித மனங்களில் இருக்கும் தவறான நம்பிக்கைகளை சரி செய்யும் அறிவுப் பணியாக இக்கட்டுரை தொடர வேண்டும். சிலந்திகள் பற்றிய ஆய்வுகள் அதிக அளவு தொடர தூண்டுகோலாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s