சிலந்திகள் – ஓர் அறிமுகம்-3

DSC_0683

நூல் சுரப்பிகள் (Silk Glands):
நூல் சுரப்பிகள் பொதுவாக சிலந்தியின் அடிவயிற்றில் அமைந்திருக்கும். ஒவ்வொரு நூல் சுரப்பியும் ஒரு குறிப்பிட இயல்புடைய நூலினை மூடுகுமிழ் (spigot) என்னும் நுண்ணிய துவாரம் வழியே வெளித்தள்ளுகிறது. தொன்மையான சிலந்திகளுக்கு எளிய அமைப்பாக சிறப்பான வகையிலான ஒரேயொரு நூற்சுரப்பி மட்டுமே இருந்திருக்க வேண்டுமென நம்பப்படுகிறது. இதற்கு மாறாக தற்போதிருக்கும் உலாவும் சிலந்திகளுக்கு (Wandering spiders) குறைந்தபட்சம் நான்கு வகையான நூல் சுரப்பிகளும், வட்டு நெசவு சிலந்திகளுக்கு நான்கிற்கும் மேற்பட்ட நூல் சுரப்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுபூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நூல்சுரப்பியின் வகைகள்
 ஆம்புலேட் சுரப்பிகள் (Ampullate glands)
 அக்னிபர்ம் சுரப்பிகள் (Aciniform glands)
 டுபுலட் சுரப்பிகள் (Tubuliform glands)
 அக்ரிகேட் சுரப்பிகள் (aggregate glands)
 பிரிபர்ம் சுரப்பிகள் (piriform glands)
 பிளகிலிபர்ம் சுரப்பிகள் (flagelliform glands)

ஒவ்வொரு வகையான சுரப்பிகளும் வெவ்வேறு இயல்புகளுடைய நூலினை உற்பத்திசெய்யும். டுபுலட் சுரப்பிகள், முட்டை வைப்பதற்கான நூலினை உற்பத்தி செய்யும். இவ்வகை சுரப்பிகள் பெண் சிலந்திகளிடத்தில் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்ரிகேட் சுரப்பிகள் அரெனைட் (araneids) வகை சிலந்திகளுக்கு உரித்தானது. இச்சுரப்பிகள் வலைகளில் இரையை மாட்டச்செய்ய பசபசபுள்ள திரவத்தை உற்பத்திசெய்கிறது. பழங்கால மேசொதலே (Mesothelae) மற்றும் மைகலொமார்ப்ஹெ (Mygalomorphae) வகை சிலந்தி நூல்களைக் காட்டிலும் தற்போதுள்ள அரனோ மார்ப்ஹெ (Araneomorphae) சிலந்தியின் நூல் உறுதியாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இச்சிறப்பான நூல் இழையால் அரனோ மார்ப்ஹெ சிலந்திகள் அதிக எண்ணிக்கையடங்கிய இனமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வெற்றிகரமாக பரவி உயிர்ப்பிழைத்திருப்பதை காணமுடிகிறது.

கட்டமைப்பு :
1
ஒவ்வொரு நூல்சுரப்பியும் கச்சிதமான சுரப்பியையும், மெலிதான குழாயும் கொண்டிருக்கும் (பார்க்க படம்). பெரும்பாலான சுரப்பிகள் பேரிக்காய் வடிவத்தில் அமைந்திருக்கும். நுண்ணிய புரதத்துளிகளின் வடிவத்தில் சுரப்பி குழாயிலிருந்து வரும் நூலானது, கோணி போன்ற அமைப்புடைய சுரப்பியின் மையப்பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.சிலந்தி, தனது அடிவயிற்றில் உருவாக்கும் அதிகளவிளான ஹெமொலய்ம்ப் (hemolymph) அழுத்தத்தின் மூலம், இச்சுரப்பி குழாயிலிருந்து நூலை வெளியேற்றியும், சில சமயத்தில் தனது பின்னங்கால்களை பயன்படுத்தி நுண் துவார வழியில் நூலினை வெளியேற்றுகிறது.

திரவ நூலிலிருந்து திட நூலாக மாறுதல் மீளவொண்ணாத மாற்றமாகும் . இம்மாற்றமானது மின்னூட்டணுக்களின் பரிமாற்றத்தாலும், புரத நூலின் இணையான வரிசையாக்கத்தாலும் நடைபெறுகிறது என்று கருதலாம். முதலில் நீர், உவர்மம் மற்றும் பாசிகம் ஆகியவை குழாய் அமைப்பில் இறுக்கமாக இழுக்கப்பட்டு, பின் நூல் புரதம் முறையாக அடுக்கப்பட்ட அணியாக ஒன்றுகொன்று அருகாமையிலிருக்கும் வேளையில் அருகிலுள்ள சங்கிலியுடன் சேர்ந்து ஹைட்ரோஜன் இணைப்பு அமைகிறது. புரத நீர்க்கரசையிலிருந்து அரைப்படிகமான β தகடாகும் நிலைமாற்றத்தை தற்பொழுது x ரே மூலமாகவும் நியூட்ரான் சிதறல் மூலமாகவும் திறனாயப்படுகிறது.

விஷச் சுரப்பிகள் போலல்லாமல் , நூல் சுரப்பிகள் நூலை வெளித் தள்ளுவதற்கு எந்தவொரு தசைமண்டலமும் பெற்றிருக்கவில்லை. வட்டு நெசவு சிலந்திகள் , நுண் துவாரத்திற்கு முன் இருக்கின்ற தடுக்கிதழ் (valve) மூலம் நூல்சுரப்பியிலிருந்து வெளித்தள்ளப்படும் நூலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இத்தடுக்கிதழின் விட்டத்தை தசைசெயல்பாட்டின் மூலம் முறைப்படுத்தி இழையின் திண்மையையும் தேவைக்கேத்தபடி வேறுபடுத்துகிறது. பெரும்பாலான நூலிழைகள் சொற்ப மைக்ரோ மீட்டர் அளவுடைய விட்டம்தான் இருக்கும். மற்றும் சில நூலிழைகள் இதைவிட சிறிதளவாக இருக்கும். வட்டு நெசவு சிலந்திகளின் இளுவைக்கோடு 2 மைக்ரோமீட்டரருக்கும் குறைவான தின்மத்திலிருக்கும் மற்றும் இதனுடைய விட்டம் அச்சிலந்தியின் எடையை பொறுத்து வேறுபடும்.அதாவது அதிக எடையுள்ள சிலந்திக்கு அதிக விட்டமுடைய நூலிழைளை பெற்றிருக்கும். இளுவைக்கோட்டின் மேற்பரப்பு மெல்லிய அடுக்குகளாலான கிளைக்கோ ப்ரோடீன்களால் (glycoproteins) பூசப்பட்டிருக்கும்.இழையை கழுவினால் இம்மேட்பூச்சு நீங்கிவிடும். வட்டு நெசவுசிலந்திகளின் இளுவைக்கோட்டின் பாதுகாப்பு கூறளவு 4-6 அளவைகளிலும் தாவும் சிலந்திகளுக்கு 1-2 அளவைகளாக இருக்கும். கீழே விழும்போது உபயோகிக்கும் புது நூலின் இழையை முறிநிலைக்கு கீழான அளவுடைய சுமையை தாங்குமளவிற்கு பார்த்துக்கொள்ளும். மிகச்சிறந்த நூலிற்கு உதாரணமாக, தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரிபெள்ளட் சிலந்தியின் “பிடிக்கும் நூல் “லின் தனி இழை 0.01–0.02 μm அளவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

– அருண் நெடுஞ்செழியன்,
சென்னை.
arunpyr@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s