மார்க்சிய பொருளாதாரத்தில் சூழலியல்

முன்தொடரின் சுருக்கம்
நவீன தொழில்நுட்பங்களை, முதலாளித்துவ வழியில் பிரயோகித்து பொருளுற்பத்தியில் ஈடுபடும் (முதலாளித்துவத்தின்) நவீன பொருளுற்பத்தி முறையானது சமூகத்தின் தேவையை ஒட்டி தனது உற்பத்தி அமைவை ஒரு திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்து நிகழ்த்தவில்லை. அதன் உற்பத்தி முழுவதும் லாபநோக்க மையநீரோட்டத்தை சுற்றியே நிகழ்த்துகிறது. மேலும் தனது உற்பத்தி முறைகளால் உழைப்புச்சுரண்டல், உழைப்பு பிரிவினை, இயற்கைவளச்சுரண்டல், உற்பத்தி உடைமை பறிப்பு போன்ற பெரும் சமூக, சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது. இச்சுரண்டல் போக்கு குறித்த விஞ்ஞான பகுப்பாய்வை மார்க்ஸ் தனது மூலதன நூலின் உபரி மதிப்பின் வாயிலாய் விளக்குகிறார்.

பகுதி – 3

முதலாளித்துவத்திற்கு முன்பிருந்த சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையானது பயன் மதிப்பை உற்பத்தி செய்வதாக மட்டுமே இருந்தது. மாறாக, முதலாளித்துவ சமூகத்தின் பொருள் உற்பத்தி முறையானது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்யும் நோக்கில் மட்டுமே தனது பொருளுற்பத்தி முறையை நிகழ்த்துகிறது. இன்று, முதலாளித்துவத்தின் உடைமையாக இருக்கிற இயந்திர சாதனங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எல்லாமே பரிவர்த்தனை மதிப்பிற்காகத்தான் உற்பத்தி செய்கிறது*.

*- Foot Notes:
 இந்த பரிவர்த்தனை மதிப்பை தனது உழைப்பின் மூலம் முதலாளிகளுக்கு பெயர்த்தளிக்கும் தொழிலாளி சுரண்டப்படுகிறான்.
 இந்த பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்யும் லாப நோக்க உற்பத்தி முறைக்காகத்தான், இயற்கையின் கனிம வளங்கள், மண், காடுகள், மலைகள் சூறையாடப்படுகின்றன.

மேலும், பொருளின் பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு என்ற இரு காரணிகளை புரிந்துகொண்டால் மட்டுமே அதன் மதிப்பின் இரு வடிவத்தை புரிந்துகொள்ள முடியும். அதுவே பின் மதிப்பின் பொது வடிவமாகவும், பின் பணமாக வடிவ மாற்றமடைந்தும், பின் பணம் மூலதனமாக மாற்றமடைகிறது. அதன் பின்னரே நாம் உபரி மதிப்பின் உற்பத்தியை புரிந்து கொண்டு, இறுதியில் எப்படி முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறையில் அது பெரும் மூலதனமாக மேன் மேலும் குவிகிறது என்பதை விளங்கிக்கொள்ளமுடியும்.

இப்படி மூலதனமாக குவிக்கப்படும் லாபங்களுக்குகாகத்தான், முதலாளித்துவம் தனக்குள் போட்டிப்போட்டுக்கொண்டு தனது உற்பத்தியை வரைதுரையற்று பெருக்குகிறது. இவ்வகையான தனது வணிகநோக்க ஆதாயத்திற்கான உற்பத்தி முறைக்காக, அனைத்து தொழிலாளிகளின் வாழ்வையும் இயற்கை வளங்களையும் கண்மூடித்தனமான விதத்தில் வீணடிக்கத்தொடங்கி இன்று முதலாளித்துவ உற்பத்தி முறையானது, இப்புவியின் உயிர்பிழைப்பையே அச்சுறுத்துகிறது. மேலும், உலகெங்கிலும் வாழும் மக்களுக்குள் பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகளவில் ஏற்படுத்தி, உழைக்கும் வர்க்கத்தின் நாளைய பொழுதை நிச்சயமற்றதாக ஆக்குகிறது. அதோடு அவர்களை எந்த உடைமைகளும் உரிமை அற்றவர்களாகவும், சுகாதாரமற்ற வாழ்நிலைமைகளை அளித்தும், பொருட்களை உற்பத்தி செய்யவும் அதை நுகர்வதற்குமான வெறும் பொருளாதாய சக்தியாக உருமாற்றியிருக்கிறது. இயற்கை வளங்களை தனது லாப நோக்க உற்பத்திக்காக அளப்பரிய அளவில் சுரண்டி, அதன் மீதே உற்பத்தி கழிவுகளை திணித்து, மனித வாழ்வையும், இயற்கை வளங்களையும் ஒரு சேர இந்த முதலாளித்துவ உற்பத்தி முறை அழித்தொழிக்கிறது.


பிரிதொரு நேரத்தில், பிரிதொரு சந்தர்ப்பத்தில் மார்க்சிய சூழலியல் பற்றி விரிவாக காண்போம்.

முற்றும்.

– அருண் நெடுஞ்செழியன்,
arunpyr@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s