வாழை

வாழை அமைப்பு
vazhai‘வாழை’ அமைப்பு எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சமூக பொறுப்புமிக்க இளைஞர்களால் 2005-ல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்புகளை வழங்க பாடுபட்டு வருகிறது. தொடக்கத்தில் இந்த அமைப்பு தர்மபுரியின் 3 கிராமப்புற பள்ளிகளில் உள்ள 15 மாணவர்கள் மற்றும் 15 வழிகாட்டிகள், 25 ஆதரவாளர்கள் & 6 ஆலோசகர்களை கொண்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு பெருகி 120-க்கும் மேற்பட்ட மாணவர்களும், அவர்களை எப்பொழுதும் அன்போடு ஊக்குவிக்கும் மாணவர்களுக்கு சமமான வழிகாட்டிகளும், ஆதரவாளர்களும் உள்ளனர். வறுமையான சூழ்நிலையிலிருந்து, முதல் தலைமுறை பள்ளி செல்லும் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை 10-ஆம் வகுப்பு வரை வாழை வழிகாட்டிகள் மூலம் வழிநடத்துகிறது. பத்தாம் வகுப்பிற்கு பிறகும் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை மட்டும் அவ்வப்போது வழங்கியும் வருகிறது. மொத்தத்தில், வாழையின் மரபான சமூகப்பொறுப்பை உணர்ந்து, அடுத்த தலைமுறைக்கு அதை வாழையின் மூலம் “வாழையடி வாழையாக” கொண்டு செல்வதற்கு அவர்கள் தயாராகும்வரை அனைத்து வழிகாட்டுதலையும் வாழை வழங்கிவருகிறது.

ஆலோசகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்
வாழையின் ஆலோசகர்கள் வாரியத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த சிறந்த பிரமுகர்கள் (திரு. ஞானி – பத்திரிகையாளர், திரு. Mafoi. K. பாண்டியராஜன் – மனிதவள ஆலோசகர், திரு. நம்பி ஆரூரன் – கணக்கு பரிசோதனையாளர், திருமதி. பிருந்தா ஜெயராமன் – உளவியல் நிபுணர், திரு. கல்யாணி – கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்) இவ்வமைப்புக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வழிநடத்தி வருகின்றனர்.

வாழை அமைப்பு பெரும்பாலும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள், வழிகாட்டிகளின் வருடாந்திர நன்கொடை, நிறுவனங்களின் சமூக பொறுப்பு முயற்சிகள் (CSR Initiatives) மற்றும் பல சமுக விழிப்புணர்வு கொண்ட கொடையாளிகள் மூலம் நிதியுதவி பெறுகிறது.

வழிகாட்டுதலின் சிறப்பம்சங்கள்
“இளைஞர்களுக்கு வாழ்க்கையை எப்படி உருவாக்க வேண்டும் என்று கற்றுத்தராமல், எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று கற்றுத்தரும் கல்விமுறை சிறந்த கல்விமுறையாது”. வாழை படிப்பறிவு, புத்தகங்கள் என்று குழந்தைகளை ஒரு கட்டத்துக்குள் அடைக்காமல், இவற்றிக்கு அப்பால் சென்று ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமையை மெருகேற்றுவதில் கவனம் செலுத்துகிறது. இது வழிகாட்டுதல் (mentoring) என்ற பெயரில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு வழிகாட்டியை நியமித்து, அன்பான அண்ணன்-தம்பி அல்லது அக்கா-தங்கை உறவுப் பிணைப்பை ஏற்படுத்தி வழிகாட்டுதல் செய்கிறது. வழிகாட்டிகள் (mentors) தங்கள் தம்பி அல்லது தங்கையுடன் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் பயிற்சிப் பட்டறையில் அவர்களை சந்திக்கவும் செய்கிறார்கள். வாழையின் முக்கிய நோக்கம் அக்குழந்தைகள் படிப்பறிவினை (literacy) அடைவதற்கு உதவி புரிதல் மட்டுமல்ல, அவர்கள் உண்மையான கல்வியறிவை (education) அடையச் செய்வதேயாகும். போட்டிமிகுந்த இந்த உலகை எதிர்கொள்ளவும், அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றவும் தேவையான நம்பிக்கை உணர்வை புகுத்தி வழிகாட்டிகள் அவர்களை வழிநடத்தி வருகின்றனர். வழிகாட்டிகளும் இங்கே கற்றுக்கொடுப்பதைவிட, நிறைய கற்றுக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல! மற்ற எல்லாவற்றையும்விட சமூகத்தை கருத்தில்கொண்டு செயல்படுதில் வழிகாட்டிகளுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு அளவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

கல்வியல், வாழ்வியல் திறன்களை கற்பிக்கும் முறை
வாழையின் கற்பிக்கும் முறை செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இது எவ்வளவு சிக்கலான அல்லது கடினமான கருத்துக்களையும் எளிதில் குழந்தைகள் புரிந்ததுகொள்ள உதவுகிறது. இங்கு கல்வியல் திறன்களுக்கு (academic skills) சமமாக வாழ்க்கை (அல்லது) வாழ்வியல் திறன்களுக்கும் (life skills) முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகளை முற்றிலும் முழுமையான மனிதனாக மாற்றும் வாழ்வியல் திறன்களை மட்டுமே மையமாகக்கொண்ட பிரத்தியேக பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகிறன.

தொடர்புக்கு
வாழையில் வழிகாட்டியாகவோ, ஆதரவாளராகவோ, நன்கொடையாளராகவோ இணைய கீழ்க்காணும் தொடர்புத் தகவல்களை பயன்படுத்தவும்.

கார்த்திகேயன் ( செயலாளர், சென்னை ) – 09884112026
நாராயணசாமி ( செயலாளர், பெங்களூரு ) – 09448369876

மின்னஞ்சல்:
info@vazhai.org இணையதளம்: http://www.vazhai.org


“சஞ்சிகை” ஜனவரி இதழில் வெளிவந்த கட்டுரை.

Advertisements

One thought on “வாழை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s