இவை கவிதை மாதிரி

மழை நனைத்த தரை
துவட்டி செல்கின்றன
விரைந்து செல்லும்
வாகனங்கள்
– உதயகுமார் பாலகிருஷ்ணன்

***

தமிழனுக்கு
மறந்து போனது
பத்துப்பாட்டு
பள்ளி ஆண்டு விழா மேடையில்
குத்துப்பாட்டு
– வீரத்திருமகன்

***

ஓடத்தில்
பெருங்கடலை
கடப்பது போல் உள்ளது
இந்த தனிமையின்
ஒவ்வொரு நொடியும்.
– பிரசாத் ராஜ்

***

அன்பே…
கவிஞர்களின் வார்த்தைகள்
தீர்ந்து போனதாம்…
நீ பேசிய வார்த்தைகள்
அத்தனையும்
கவிதையாக மாறிப்போனதால்…
– பிரபாவதனி கருப்பையன்

***

இறங்கும்வரை தான்
உங்கள் கரை
பின்,
பிரவாக நதி
– குமார் கோவிந்தராஜன்

***

யாரோ
எழுதிய கவிதை
நான் எழுதியது போலிருக்கிறது

நான்
எழுதிய கவிதை
யாரோ எழுதியது போலிருக்கிறது
– சித்திரவீதிக்காரன்
(குறிப்பு: இதை ஏற்கனவே யாரேனும் எழுதியிருக்கலாம்)

***

பனை மரங்கள்
வீடுகளுக்கு உதவிய
காலமெல்லாம்
மலையேறிப் போச்சு
என்ற நண்பரிடம்…
கிளியின் வீட்டைக்
காட்டிவிட்டு வந்தேன்.
– இளஞ்செழியன்

***

தூர்வார
மண்வெட்டியும் கடப்பாறையும்
தூக்கிச்சென்றவனின் மகன்
மட்டையையும் பந்தையும்
தூக்கிச்செல்கிறான்.

வறுமையை மட்டுமல்ல
கிரிக்கெட்டையும் கண்மாய்
பெருகிதான்
அடித்துச் செல்ல வேண்டும்
– ரகுநாத் சுரேந்தர்

இவை அனைத்தும் ‘சஞ்சிகை’ ஜனவரி இதழில் வெளியானவை.

Advertisements

One thought on “இவை கவிதை மாதிரி

  1. பல பூக்கள் சேர்த்துக் கட்டிய கதம்பமாய் மணக்கிறது இந்தக் கவிதை மாதிரிகள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s