நண்டுச்சிலந்திகள்

Crab Spider

இவ்வகை சிலந்திகள் நண்டின் உடல் அமைப்பை ஒத்துள்ளதாலும் நண்டைப் போன்றே பக்கவாட்டில் நடக்கும் இயல்பைக்கொண்டதாலும் பொதுவாக இவை ‘நண்டுச்சிலந்தி’ (Crab Spider) என்றே வழங்கப்படுகிறது. தோமிசிடே(Thomisidae) குடும்பத்தைச்சேர்ந்த இவ்வகை சிலந்திகளுக்கு வலை பின்னத்தெரியாது. முட்டையை பாதுகாக்க மட்டுமே தனது நூலை பயன்படுத்தும். இவ்வகைச் சிலந்திகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இனங்களாக உலகெங்கிலும் பரந்த அளவில் வாழ்கின்றன.

நண்டுசிச்லந்திகளின் முன்னங்கால்கள் பின்னங்கால்களை விட அளவில் பெரிதாக இருக்கும். இலைகளில் அல்லது பூவிதழ்களில் அமரும் பூச்சியை பிடிப்பதற்கு ஏதுவாக தனது முன்னங்கால்களை உயர்த்திக்கொண்டு அசைவற்று அமைந்திருக்கும் காட்சியை செடிகளில் சாதரணமாகக் காணலாம். குறைவான தூரம் வரை இவற்றின் பார்வைத்திறன் துல்லியமாக இருக்கும். தனது எல்லைக்கு உட்பட்ட இருபது சென்டி மீட்டருக்குள் ஏதேனும் சிறு சலனம் ஏற்பட்டால் இவற்றால் மிக எளிதாக கண்டுணரமுடியும். பூக்காம்புகளுக்கு அடியில் மறைந்திருக்கும் நம் சிலந்தியாரை கவனிக்காமல் தேன் அருந்த வரும் வண்ணத்துப்பூச்சிளும் தேனீக்களும் 0.5 – 1 சென்டி மீட்டருக்குள்ள விட்டத்தில் வந்துவிட்டால் போதும், இமைக்கும் நேரத்தில் சட்டென தனது பலமான முன்னங்கால்களால் அவ்விரையை பிடித்து விஷத்தை செலுத்தி பக்கவாதமடையச் செய்துவிடும். பின் மெல்ல இரையின் உடலில் சின்ன துளையிட்டு அவற்றை உறிஞ்சி உண்ணும். இதன் விஷத்தினால் மனிதர்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை. இரைக்காக இவை பல நாட்கள் கூட ஆடாமல் அசையாமல் பூக்காம்புகளில் பொறுமையாக காத்திருக்கும். சில நேரத்தில் இக்காத்திருப்பு ஒரு வாரம் வரையிலும் நீள்வதுண்டு. இந்த பிரத்யேக வேட்டை உத்தியால் அளவில் பெரிதான பூச்சிகளைக் கூட இவற்றால் வெற்றிகரமாக வேட்டையாடமுடிகிறது.

இவ்வகை நண்டுச்சிலந்திகள் வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை மற்றும் அடர் மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில முதிர்ச்சியுற்ற பெண் சிலந்திகள் மட்டும் நிற அடர்த்தி குன்றியவையாக காணப்படும். சூழலுக்கு தகுந்தவாறு தங்களை தகவமைத்துக்கொண்டு செடிகளில் மறைந்துகொள்வதில் ஆண் சிலந்திகளை விட பெண் சிலந்திகளே அதிக வல்லமை கொண்டவை. ஆகவே பொதுவாக இவ்வினங்களில் பெண் சிலந்திகளை நாம் கண்டுபிடிப்பது அரிது. அளவில் நான்கு முதல் பத்து மில்லி மீட்டர் வரை வளரக் கூடிய இச்சிலந்திகளின் ஆயுட்க்காலம் சராசரியாக இரண்டு ஆண்டுகள். பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதிலும், மற்ற உயிரனங்களுக்கு இரையாவதாலும் காட்டுயிர்களின் உணவுச்சங்கிலியில் சிலந்திகள் முக்கிய கண்ணியாக உள்ளன.

படமும் செய்தியும்: அருண் நெடுஞ்செழியன்,
arunpyr@gmail.com

Advertisements

One thought on “நண்டுச்சிலந்திகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s