திறந்த மடல்

வயதில் மூதித்து விட்டீரே தவிர, மானிடத்தில் எங்களிலிருந்து பின் தங்கியே வாழ்ந்து வரீர்!!

ஆம்! இன்று வெவ்வேறு துறைகளில் வேலைப் பார்க்கும் நாளைய முன்னோர்களே, வாழ்வியம் என்பது தன் வீடு, தன்னலம் என்று தன் குடும்பத்தை இயக்கியும், இயந்தியும், ஏந்தியும் வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் இயந்திரங்களே, மானிடம் என்பதை பாடப்புத்தகத்தில் புகுத்தினாலும் அது முழுமையாக போய் சேருமா என்ற கேள்விக்குறியை பதிலென நிலைக்க வைத்து விட்டீரே, எம் குலத்தோரே! உங்களை இன்றும் எம் குலத்தோர் என்று அங்கீகரிக்கிறேனே, காரணத்தை அறீவீர்களா? இது ஒரு 20 வயது பெண், ‘எழுச்சிக்காக ஏங்குகின்றன என் கண்’ என்று சிந்தித்து செயல்பட ஏங்கிய போது ‘வயதில் மூதித்து விட்டவர்கள், மானிடம் உட்கொள்ளாதோர்’ என்பதனை உணர்ந்து, தமிழோடு மடிந்து இயற்றிய கட்டுரையே!

எங்கள் இளைய சமூதாயத்திற்கு எங்களிலிருந்து மூத்த சமூகம் செய்த ஒரே நலன் – நாங்கள் தின்ற சோற்றில் உப்பு சற்று அதிகமாகவே இட்டது தான்! ரோசத்திலும் மானத்திலும் தமிழனாகவே வளந்துவிட்டோம் நாங்கள்!
எங்கள் உணர்வுகள் உற்சாகமானவை தான்; ஆம் உங்களைப்போல் ஜடங்களாய், நடக்கும் அநீதிகளை மௌன தாளமிட்டு ரசிக்க எங்களால் முடியாது தான், நீதிக்கும் நியாயத்திற்கும், உரிமைக்கும் போராடுவோம்தான்!
இன்று நிம்மதியான வாழ்வியல் இல்லாமல்; ஒரு புறம் படித்தும், மறுபுறம் நீதிக்காக போராடியும், தூக்கமற்ற, துயரம் நிறைந்த இரவுகளை தாண்டி; விடியல் மேல் நம்பிக்கை கொண்ட நாங்கள் ஒன்றும் உறுதியற்றோர் அல்ல!

இன்று என் வயது 20 தான், அன்று உங்கள் இவ்வயதில் உங்கள் புரிதல் என்னவாக இருந்தது என்று எண்ணிப் பாருங்கள்! சமூகம் இன்று சாக்கடையாய் நாறுகிறது என்றால், உங்கள் அன்றிலிருந்து இன்றுவரை அடிக்கும் மௌன தாளமும்; வீடுகளில் நீங்களிட்ட சுயநல விதைகளும்தான் முக்கிய மூல காரணங்களாகும்! நினைவிருக்கட்டும் அது என்றும்!

எங்கள் உணர்வுகளே உணர்ச்சிவசப்பட்டு, ஒவ்வொரு கட்டத்திலும் காயமடைந்து நிற்கிறோம்..! இவை அனைத்தையுமே கடந்து, ஒரு கட்டத்திலும் நாங்கள் சோர்வடைந்ததே இல்லை என்பதனை எவராலும் மறுத்திட முடியாது. என்னிடம் ஒரு அம்மா, ‘சமூக உணர்வு, சமூக உணர்வு என்கிறீர்களே, பெற்றவர்களை மறந்தும், உற்றோர்களை மறுத்தும் காதல் செய்வதற்கு தான் உங்களால் (இளைய சமூதாயத்தால்) முடியும்’ என்று கூறி இருந்தார். அவர் இப்படி விமர்சிக்க நான் எழுதிய காதல் கவிதை காரணமாக இருப்பின், மௌன மரியாதை செலுத்த முடியாமல் பதில் அளித்தேன்; அதுவோ
“காதல் கவிதைகள் பதிவிட்டாலும், அதை வெளிப்படையாய் இயற்றும் துணிச்சல் கொண்டோரே நாங்கள் தவிர, கள்ளம் போன்ற தாழ்ந்த பூப்பாதைகளுக்கு பணிந்தோர் அல்ல! எங்கள் துணிச்சலே எங்கள் வெற்றிக்கான விதைநெல்லாகும்.!”

எங்கள் எழுச்சியால் பிறக்கும் சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கண்டு, இன்று என்னை போன்ற ‘பிள்ளை போராளிகளை’க் கண்டு கேலி செய்யும் ஜனம் அன்றே உணரும்!
இவை அனைத்தையும் தாண்டிப், பொது களத்தில் ஒரு மனு..
இன்றைய உணர்வுப்பூர்வமான சமூகத்தின் வேண்டுகோள்,

‘முற்றிலும் நேர்மை,
அது முதுமை பிறப்பித்த நேர்மை,
முத்தியதோர் நேர்மை” என்றெல்லாம் பாட வேண்டாம அடுத்த தலைமுறை?

பெற்றோர்களே, களத்தில் இறக்குஙகள் உங்கள் வீட்டு வீரத்தை..
அன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை, வாழ்ந்து வந்தான் அதுவோ நாட்டின் எல்லை; இன்று அதே பிள்ளை, நாளை தரவேண்டமா நல்லதோர் சமூகம் அவனின்(ளின்) பிள்ளைக்கு?

– உணர்வு வலையில், உணர்ந்த வலியில்,
யுக குணா.
yugaguna@gmail.com
(அன்பென்று மட்டும் கொட்டட்டும் முரசு! அன்றே அது பாரதியின் முரசு!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s