கவிதை உதிரி

கொண்டை சிலுப்பி
றெக்கையடித்து
பறந்து திரிகிறது
பங்காளி வீட்டுச்சேவல்
எங்கள் முற்றத்தில்.
பழைய பகை
மனசில் புகைய
கைவசம் கற்களற்ற
காரணத்தால்
பாம்படங்களைக் கழற்றி
எறிகிறாள்
அந்த காலத்திலேயே
பங்காளிச் சண்டை
ஏந்தும் அப்பத்தா.
– ஸ்ரீதர் பாரதி

———————-

தொலைபேசி
அணைத்த பின்பும்
அதன் துவாரங்களில்
கசிந்து கொண்டிருக்கிறது
தீராத உன் பிரியம்
– உதயகுமார் பாலகிருஷ்ணன்

————————–

கிழிந்த
சேலைப்பார்த்து
வருத்தப்பட்டாள்
அம்மா
கொட்டு மழையில்
நனையாமல்
எனை
அழைத்துச்செல்ல
முடியாதென்று
-முகிழ்

—————————

எழுந்து நிற்கச் சொல்லும்
மௌன அஞ்சலிகளில்
நிமிடங்களை எண்ணுவதில்
நினைவிழந்து போகிறது
இறந்தவனின் நினைவு
– மு.கோபி சரபோஜி

—————————-

உன்னுடனான
பொழுதுகளில்
தோன்றுகிறது
இருப்பின்
தர்மம்
– கண்ணுபாஸு

—————————–

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கவிதைகள்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s