டோடோ

இப்பூவுலகின் அழிவானது, அதன்மீதான விண்கல்லின் மோதலால் நிகழலாம் என்று நாம் இதுகாறும் நம்பி வந்தோம். ஆனால் இவ்வுலகத்தின் அழிவானது அதன் பரிணாம வளர்ச்சியின் கடைகோடி எச்சமான ஒரு பாலுட்டி இனத்தாலேயே நிகழ்த்தப்படப்போகிறது என மிகத் தாமதமாக நாமின்று உணர்கிறோம். மனித இனத்தைப் போன்று வேறு எந்த உயிரினமும் இவ்வளவு குறுகிய காலத்தில் தான் வாழும் சூழலை அழித்ததில்லை எனலாம். நம்மிடம் உள்ளது ஒரு உயிர்க்கோளம் மட்டுமே என்ற சிந்தனையானது ஒவ்வொரு படியிலும் அவன் நினைவுப்பாதையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டாலும் பல்லுயிரியத்தை அழிக்கும் தன் பாதகச் செயல்பாட்டிலிருந்து அவன் விலகினபாடில்லை.

இப்பூவுலகில் வாழ்ந்து வரும் அனைத்து உயிரினங்களும் பல்வேறு வகைகளில் ஒன்றை ஒன்றுச் சார்ந்திருப்பதலாயே அதன் உயிர்பிழைப்பு உறுதிசெய்யப்படுகிறது. ஒரு செல் உயிரிகள் முதல் பிரம்மாண்ட பாலூட்டிகள் வரை இந்நியதி பொருந்தும். ஒன்றை ஒன்று ஊடுருவியும் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட இவ்வுயிர்ச் சங்கிலியில் ஏதேனும் ஒரு கண்ணி அறுபட்டாலே அதன் விளைவானது பிறிதொரு இடத்தில மிக வேகமாகவோ, பொறுமையாகவோ எங்கோ நிச்சயம் நிகழும் என்பது இயற்கையின் நியதி.

இந்நியதிகளைக் கட்டுறத்த, உயிர்களின் மீதான நாகரீக மனிதனின் அறவியல் மீறல்களை சுருக்கமாக சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

டோடோ . போர்ச்சுகீசிய மொழியில் முட்டாள் என்று அர்த்தம். 1507ஆம் ஆண்டு மொரிசியசுத் தீவை போர்ச்சுகீசியர்கள் கண்டுபிடித்த போது, மரங்களில் வாழ முடியாமலும், வேகமாக ஓட முடியாமலும், பறக்கத் தெரியாமலும் அத்தீவினில் திரிந்து கொண்டிருந்த ஒரு பறவை இனத்தை அவர்கள் கண்டனர்.

06-DODO

உயிர்பிழைப்பிற்குத் தேவையான எந்தவொரு உடற்சாதனமும் உபாயமும் அற்றிருந்த அப்பறவைக்கு அவர்கள் வைத்த பெயர்தான் டோடோ. (பொதுவாக பறக்க இயலாத, வேகமாக ஓட இயலாத நீந்த இயலாத பறவைகளை நாம் தீவினில் மட்டுமே பார்க்க இயலும். ஏனெனில், பரிணாம வளர்ச்சிப்போக்கில் வேட்டையாடி உயிரினங்கள் அத்தீவினில் படிமலர்ச்சி அடையாத காரணத்தாலும் நிலத்தாலும் நீராலும் பிற வேட்டையாடிகளால் அணுக முடியாத உயிராபத்து அற்ற சூழலில் வாழ்வாதலும் இயல்பூக்கத்தால் நிகழ்கிற படிநிலை வளர்ச்சி இப்பறவைகளுக்கு தேவையற்றதாக ஆகின. இயற்கை வரலாறு இப்படியிருக்க, அப்பறவைகளுக்கு முட்டாள் எனப் பெயரிட்ட மனிதனே முட்டாள் ஆவான்). பின் நடந்தவற்றை சொல்லவா வேண்டும். போர்ச்சுகீசியர்கள் தங்களுடன் கொண்டு சென்ற நாய்களை அப்பறவைகளின் மீது ஏவி வேட்டையாடி அவ்வினத்தை வேரோடு அழித்தனர். 1681ஆம் ஆண்டு அப்பறவைகள் மொரிசியசுத் தீவிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. இப்பறவைகளின் அழிவோடு கல்வாரிய தாவாரத்தின் பெருக்கமும் நின்றுபோனது. ஏனெனில் டோடோ பறவையானது கல்வாரியா பழத்தை தின்று அதன் கடின தோல்களை தன் சிறப்பான ஜீரண சக்தியால் சிதைத்து முளைக்கத்தகுந்த நிலையில் அப்பழத்தின் கொட்டையை கழிவுடன் வெளியேற்றுகிறது. இந்நிகழ்முறைக்குப் பிறகே அக்கொட்டையானது மண்ணில் புதைந்து முளைக்கத்தக்கதாக ஆகின்றன. ஆக இப்பறவியின் அழிவோடு அத்தாவரத்தின் பரவலையும் வேரோடு அழித்தொழித்தான் அறிவார்ந்த அறிவார்ந்த மனிதன்.

– அருண் நெடுஞ்செழியன்,
arunpyr@gmail.com

(2014 மார்ச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s