டாஸ்மாக் கவிதைகள்

மதுவை
ஏற்று நடத்தும் அரசாங்கம்
காதலையும்
ஏற்று நடத்தக் கூடாதா
காதல்
மதுவைவிடப் போதையானதல்லவா?
————

பாம்புக் கடிக்கு மருந்தின்றி
பச்சைக் குழந்தைகள் சாகிற
என் தாய்க் கிராமங்கள் தோறும்
தடையின்றிக் கிடைக்கிறது
டாஸ்மாக்

எனில்
இப்பெருநகரில்
மது அருந்தியும்
வாங்கித்தந்தும்தான்
பேண வேண்டும்
உன் நட்பையென்றால்
இப்போதே
முறிக்கிறேன் நண்ப
————

ஆள்வோர் நடத்தினாலும்
அயலார் நடத்தினாலும்
குடி கெடுக்கவே செய்கிறது
குடி

தரையிலே கிடந்தாலும்
தண்ணீருக்கடியில் கிடந்தாலும்
கூர்மையாய் இருக்கிறது
குத்துவதில் கருவமுள்
————

ஆந்திராவுக்கு
வெங்கடாசலபதி டாஸ்மாக்
கேரளாவுக்கு
அய்யப்பன் டாஸ்மாக்
தமிழ் நாட்டுக்கு
அரசாங்க டாஸ்மாக்
என்றாலும்
ஆண்டவன் டாஸ்மாக்கிற்குப்
பரவாயில்லை
அரசாங்க டாஸ்மாக்
————

குடிப்பதற்கு சொல்வதற்கு
ஆயிரம் காரணங்கள்
இருப்பது போலவே
குடிக்காமல் இருப்பதற்கும்
இருக்கின்றன
ஆயிரம் காரணங்கள்
சொல்பவனுக்குத்தான்
கூச்சமாக உள்ளது
குடிக்காதவனென
————

குடிக்க வேண்டாம்
கூடவே வந்திருந்து
கோக் குடி
குழப்பமாக இருந்தது
குடி கொடிதா
கோக் கொடிதா
எது அதிகம் ?
————

ஒத்துக் கொள்கிறேன்
ஒழுக்கத்திற்கும்
குடிக்கும் சம்பந்தமில்லை
நம்புகிறாயா
சிலந்தி வலைப்பின்னலென்றால் ?
————

– வே.ராமசாமி
ramasamypoet@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s