கவிதை உதிரி

நாவறண்டு நீர்தேடி
கடல்நோக்கி நடக்கிறது
தாகத்தோடு நதி.

முனைவென்றி நா.சுரேஷ்குமார்

****

விதவிதமான
சத்தங்களோடு
கடந்துபோகும்
அவனிடம்
அத்தனை
அமைதி

– நாணற்காடன்

****

இன்னும் இந்த
இரவுக்கடலில்
இருக்க அழுத்துவதாய்
உன் நினைவுத்தோணி

– கீதா

****

மிதப்பதாக நினைத்து
மூழ்குபவன்
குடிகாரன்

-இரவி

****

பயமாய் தான் இருக்கிறது
அடர்ந்த காட்டில்
மனிதனைப் பார்த்த
மரங்களுக்கு

– வலங்கைமான் நூர்தீன்

****

எனக்கென்று தனியே
கூடின்றி அலையும்
குயிலினம் நான்…
என் குரல் இனிமையென
திமிர்கொண்டு கூவாத வரையில்
பத்திரமாய் இருந்துகொள்ளலாம்
காக்கையின் கூட்டில்…
கூவுதலோ கரைதலோ
தனித்தனியே அழகு
தத்தமது வரம்பில்…

– உதயகுமார்

****

பட்டம் தயாராகும் முன்பே
பறக்கத் துவங்கும்
குழந்தை

– கீ.சார்லஸ்

****

உற்பத்திக்கு தடையில்லை
விற்பனைக்கு தடை
விந்தையானது எங்கள்
இந்தியச்சட்டம்

– கவிதைநேசன்

****

பேய்மழை
பேய்மழை
என வசவாதீர் – அது பெய்யாமல்
போய்
பேய் போலே
பொய்யாகிவிடும்.

– பாடுவாசி

****

2014 ஜூன் சஞ்சிகையில் வெளியான படைப்பு

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s