மரம் நடுதல் – ஒரு வழிபாடு

10309644_727130440685246_3816249384598550063_nமண்ணில் ஆழப்பதிந்து இருக்கும் மரத்தின் வேர்கள் வாழ்வின் மேன்மையை எப்போதும் உணர்த்தியபடியே இருக்கின்றன. மண்ணில் முகம் மறைத்த வேர்கள் ஒருபோதும் வெளியே தெரிவதில்லை. கிளைகளின் நரம்புகளுக்கு நீரை அனுப்புவதற்காக வேர்முனைகள் போர் வீரர்களைப் போல் வேலை செய்து கொண்டே இருக்கின்றன.

பல தலைமுறைகள் தாண்டி எரிக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் நிமிர்ந்து நிற்கும் மரங்களின் பின்னே நமது முன்னோர்களும், மூத்த குடிகளும் வேர்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் இயற்கையின் ஆயுள் ரேகை படிந்து இருக்கின்றன. காற்றின் மூலக்கூறுகளும் கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே.

வாழ்ந்து மடிந்து போன நம் மூத்த குடிகளின் முகச் சுருக்கங்களை இன்று உயிரோடு இருக்கும் ஒவ்வொரு மரத்திலும், அதன் தடித்த மரப்படைகளின் மடிப்புகளில் நாம் பார்க்கிறோம். காலம் காலமாய் கடந்து போன மழைக்காலமும், மழை பொய்த்த பருவக்காலங்களும் வட்ட வட்டமாய் தன வடுக்களை தண்டின் நடுப்பகுதியில் விட்டு சென்றிருக்கின்றன.

காடுகளில் சுள்ளி பொறுக்கப் போவோம். தேன் கூடு தேடி அலைந்து பிள்ளைகளுக்கு கொண்டு வந்து கொடுத்தோம். இலந்தை பழம் பொறுக்கி, நாவல் மரம் உலுக்கி ஊதி ஊதி தின்றோம். ஈச்சம் பழ குலை பறித்து முள் குத்த கைகள் சிவந்தோம். இளிப்பை பழம் உரித்து தின்று, பனம்பழ கொட்டை சப்பி பல்லெல்லாம் கூசிட பல்லிடுக்கில் நார் சிக்கிக் கொண்டது. மரத்தினைத் தழுவிட, தழுவிட ஏறி மகிழ்ந்தோம். கிளைகள் தாவினோம். இலைகள் பறித்து மருந்து கண்டோம். நோய் தீர்த்து ஆயுள் கூட்டினோம். இலைகள் பறித்து மருந்து கண்டோம். நோய் தீர்த்து ஆயுள் கூட்டினோம். பூக்கள் பறித்து மாலை சூடி, மனம் நுகர்ந்து, மகிழ்ந்து கிடந்தோம்.

ஓ… எம் மரங்களே… எம் மூத்த குடிகள் விட்டுச் சென்ற நிழலில் நாங்கள் இளைப்பாறி வருகின்றோம். நாளை எம் பிள்ளைகள் உன் மடியில் விளையாடி கிடப்பார்கள். புவியெல்லாம் மரங்கள் நடுவோம். மரங்கள் காடுகளாகும். மரத்தின் வேர்கள் மண்ணை இறுக அணைத்தபடி தழுவி கிடக்கும். மரத்தின் தடித்த பழுப்பு நிற மரப்பட்டைகளில் எங்கள் முகத்தினை எம் பிள்ளைகள் பார்ப்பார்கள்.

அவர்கள் கைகளில் ஒரு மரக்கன்று இருக்கும்.

– ரமேஷ் கருப்பையா.
mazhai5678@gmail.com

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s