புலிகளின் எண்ணிக்கை

புலிகள்இயற்கை பாதுகாப்பு சரவதேச சங்கம் (International Union for the Conservation of Nature) அழிந்து வரும் இனங்களில் புலிகள் உள்ளன என அறிவித்துள்ளது. சென்ற நூற்றாண்டில் ஒரு மில்லியன் புலிகள் இருந்தன. 2010ம் எடுத்த கணக்கெடுப்பின்படி 3200 புலிகளே உள்ளன. உலகில் தற்போது பங்களாதேஷ், பூடான், சீனா, கம்போடியா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபால், ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் என பதின்மூன்று நாடுகளில் மட்டுமே புலிகள் வாழ்ந்துவருகின்றன.

சமீபத்தில், பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் 2016ம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கையை கணக்கிட இந்நாடுகள் முடிவு செய்துள்ளன. வேட்டையின் காரணமாகவும், புலிகளின் வாழ்விடங்கள் குறைந்து வருவதாலும், சட்டவிரோத வன வர்த்தகங்களாலும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றன. புலிகளின் வாழ்விடத்தை பொதுவாக ‘டைகர் ரேஞ்ச்’ என்று அழைப்பார்கள். இவ்விடங்களில் நடைபெறும் புலிவேட்டை தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஜனவரி 2000 முதல் ஏப்ரல் 2014 வரை 1590 வேட்டையாடப்பட்ட புலிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலிகளின் இனப்பெருக்கம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும், டைகர் ரேஞ்ச் பகுதிகளிலும் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகமாகி வருவதாக கூறுகிறார் வாஷிங்டானில் உள்ள ஸ்மித்சானியன் கன்சர்வேஷன் பயலாஜி இன்ஸ்டியுட்டை சேர்ந்த ஜான் சீடின்ஸிடிகர். மிகப்பெரிய நிலக்கரி மின் ஆலையை அமைக்க சுந்தரவனக்காடுகளை எரித்து, அழித்துவருகிறது பங்களாதேஷ். இதனால் புலிகளின் வாழ்விடம் சுருங்கும் என இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்த ஆலை அமைக்கப்பட்டால் சுற்றியுள்ள பதினான்கு கிலோமீட்டருக்கு பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, நீர் நிலைகள் சீர்குலையும். இவற்றால் பல்லுயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்; புலிகளும் நீர்நிலைகள் இன்றி வாடும். இவற்றால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும். சுந்தரவன காடுகள் தனித்தனி பாகங்களாக மாறிவிடும். இவை புலிகளின் இனப்பெருக்கத்தை பெரிதும் பாதிக்கும் என வைல்ட்லைஃப் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவை சேர்ந்த வை.வீ. ஜாலா கவலை தெரிவிக்கிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s