உலகின் இயற்கையான பாரம்பரியத் தளங்கள் அழிவைச் சந்திக்கின்றன: ஆய்வு

இந்தியாவின் கியோலாடியோ தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் வனவிலங்கு சரணாலயம் உட்பட உலகின் நூற்றுக்கும் அதிகமான இயற்கையான பாரம்பரியத் தளங்கள் மனிதர்களின் தலையீடுகளால் கடுமையாக சேதமடைந்து வருகின்றன.

புதிய சாலைகள் அமைத்தல், நகரமயமாக்கல், தொழிற்துறை கட்டமைப்பு மற்றும் காடுகள் அழிப்பு போன்றவற்றால் மனிதர்களின் காலடித்தடங்களும் அவர்களின் பயன்பாடுகளும் உலகின் புராதன, பாரம்பரிய இடங்களை மெல்ல அழித்து வருகின்றன என்பதை ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்காவில் உள்ள வைல்ட்லைஃப் கன்சர்வேஷன் சொசைட்டியில் உள்ள ஆய்வாளர்கள் புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பா நீங்கலாக அனைத்து கண்டங்களிலும், கடந்த இருபது ஆண்டுகளில் நேச்சுரல் வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்ஸ் எனப்படும் உலகின் இயற்கையான, பாரம்பரிய இடங்களில் மனிதர்களின் காலடித்தளங்கள் 63% அதிகரித்துள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

3அசாமின் மனாஸ் வனவிலன்னு சரணாலயம், நேபாளத்தின் சித்வான் தேசியப் பூங்கா மற்றும் எத்தியோப்பியாவின் சிமென் தேசியப் பூங்கா ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

மனிதர்களின் மிக ஆதிக்கம் நிறைந்தப் பகுதியாக ராஜஸ்தானின் கியோலாடியோ தேசியப் பூங்கா திகழ்கிறது.

yellowstone_national_park_001காடு இழப்பு முறையில் கரீபியப் பகுதியின் ஹோண்டுராஸில் உள்ள ரியோ பிளாடானோ பையோஸ்பியர் ரிசர்வ், 2000ஆம் ஆண்டிலிருந்து அதன் காட்டுப் பகுதியில் 365 சதுர கிலோ மீட்டர்களை (8.5%) இழந்துள்ளது.
கொண்டாடப்படும் இடங்களில் ஒன்றான, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அதன் காட்டுப் பகுதியில் ஆறு சதவீதத்தை இழந்துள்ளது.

rio-platano-biosphere-forestreserveகனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைகளில் உள்ள வாட்டர்டன் கிளேசியர் சர்வதேச அமைதிப் பூங்கா  அதன் மொத்தக் காட்டுப் பகுதியில் கால் பகுதியை இழந்துள்ளது (540 சதுர கிலோ மீட்டர்களில் 23 சதவீதம்).

குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் ஆலன் கூறுகையில், “உலகின் இயற்கையான, பாரம்பரிய இடங்கள் முழுவதும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும். இருபது வருடங்களில் பத்து முதல் இருபது சதவீதம் வரை ஒரு பாரம்பரிய இடத்தில் குறைகிறது என்றால் அது அபாயத்தைக் குறிக்கிறது. அவற்றின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அர்த்தம் கொள்ள வேண்டும்.”

1413232-waterton_glacier_international_peace_park_canusa-north_americaமேலும், குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் வாட்சன், “உலகின் பாரம்பரிய இடமாக எது இடம்பெற்றிருந்தாலும் அது ஒட்டுமொத்த மானுடக் குலத்திற்கே பெரும் சொத்தாகும். உலகின் எந்த பாதுகாப்பு அரணும் தகர்க்கப்படக் கூடாது. இதுவரை பிரமிடுகள் இடிக்கப்பட்டு, அங்கே வீடுகளோ சாலைகளோ அமைக்கப்படவில்லை. ஆனால், உலகின் பல இயற்கையான பாரம்பரிய இடங்களை நாம் தீவிரமாக மாற்றிக் கொண்டே இன்னும் சொல்லப் போனால் திட்டமிட்டே அழித்து வருகிறோம்” என்று கவலை தெரிவிக்கிறார்.

இயற்கையான பாரம்பரிய இடங்களைப் பாதுகாக்க வேண்டும் என சர்வதேச சமூகம் இப்போது அரசுகளை நிர்பந்திக்க வேண்டிய நேரம் இது. அந்த இடங்களின் மதிப்பை வருங்காலத் தலைமுறைக்காக பாதுகாக்க வேண்டிய முக்கியத் தருணம் இது என ஜேம்ஸ் ஆலன் எச்சரிக்கிறார்.

பயாலாஜிக்கல் கன்சர்வேஷன் இதழில் வெளியான கட்டுரை.
மொழியாக்கம்: கோ.முருகராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s