கனிமொழி

“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்.” – குறள் “தமிழ் சப்ஜெக்ட் மட்டும் சரியா எழுதமாட்றான். துணைக்கால் மாத்திப்போடுறான். ன–ந, ல–ள, ர-ற மாத்தி எழுதுறான். டெஸ்ட் எழுதுறபோ சில வார்த்தை, செண்டன்ஸ், லைன்ஸ்லாம் விட்டுடுறான். ஒப்பிக்க சொன்னா, கரெக்டா சொல்லிடுறான்.  நீங்க ஸ்பெஷல் அட்டென்ஷன் கொடுங்க.” இப்படி எழிலின் டியுஷன் மிஸ் எழிலின் அம்மா கனிமொழியிடம் கூறி 2 மாசம் ஆகிவிட்டது. கனிமொழியும் தினமும் எழிலின் தமிழ் வீட்டுப்பாடம் எழுதும்போது கூட இருந்து … Continue reading கனிமொழி

பயணம்

பேருந்து கிளம்பியும் அவனது தொல்லை எல்லையின்றி போய் கொண்டிருக்கிறது. அவன் நிஜமாகவே போனில் பேசுகிறானா என்ற சந்தேகம் கூட அந்த பேருந்திலுள்ள அனைவருக்கும் இருந்தது. போக்குவரத்து நெரிசல் வதைப்பது போதாது என இவனும் வதைத்துக் கொண்டிருந்தான். "டேய் மச்சி நாளைக்கு தலைவர் படத்துக்கு புக் பண்ணிட்டேல...அப்படியே சாய்ந்திரம் ட்ரீட் யாருது..சரக்கிலாமலா..." என ஊரிலுள்ள நண்பர்கள் அனைவரைக்கும் வரிசையாக போன் போட்டு ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தான்.மன்னிக்கவும் அவன் பேசுவதாக நினைத்துக் கொண்டு மொத்தப் பேருந்திருக்கும் டமாரம் போட்டுக் கொண்டிருந்தான்.பெங்களூர் … Continue reading பயணம்

நிழல்கள்

புள்ளைங்க கூட்டம் சிட்டா பறந்து திரிஞ்சி போட்ட கூச்சலையும் மீறி பீறிட்டது கருப்பனோட தண்டோரா சத்தம். டும்....டும்....டும்.... இதனால் மக்களுக்கு சொல்லிக்கிறது என்னன்னா இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு நம்ம ஊரு மாரியம்மன் கோவிலுல பஞ்சாயத்து கூட இருக்குதுங்க சின்னவங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோரும் வந்து கூடனும்ங்க...இது ஊர் பெரியவங்க உத்தரவுங்கோ....என்று செவிட்டு கிழவிக்கும் செய்தி பரவுற விதத்துல கருப்பன் கத்துனான். “யாருக்குக்கா பஞ்சாயத்து?” “வேறயாருக்கு, நம்ம முருகேசன் மகனுக்குத்தான்” “அவனா!...அவன் சரியான கிறுக்குபயலாச்சே... அவனுக்கு … Continue reading நிழல்கள்

உறவுகள்

அடுப்படி. “எபினேசர் அக்காவுக்கு தனி டிஃபான் பாக்ஸ்ல வை, மா!” என்று சொல்லியபடி சர்க்கரைப் பொங்கலை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்தாள் காவ்யா. 9:10 மணிக்கு வரும் எலெக்ட்ரிக் டிரெயினைப் பிடிக்க இன்னும் 20 நிமிஷம் தான் இருந்ததால் கிளம்ப தயாரானாள். காவ்யா, அவள் அம்மா, அவள் தம்பி சூர்யா என மூவர் மட்டுமே வசிக்கும் அவர்களின் சிறிய வாடகை வீடு சென்னை குரோம்பேட்டையில் உள்ளது. காவ்யாவுக்கு சென்ற வாரம் தான் திருமணம் நிச்சயமாகியிருந்தது. தி.நகர் … Continue reading உறவுகள்

காரி

ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களிலும் துக்கம் அப்பிக் கிடந்தது. வயதான ஆண்கள் அழுகையை வாயில் துண்டை வைத்து அடக்கிக் கொண்டிருந்தனர். கிழவிகளும், பெண்களும் ஒப்பாரி வைத்து மாரடித்துக் கொண்டிருந்தனர். இளவட்டங்களோ தங்கள் நண்பனை இழந்தைப் போல துடிதுடித்து நின்றனர். இப்படி ஊரே உயிரற்றுப் போனது போலப் பரிதவித்துக் கிடந்தது. ஊரில் அன்று யாரும் வேலைவெட்டிக்குப் போகவில்லை. காரி இறந்த … Continue reading காரி